என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா, தன்னைப்பற்றி வரும் விமர்சனங்களை கண்டுக்கொள்ளாமல் அடுத்த படத்திற்கு தயாராகி வருகிறார்.
    நடிகை நயன்தாரா தனது அடுத்த படத்தின் வேலையில் தீவிரம் காட்டியுள்ளார். இதற்கிடையில் கூழாங்கல் படம் குறித்து இணையத்தில் வரும் கருத்துகள் நயன்தாராவை தர்மசங்கடத்திற்கு ஆளாக்கியுள்ளது. கூழாங்கல் படத்தை நயன்தாரா, விக்னேஷ் சிவன் தயாரிக்கவே இல்லை. 

    கடைசி நேரத்தில் ஆஸ்கர் தேர்வுக்குழுவிற்கு அனுப்ப போதிய பணம் இல்லாததால் அதற்கு வேண்டிய தொகையை விக்னேஷ் சிவன், நயன்தாரா கொடுத்ததாகவும் இதனால்தான் தயாரிப்பு என்று அவர்கள் கம்பெனியை போட வேண்டியதாகிவிட்டது என்று இணையத்தில் செய்திகள் பரவி வருகின்றன. 

    நயன்தாரா

    ஆனாலும் அந்த இக்கட்டான சூழலில் பணம் கொடுத்து உதவாவிட்டால் ஆஸ்கர் தேர்வுக்குழு கண்களுக்கே கூழாங்கல் படம் தெரியாமல் போயிருக்கும் என்பது உண்மை. ஆனால் இந்த விமர்சனங்களைப் பற்றிக் கவலைப்படாமல் அடுத்த படத்திற்காகத் தனது ஹேர் ஸ்டைலை மாற்றிக்கொண்ட புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டிருக்கிறார் நயன்தாரா.
    தமிழ், தெலுங்கு மொழி படங்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகை சமந்தா, பெற்றோர்களுக்கு அறிவுரை வழங்கி இருக்கிறார்.
    சமீபத்தில் கணவரை பிரிவதாக அறிவித்த சமந்தா, தற்போது வெளிநாட்டுக்கு சுற்றுப் பயணம் செய்து இருக்கிறார். தான் செல்லும் இடங்களில் இருந்து புகைப்படங்களை செய்து வரும் சமந்தா, சமூக வலைத்தளத்தில் நாக சைதன்யாவோடு இருந்த புகைப்படங்களை எல்லாம் நீக்கியுள்ளார். அதோடு பெண் பிள்ளைகளை வைத்திருக்கும் பெற்றோர்களுக்கு அறிவுரையும் சொல்லியிருக்கிறார்.

    அதில் உங்கள் மகள் யாரைத் திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்பதைப் பற்றி கவலைப்படுவதை விட்டுவிட்டு, உங்கள் மகளை வலிமையானவளாகத் தயார் செய்யுங்கள். அவளது திருமணத்திற்காகப் பணம் சேர்த்து வைப்பதற்குப் பதிலாக அவளது கல்விக்குச் செலவிடுங்கள்.

    சமந்தா

    முக்கியமாக அவளைத் திருமணத்திற்குத் தயார் செய்வதற்குப் பதிலாக அவளை அவளாகவே தயார் செய்து கொள்ளும்படி உருவாக்குங்கள். அவளுக்கு தன்னைத்தானே நேசிக்கவும் தன்னம்பிகையையை வளர்த்துக் கொள்ளவும் கற்றுக் கொடுங்கள் என்று குறிப்பிட்டிருக்கிறார் சமந்தா.
    பிரபு ஜெயராம் இயக்கத்தில் ஆர்.எஸ்.கார்த்திக், ரோகினி நடிப்பில் வெளியாகி இருக்கும் என்னங்க சார் உங்க சட்டம் படத்தின் விமர்சனம்.
    இரண்டாம் பாதியில் ஏழை பிராமணர் ஒருவர் டிஎன்பிஎஸ்சி இட ஒதுக்கீட்டில் வேலை கிடைக்காமல் அவஸ்தைப் படுகிறார். அதேநேரம் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டம் வந்தவுடன் கோயிலில் உள்ள உயர் சாதியினர் மனமுவந்து அவர்களுக்கு வேலை கொடுத்து விடுகிறார்கள்.

