என் மலர்
சினிமா செய்திகள்
ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற மக்கள் இயக்க நிர்வாகிகளை, நடிகர் விஜய் நேரில் அழைத்து பாராட்டினார்.
தமிழகத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த 9 மாவட்டத்துக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தலில், விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் 110 இடங்களில் வெற்றி பெற்றனர். இவர்களின் இந்த வெற்றி அரசியல் வட்டத்தில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இத்தனைக்கும் தேர்தலில் தன் படமோ, கொடியோ பயன்படுத்தக்கூடாது என்று விஜய் கண்டிப்பாகக் கூறி, தடை போட்டிருந்தார்.
ஆனாலும் சோர்வடையாத விஜய் ரசிகர்கள் மக்களை வீடு வீடாக சென்று சந்தித்து ஆதரவு கேட்டனர். தேர்தலில் நின்ற பல நிர்வாகிகள் அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். தேர்தலில் வெற்றி பெற்ற மக்கள் இயக்க நிர்வாகிகளை அண்மையில் நேரில் அழைத்து பாராட்டினார் விஜய்.

மக்கள் இயக்க நிர்வாகிகளை நடிகர் விஜய் சந்தித்தபோது எடுத்த புகைப்படம்
அந்த சந்திப்பின் போது நடிகர் விஜய் சில அறிவுரைகளை வழங்கி உள்ளார். அவர்களிடம், “இது பதவி அல்ல பொறுப்பு என்பதை உணர்ந்து பொதுவாழ்வில் தூய்மையையும், நேர்மையையும் கடைப்பிடிக்க வேண்டும்” என்று விஜய் கூறியுள்ளார்.
ரஜினி நடிப்பில் உருவாகி உள்ள அண்ணாத்த திரைப்படம் வருகிற நவம்பர் 4-ந் தேதி தீபாவளி பண்டிகையன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் ‘அண்ணாத்த’. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார். இப்படத்தில் ரஜினியுடன் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, சூரி, சதீஷ், பிரகாஷ் ராஜ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இப்படம், வருகிற நவம்பர் 4-ந் தேதி தீபாவளி பண்டிகையன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

சிவா, ரஜினிகாந்த்
இந்நிலையில், சமீபத்தில் குடும்பத்தினருடன் ‘அண்ணாத்த’ படத்தைப் பார்த்த ரஜினியின் மகள் சௌந்தர்யா. படத்தைப் பற்றி தனது ஹூட் செயலில் போட்ட குரல் பதிவில், “படம் பார்த்துவிட்டு கண்களில் கண்ணீருடன் சிவா சாருக்கு நன்றி சொன்னேன்.
நீங்கள் செய்திருப்பது மேஜிக் என்பதையும் தாண்டி சொல்ல வார்த்தைகள் இல்லை. தலைவரும் - நீங்களும் மீண்டும் ஒரு படம் பண்ண வேண்டும்” என்று அவர் அந்த பதிவில் கூறியிருக்கிறார்.
ஹனு ராகவபுடி இயக்கத்தில் நிதின், மேகா ஆகாஷ், அர்ஜுன், ஸ்ரீகாந்த் நடிப்பில் வெளியாகி இருக்கும் ஜென்டில்மேன் சத்யா படத்தின் விமர்சனம்.
நாயகன் நிதின், உழைக்காமலே முன்னேற வேண்டும் என்கிற முனைப்புடன் இருக்கிறார். மேலும் வெளிநாட்டு பெண்ணை திருமணம் செய்தால், செட்டில் ஆகி விடலாம் என திட்டமிடுகிறார். இதேபோல் நாயகி மேகா ஆகாஷும், வெளிநாட்டுக்கு சென்று லாட்டரி மூலம் பணம் சம்பாதிக்க ஆசைப்படுகிறார்.
வெளிநாட்டில் வேலை பார்க்கும் மாப்பிள்ளையை கல்யாணம் செய்தால் தனது ஆசையை நிறைவேற்றிக் கொள்ளலாம் என திட்டமிடுகிறார். அந்த திட்டமெல்லாம் தோல்வியில் முடிகிறது. அந்த சமயத்தில் நாயகனும், நாயகியும் ஒன்றாக அமெரிக்கா செல்லும் சூழல் உருவாகிறது. அப்போது அவர்கள் இருவரிடையே காதல் மலர்கிறது.
மறுபுறம் பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வரும் வில்லன் அர்ஜுனை பிடிக்க போலீஸ் அதிகாரி ஸ்ரீகாந்த் தலைமையிலான குழு முயன்று வருகிறது. அர்ஜுன் அமெரிக்காவுக்கு தப்பிச் சென்று விடுகிறார். அவரை பிடிக்க ஸ்ரீகாந்த்தும் தன்னுடைய குழுவினருடன் அங்கு செல்கிறார்.