    அதிலும் உயர்ந்த குலத்தில் உள்ள ஏழைகள் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள். ஆனால், வேறு ஜாதியைச் சேர்ந்த பணக்காரர்கள் வேலைகளை பெறுகிறார். உயர் ஜாதி, தாழ்ந்த ஜாதி என்று இட ஒதுக்கீட்டில் பிரச்சனை ஏற்படுகிறது. கடைசியில் ஏழைக்கு இட ஒதுக்கீடு கிடைத்ததா? இல்லையா? ஏமாற்றப்பட்டாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    விமர்சனம்

    படத்தின் முதல் பாதியில் ஜாதி, மதம், காதல், காமெடி என கலகலப்பாக செல்கிறது. இரண்டாம் பாதியில் ஜாதி ரீதியாக ஏற்படும் இட ஒதுக்கீடு, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற கருத்து, கலவரம், சண்டை, பிரச்சனை என்று நகர்கிறது. இதை திறமையாக கையாண்டு இருக்கிறார் இயக்குனர் பிரபு ஜெயராம். முதல் படம் என்று தெரியாதளவிற்கு காட்சியிலும், திரைக்கதையிலும் தெளிவு படுத்தி இருக்கிறார். வேலை இட ஒதுக்கீட்டால் தற்போது ஏற்படும் நிலவரத்தை இயக்குனர் அழகாக சுட்டிக்காட்டி இருக்கிறார். கதாபாத்திரங்களிடையே திறமையாக வேலை வாங்கி இருக்கிறார்.

    விமர்சனம்

    படத்தில் நாயகன் ஆர்.எஸ்.கார்த்திக் பொறுப்பில்லாமல் பெண்கள் பின்னாடி சுற்றுவது, கேலி செய்வது, கிண்டல் செய்வது, பின் அவர்களை காதலித்து கழட்டி விடுவது என்று இருக்கிறார். இவரது நடிப்பு படத்திற்கு பலமாக அமைந்து இருக்கிறது. படத்தில் நான்கு ஹீரோயின்கள். அனைவரும் தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்கள். அனுபவ நடிப்பால் பளிச்சிடுகிறார் ரோகினி. 

    குணா பாலசுப்ரமணியம் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். குறிப்பாக ஜெகன் கவிராஜ் எழுதிய ஜீரக பிரியாணி பாடல் தாளம் போட வைக்கிறது. அருண் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது.

    மொத்தத்தில் ‘என்னங்கசார் உங்க சட்டம்’ சிறப்பு.
    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஷால், தனது நண்பர் ஆர்யாவை பற்றி எனிமி பட விழாவில் பேசி இருக்கிறார்.
    விஷால், ஆர்யா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘எனிமி’. ஆனந்த் சங்கர் இயக்கி இருக்கும் இப்படம் தீபாவளி தினத்தில் வெளியாக இருக்கிறது. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் விஷால் பேசும்போது, ‘என்னுடைய நல்ல நண்பர் கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் இறந்ததற்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொள்கிறேன். எனிமி தீபாவளிக்கு வருகிறது. 

    ஒவ்வொரு நாளும் நான் வீட்டுக்கு சந்தோஷமாக போகிறேன் என்றால் அதற்கு தயாரிப்பாளர் வினோத்குமார் தான் காரணம். எனக்கு ஒரு நல்ல ஒரு தயாரிப்பாளர் கிடைத்துள்ளார். அவர் பணத்தை மனதில் வைத்து படத்தை தயாரிக்கவில்லை. அவர் நினைத்திருந்தால் இந்த படத்தை ஓடிடிக்கு பெரிய விலைக்கு விற்றிருக்கலாம். ஆனால் ரசிகர்கள் தியேட்டரில் ரசிக்க வேண்டுமென படத்தை தியேட்டருக்கு கொண்டுவந்ததற்கே அவரை வணங்க வேண்டும். அவருடன் அடுத்து ஒரு படத்திலும் இணைகிறேன். 

    ஆனந்த் சங்கர் ஈகோ இல்லாத ஒரு மனிதர். அவர் முதலில் என்னிடம் கதை சொன்னபோது இந்தக்கதையில் ஜாமி (ஆர்யா) இருந்தால் நன்றாக இருக்கும், அவரது பாத்திரத்தை இன்னும் வலுவாக்கினால் நன்றாக இருக்கும் என்று சொன்னேன். அற்புதமான திரைக்கதையுடன் வந்தார். அவரது கற்பனை தான் இந்தப்படம். 

    ஆர்யா - விஷால்
    ஆர்யா - விஷால்

    ஆர்யாவிடம்.. உலகமே அழியப்போகிறது என்று சொன்னால், அசராமல் இரு சைக்கிளிங் முடித்து விட்டு வருகிறேன் என்று சொல்வார். எதையும் சீரியஸாக எடுத்து கொள்ள மாட்டார். இப்போது என்ன வென்று தெரியவில்லை திடீரென நன்றாக நடிக்க ஆரம்பித்து விட்டார். இந்தப்படத்தில் ஒரு சண்டைக்காட்சியில் நடிக்கும் போது, அப்போது தான் சர்பாட்டா நடித்துவிட்டு வந்தார். உண்மையிலேயே பாக்ஸிங் கற்றுக்கொண்டு வந்து என்னை அடி வெளுத்து விட்டான். ஏற்கனவே அவருடன் அவன் இவன் படத்தில் நடித்திருக்கிறேன். இந்தப்படமும் சூப்பராக இருக்கும்’ என்றார்.
    இயக்குநர் பாசில் ஜோசப் இயக்கத்தில் நடிகர் டோவினோ தாமஸ் நடிப்பில் உருவாகியுள்ள மின்னல் முரளி திரைப்படம் டிசம்பர் 24 ஆம் தேதி வெளியாகிறது.
    90களின் பின்னணியில் சாதாரண மனிதனாக இருந்து மின்னல் தாக்கியதன் மூலம் மாறிய சூப்பர் ஹீரோவாக மாறும் ஒருவனின் கதையை வைத்து மின்னல் முரளி என்ற படம் உருவாகியுள்ளது. மனித உணர்வுகளின் பல பக்கங்களை தொட்டுச்செல்லும் இத்திரைப்படம் பிரமாண்ட ஆக்சன் காட்சிகளும் விழாக்காலத்தில் குடும்பங்கள் இணைந்து ரசிக்கும் படமாக உருவாகியுள்ளது.

    இத்திரைப்படம் மலையாள இளம் நடிகர் டோவினோ தாமஸ் இதுவரை திரையில் தோன்றியிராத மாறுபட்ட தோற்றத்தில் சூப்பர் ஹீரோவாக நடித்துள்ளார். இவர் பல திறமை வாய்ந்த நடிகர்களான குரு சோமசுந்தரம், ஹரிஸ்ரீ அசோகன் மற்றும் அஜு வர்கீஸ் ஆகியோருடன் இணைந்து நடித்துள்ளார். 

    மின்னல் முரளி

    தற்போது இப்படத்தின் தமிழ் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. வீக்கெண்ட் ப்ளாக்பஸ்டர் நிறுவனத்தின் சார்பில், ஷோபியா பால் தயாரிக்க, பாசில் ஜோசப் இயக்கியுள்ள “மின்னல் முரளி” திரைப்படம் டிசம்பர் 24 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகிறது. மலையாள மொழியில் உருவாகியுள்ள இந்தப் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் ஆங்கில மொழில்களிலும் வெளியிடப்படவுள்ளது.
    மறைந்த பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் தனது கண்களை தானம் செய்ததன் மூலம் 2 பேருக்கு பார்வை கொடுத்து இருக்கிறார்.
    நடிகர் புனித் ராஜ்குமார் நேற்று மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவர் ஏற்கனவே கண்களை தானம் செய்திருந்தார். இதையடுத்து அவரது குடும்பத்தினர், நாராயணா நேத்ராலயா கண் மருத்துவமனை நிர்வாகத்தை தொடர்பு கொண்டு பேசி, உடனே வந்து புனித் ராஜ்குமாரின் உடலில் உள்ள கண்களை தானம் செய்வதாக கூறினர். 

    புனித் ராஜ்குமார்

    இதையடுத்து டாக்டர் புஜரங்கி தலைமையிலான குழுவினர் விக்ரம் மருத்துவமனைக்கு வந்து, புனித் ராஜ்குமாரின் கண்களை எடுத்து சென்றனர். அவரின் 2 கண்கள், 2 பேருக்கு பொருத்தப்படும் என்றும், 2 நாட்களுக்குள் இந்த பணி மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார். இதன் மூலம் புனித் ராஜ்குமார் இறந்த பிறகும் 2 பேருக்கு பார்வை கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
    நடிகர் புனித் ராஜ்குமார் மறைந்த செய்தியைக் கேள்விப்பட்டு ரசிகர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்த புனித் ராஜ்குமார், நேற்று காலை மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இவரது திடீர் மறைவு, ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் புனித் ராஜ்குமாரின் இறப்பு செய்தி கேட்டு ரசிகர்கள் உயிரிழந்து இருக்கிறார்கள்.

    கர்நாடகா மாநிலம், பெல்காம் நகரத்தைச் சேர்ந்தவர் ராகுல் (21). புனித் ராஜ்குமாரின் தீவிர ரசிகரான இவர் அவரது மறைவு செய்தியை கேள்விப்பட்டு அதிர்ச்சியடைந்துள்ளார். மேலும், இதனால் துக்கம் தாங்க முடியாமல் உயிரை விட துணிஞ்ச ராகுல் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.