அமெரிக்காவில் அர்ஜுன் - ஸ்ரீகாந்த் இடையே நடக்கும் மோதலில் எதிர்பாராத விதமாக நிதின் சிக்குகிறார். இதையடுத்து என்ன ஆனது? அர்ஜுன் பிடிபட்டாரா? நிதின் - மேகா ஆகாஷ் இடையேயான காதல் என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிக்கதை.
நாயகன் நிதின், பொறுப்பற்ற இளைஞர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கதாபாத்திரத்தின் தன்மை உணர்ந்து நேர்த்தியாக நடித்துள்ளார். நாயகி மேகா ஆகாஷ், அழகு பதுமையுடன் அலட்டல் இல்லாத நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். போலீஸ் அதிகாரியாக வரும் ஸ்ரீகாந்த், கொடுத்த வேலையை கச்சிதமாக செய்துள்ளார். அர்ஜுன், ஸ்டைலிஷ் வில்லனாக மிரட்டி உள்ளார்.

இயக்குனர் ஹனு ராகவபுடி, கதாபாத்திரங்களை தேர்வு செய்துள்ள விதம் அருமை. விறுவிறுப்பு குறையாமல் திரைக்கதையை திறம்பட கையாண்டுள்ளார். லாஜிக் மீறல்கள் அப்பட்டமாக தெரிவது பின்னடைவு.
மணி சர்மாவின் இசையில் பாடல்கள் சுமார் ரகம் தான், இருப்பினும் பின்னணி இசை படத்திற்கு பலமாக அமைந்துள்ளது. யுவராஜின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளன.
மொத்தத்தில் ‘ஜென்டில்மேன் சத்யா’ கவர்கிறார்.
நடிகர் அஜித், தனது மகன் ஆத்விக் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் அஜித், தற்போது வலிமை படத்தில் நடித்து முடித்துள்ளார். எச்.வினோத் இயக்கியுள்ள இப்படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இப்படத்துக்கு இசையமைக்கிறார். இப்படத்தின் பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அடுத்தாண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை விடுமுறையில் இப்படம் வெளியாக உள்ளது.
வலிமை படத்தில் நடித்து முடித்த கையோடு பைக்கில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார் நடிகர் அஜித். வட மாநிலங்களில் அவர் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வந்தது.

மகன் ஆத்விக் உடன் அஜித்
இந்நிலையில், தற்போது நடிகர் அஜித், தனது மகன் ஆத்விக் உடன் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது. இந்த புகைப்படத்தில் ஆத்விக் ஹெல்மெட் அணிந்தபடி அஜித் அருகில் நிற்கிறார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் ஒருவரின் தங்கை தமிழ் திரையுலகில் நடிகையாக அறிமுகமாகி உள்ளார்.
நடிகை நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற பட நிறுவனத்தை தொடங்கி சில திரைப்படங்களை தயாரித்து வருகிறார். அந்த வகையில் அவர்கள் தயாரிக்கும் புதிய படம் ‘வாக்கிங்/டாக்கிங் ஸ்ட்ராபெரி ஐஸ்கிரீம்’. இப்படத்தை அறிமுக இயக்குனர் விநாயக் இயக்குகிறார்.
சூரரைப்போற்று படத்தில் சூர்யாவின் நண்பராக நடித்த கேகே, இப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார். அதேபோல் பிரபல பின்னணி பாடகி ஜோனிடா காந்தியும் இப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாக உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தீபக் சாஹர், மல்தி சாஹர்
இந்நிலையில், ‘வாக்கிங்/டாக்கிங் ஸ்ட்ராபெரி ஐஸ்கிரீம்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க மல்தி சாஹர் ஒப்பந்தமாகி உள்ளார். இவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் தீபக் சாஹரின் தங்கை ஆவார். இப்படம் மூலம் அவர் தமிழ் திரையுலகில் நடிகையாக அறிமுகமாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா, அடுத்ததாக பாலிவுட் படம் ஒன்றில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழில் ஆடுகளம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான டாப்சி, தொடர்ந்து அஜித்தின் ‘ஆரம்பம்’, லாரன்ஸுடன் ‘காஞ்சனா 2’, ஐஸ்வர்யா தனுஷ் இயக்கிய ‘வை ராஜா வை’ உள்ளிட்ட படங்களில் நடித்தார். இதையடுத்து பாலிவுட்டுக்கு சென்ற இவர், அங்கு வரிசையாக ஹிட் படங்களைக் கொடுத்ததன் மூலம் முன்னணி நடிகையாக உயர்ந்தார்.
தற்போது பாலிவுட்டில் பிசியான நடிகையாக வலம் வரும் டாப்சி, சமீபத்தில் பட தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கினார். சினிமாவில் சாதிக்க துடிப்பவர்களுக்கு தனது பட நிறுவனத்தில் வாய்ப்பளிக்க உள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

சமந்தா, டாப்சி
இந்நிலையில், நடிகை டாப்சி அடுத்ததாக தயாரிக்க உள்ள படத்தில் நடிகை சமந்தா ஹீரோயினாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படம் என்றும், இப்படம் மூலம் நடிகை சமந்தா பாலிவுட்டில் அறிமுகமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விஷ்ணு விஷால் நடித்துள்ள ‘எப்.ஐ.ஆர்’ படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
தமிழில் தனித்துவமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் விஷ்ணு விஷால். இவர் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள திரைப்படம் ‘எப்.ஐ.ஆர்’. அறிமுக இயக்குனர் மனு ஆனந்த் இயக்கும் இப்படத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், ரெபா மோனிகா ஜான் ஆகிய 3 ஹீரோயின்கள் நடித்துள்ளனர்.
இயக்குனர் கவுதம் மேனன் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அஷ்வந்த் இசையமைத்துள்ள இப்படத்திற்கு, கிருமி பட புகழ் அருள் வின்செண்ட் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனிடையே இப்படம் நேரடியாக ஓடிடி-யில் வெளியிடப்பட உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வந்தது.

விஷ்ணு விஷாலின் டுவிட்டர் பதிவு
இந்நிலையில், இதுகுறித்து விளக்கமளித்துள்ள நடிகர் விஷ்ணு விஷால், டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: “இது தவறான செய்தி. விரைவில் இப்படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும். ஒரு தயாரிப்பாளராகவும், நடிகராகவும், நான் இந்த படத்தை திரையரங்கில் வெளியிடவே விரும்புகிறன். சிறந்த திரையரங்க அனுபவத்தை கொடுக்கும் விதமாக இப்படத்தை உருவாக்கி இருக்கிறோம்” என அவர் கூறியுள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் மக்கள் அளிக்கும் வாக்குகள் அடிப்படையில் ஒவ்வொரு வார இறுதியில் வெளியேற்றுப் படலம் நடக்கும்.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமானது பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இதுவரை தமிழில் நான்கு சீசன்கள் முடிந்துள்ளன. தற்போது 5-வது சீசன் நடைபெற்று வருகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் விதிப்படி ஒவ்வொரு வார இறுதியில் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்படுவது வழக்கம். மக்கள் அளிக்கும் வாக்குகள் அடிப்படையில் இந்த வெளியேற்றுப் படலம் நடக்கும். அதன்படி இதுவரை நதியா சங், அபிஷேக் ராஜா ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

சின்னப்பொண்ணு
இந்நிலையில், இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறப்போவது யார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி குறைந்த வாக்குகள் பெற்றதன் காரணமாக பாடகி சின்னப்பொண்ணு வெளியேற்றப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நடிகர் ரஜினிகாந்த் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
சென்னை:
நடிகர் ரஜினிகாந்த் தாதா சாகேப் பால்கே விருதை கடந்த திங்கட்கிழமை டெல்லியில் சென்று பெற்றார். அதன்பின் மகள் செயலியை வெளியிட்டார். அதன்பின் அண்ணாத்த படத்தை தனது குடும்பத்தினருடன் பார்த்து ரசித்தார். படம் பார்த்த அடுத்த நாள் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
முதலில் வழக்கமான உடல் பரிசோதனைக்காக ரஜினி அனுமதிக்கப்பட்டதாக கூறப்பட்டது. பின்னர், அவருக்கு மூளைக்கு செல்லும் ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த அடைப்பை நீக்கும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இன்னும் சில நாட்களில் ரஜினி வீடு திரும்புவார் எனவும் கூறப்பட்டது.
இந்நிலையில், ரஜினிகாந்த் குணமடைந்து விரைவில் வீடு திரும்ப வேண்டும் என்று பிரார்த்தித்து வருவதாக கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வைரமுத்து அவரது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:-
காவேரி மருத்துவமனை நிறுவனர் டாக்டர் அரவிந்தனிடம் திரு. ரஜினியின் நலம் கேட்டேன்.
நாளுக்கு நாள் அவர் நலம் கூடிவரும் நம்பிக்கைத் தகவல்கள் என் நிம்மதியை மீட்டெடுத்தன.
உத்தமக் கலைஞனே
காற்றாய் மீண்டு வா
கலைவெளியை ஆண்டு வா
படையப்பா எழுந்து வா
பாட்ஷாபோல் நடந்து வா
வாழ்த்துகிறேன்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டிருந்தார்.
இதையும் படியுங்கள்...நேரில் சென்று ரஜினியிடம் நலம் விசாரித்தார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
புனித் ராஜ்குமாரின் உடல் கன்டீரவா ஸ்டூடியோவில் உள்ள அவரது பெற்றோர் நினைவிடம் அருகிலேயே 21 குண்டுகள் முழங்க அரசு முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
பெங்களூரு:
கன்னட திரை உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ‘பவர் ஸ்டார்’ புனித் ராஜ்குமார்(வயது 46) நேற்று முன்தினம் பெங்களூருவில் மாரடைப்பால் மரணம் அடைந்தார். இவர் மறைந்த கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார்-பர்வதம்மா தம்பதியின் இளையமகன் ஆவார். அவரது இந்த மரணம், அவரது குடும்பத்தினர், ரசிகர்கள், கன்னட மக்களை சோக கடலில் ஆழ்த்தியுள்ளது.
அதுமட்டுமின்றி ஒட்டுமொத்த இந்திய திரை உலகையும் அவரது மரணம் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, கவர்னர் கெலாட், கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் உள்பட அரசியல் கட்சிகளின் தலைவர்கள், கன்னடம் உள்பட இந்திய திரை உலக நட்சத்திரங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.
புனித் ராஜ்குமார் மரணம் அடைந்ததாக நேற்று முன்தினம் மதியம் 2.30 மணிக்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து விக்ரம் மருத்துவமனையில் இருந்து அவரது உடல் சதாசிவநகரில் உள்ள அவரது வீட்டிற்கு எடுத்து செல்லப்பட்டது. அங்கு புனித் ராஜ்குமாரின் உடலை பார்த்து குடும்பத்தினர் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். சுமார் 4 மணி நேரம் அவரது உடல் வீட்டில் வைக்கப்பட்டிருந்தது.
பின்னர் இரவு 7 மணியளவில் புனித் ராஜ்குமாரின் உடல் அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் கன்டீரவா மைதானத்திற்கு கொண்டு வரப்பட்டது. அங்கு அமைக்கப்பட்டிருந்த பந்தலில் அவரது உடல் பொதுமக்கள், ரசிகர்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. முதலில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை உள்பட மந்திரிகள் அஞ்சலி செலுத்தினர். அதைத்தொடர்ந்து ரசிகர்கள் நீண்ட வரிசையில் வந்து அஞ்சலி செலுத்தினர்.
மேலும் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள குக்கிராமங்களில் இருந்தும் ரசிகர்களும், பொதுமக்களும் பெங்களூருவை நோக்கி சாரை சாரையாக வந்த வண்ணம் இருந்தனர். இதனால் புனித் ராஜ்குமாரின் உடல் வைக்கப்பட்டு இருந்த கன்டீரவா மைதானம் முன்பு அலைகடலென மக்கள் கூட்டம் அலைமோதியது. அவர்கள் முண்டியடித்துக்கொண்டு மைதானத்திற்குள் செல்ல முயன்றனர். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மேலும் கூட்டத்தினரை ஒழுங்குப்படுத்த அவ்வப்போது போலீசார் தடியடி நடத்தினர்.
இருப்பினும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் விடிய, விடிய மாநிலத்தின் மூலைமுடுக்குகளில் இருந்து வந்த சிறுவர்கள், வாலிபர்கள், பெரியவர்கள், பெண்கள் என பல்வேறு தரப்பினரும் நீண்ட கியூ வரிசையில் நின்று புனித் ராஜ்குமார் உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். அங்கு குவிந்திருந்தவர்கள் அப்பு.... அண்ணா... என்று கண்ணீர்விட்டு கதறினர். பலர் புனித் ராஜ்குமாரின் உருவப்படங்களை கைகளில் ஏந்திய படி வந்து அஞ்சலி செலுத்தினர். அவ்வப்போது லேசான மழையும் பெய்தபடி இருந்தது. மழையையும் பொருட்படுத்தாமல் வரிசையில் நின்று அவர்கள், புனித் ராஜ்குமார் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.
அமெரிக்காவில் இருந்து அவரது மகள் துருதி, விமானம் மூலம் டெல்லி வந்து அங்கிருந்து மற்றொரு விமானத்தில் பெங்களூரு வந்து சேர்ந்தார். அவரை போலீசார் பாதுகாப்புடன் கன்டீரவா மைதானத்திற்கு அழைத்து வந்தனர். அங்கு தனது தந்தையின் உடலை பார்த்து அவர் கதறி அழுதார். இது அங்கிருந்த குடும்பத்தினர் மற்றும் தொலைக்காட்சியில் அதை நேரலையில் பார்த்து கொண்டிருந்த ரசிகர்களின் நெஞ்சை உருக்குவதாக இருந்தது.

கர்நாடக கவர்னர் தாவர்சந்த் கெலாட் நேரில் வந்து, புனித் ராஜ்குமாரின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக், போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா உள்பட மந்திரிகள் பலர் நேரில் வந்து இறுதி அஞ்சலி செலுத்தினர்.
அதைத்தொடர்ந்து சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, முன்னாள் முதல் மந்திரி எடியூரப்பா, தெலுங்கு நடிகர்கள் சிரஞ்சீவி, வெங்கடேஷ், நந்தமுரி பாலகிருஷ்ணா, ஜூனியர் என்.டி.ஆர்., ஸ்ரீகாந்த், அலி, தமிழ் நடிகர்கள் சரத்குமார், அர்ஜூன், பிரபுதேவா, நடிகைகள் ரம்யா, சுமலதா எம்.பி., ராதிகா குமாரசாமி, பவித்ரா லோகேஷ், ரஷிதா ராம், தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் உள்பட பல்வேறு நடிகர்-நடிகைகள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
இந்த நிலையில், அதிகாலை 4 மணிக்கு அவரது இறுதி ஊர்வலம் புறப்பட்டது. புனித் ராஜ்குமாரின் உடல் கன்டீரவா ஸ்டூடியோவில் உள்ள அவரது பெற்றோர் நினைவிடம் அருகிலேயே 21 குண்டுகள் முழங்க அரசு முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இதையும் படியுங்கள்...சர்வதேச விமான சேவைக்கு நவம்பர் 30 வரை தடை நீட்டிப்பு
நடிகர் புனித் ராஜ்குமார் உடலுக்கு மாநிலம் முழுவதிலும் இருந்து வந்த ரசிகர்கள், திரையுலகினர் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
பெங்களூரு:
கன்னட திரை உலகின் முன்னணி நடிகரான புனித் ராஜ்குமார் (46) நேற்று முன்தினம் பெங்களூருவில் மாரடைப்பால் மரணம் அடைந்தார். அங்குள்ள கன்டீரவா மைதானத்தில் அவரது உடல் பொதுமக்கள், ரசிகர்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
அங்கு அவரது உடலுக்கு கர்நாடக ஆளுநர் தாவர்சந்த் கெலாட், முதல் மந்திரி பசவராஜ் பொம்மை மற்றும் மந்திரிகள் அஞ்சலி செலுத்தினர்.
மேலும், மாநிலம் முழுவதும் இருந்து வந்த ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் புனித் ராஜ்குமாரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
புனித் ராஜ்குமாரின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என அம்மாநில அரசு தெரிவித்தது.
இந்நிலையில், நடிகர் புனித் ராஜ்குமாரின் இறுதி ஊர்வலம் இன்று அதிகாலை 4.45 மணியளவில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் ஹன்சிகாவின் நீச்சல் உடை புகைப்படத்திற்கு ரசிகர்கள் பல லைக்குகளை குவித்துள்ளனர்.
தமிழ் திரையுலகில் அறிமுகமான குறுகிய காலத்திலேயே, விஜய், சூர்யா, தனுஷ், சிம்பு போன்ற பிரபலங்களுக்கு ஜோடியாக நடித்து முன்னணி ஹீரோயினாக வலம் வந்தவர் ஹன்சிகா. இவர் தற்போது `மஹா' என்ற படத்தில் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள வேடத்தில் நடித்திருக்கிறார். இப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.

ஹன்சிகாவின் புதிய புகைப்படம்
இந்நிலையில், ஹன்சிகா தனது சமூக வலைத்தள பக்கத்தில் நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இதற்கு ரசிகர்கள் லைக்குகளை அள்ளிக்குவித்து இருக்கிறார்கள். இதுவரைக்கும் இந்த புகைப்படத்திற்கு 3 லட்சத்திற்கும் மேலான லைக்குகள் குவிந்துள்ளது.