    ரசிகர்கள்
    ரசிகர்கள்

    இதேபோல், புனித் ராஜ்குமார் மறைந்த அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு முனியப்பன், பரசுராம் என்ற ரசிகர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவங்கள் அப்பகுதி மக்களிடையே மேலும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    சொகுசுக்கப்பலில் போதைப்பொருள் விருந்து வழக்கில் கைது செய்யப்பட்ட ஆர்யன் கான் கடுமையான நிபந்தனைகளுடன் கூடிய ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.
    சொகுசுக்கப்பலில் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கடந்த அக்டோபர் 2ம் தேதி நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் கைது செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து, தனக்கு ஜாமீன் கோரி ஆர்யன் கான் சிறப்பு என்டிபிஎஸ் நீதிமன்றத்தில் இரண்டு முறை வழக்கு தொடர்ந்தார். இந்த இரண்டு வழக்குகளும் நிராகரிக்கப்பட்டது. இதனால் ஆர்யன் கான் மும்பை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

    ஆர்யன் கான்

    இதுகுறித்து விசாரணை நடத்திய உயர் நீதிமன்றம், ஆர்யன் கானுக்கு கடுமையான நிபந்தனைகளுடன் கூடிய ஜாமீன் நேற்று முன்தினம் உத்தரவிட்டது. இந்நிலையில், ஜாமீன் தொடர்பான சட்ட நடவடிக்கைகள் முடிவடைந்ததால் மும்பை ஆர்தர் சாலை சிறையில் இருந்து ஆர்யன் கான் இன்று வெளியே வந்தார்.
    பாலிவுட்டின் மூத்த நடிகரான யூசுப் உசைன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
    இந்தி திரையுலகில் தூம் 2, ராயீஸ், ரோட் டூ சங்கம், தபாங் 3, ஓ மை காட், ஐ எம் சிங் உள்பட ஏராளமான படங்களில் நடித்தவர் பிரபல நடிகர் யூசுப் உசைன்.  73 வயதான இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால், அவர் மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார்.

    இந்நிலையில், யூசுப் உசைனின் உடல்நிலையில் முன்னேற்றம் அடையாததை அடுத்து, இன்று சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

    இதுகுறித்த தகவலை யூசுப் கானின் மருமகனும், பட இயக்குனருமான ஹன்சல் மேதா தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்ததன் மூலம் உறுதிப்படுத்தினார்.

    மேலும், இதுகுறித்து அவர் வெளியிட்ட உணர்ச்சிகமான பதிவில் கூறியிருப்பதாவது:-

    நிதி பிரச்சனையால் ஷாஹிட் படம் வெளியிடுவதில் சிக்கல் இருந்தது. மிகவும் கஷ்டப்பட்டேன். கிட்டத்தட்ட என் தொழில் முடிவுக்கு வந்துவிட்டது என்று நினைத்தேன். அப்போது, அவர் (யூசுப்) என்னை அழைத்து ஃபிக்சட் டெப்பாசிட்டில் பணம் வைத்திருக்கிறேன். நீ இவ்வளவு சிரமப்படும்போது அந்த பணம் இருந்து எந்தப் பயனும் இல்லை என்று கூறி காசோலை வழங்கினார். அப்படி தான் ஷாஹிட் படம் வெளியானது.

    அவர் எனக்கு மாமனார் இல்லை நல்ல தந்தை.  இன்று அவர் மறைந்துவிட்டார். நான் அனாதையாக இருப்பது போன்று உணர்கிறேன். வாழ்கை எப்போதும் ஒரே மாதிரியாக இருக்காது. நான் உங்களை மிகவும் மிஸ் பண்றேன்" என்றார்.

    மேலும், யூசுப் உசைனின் மறைவுக்கு அபிஷேக் பச்சன், நடிகர் மனோஜ் பாஜ்பயி, நடிகையும் இயக்குனருமான பூஜா பட் உள்ளிட்டோர் தங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர். யூசுப் உசைனின் மரணம் பாலிவுட் திரையுலகத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
    ராக்லைன் வெங்கடேஷ் தயாரிப்பில், தனது அண்ணன் நடிக்க திரைப்படத்தை இயக்கவேண்டும் என்று தனது நண்பர்களிடம் புனித் ராஜ்குமார் கூறிவந்துள்ளார்.
    மறைந்த நடிகர் புனித் ராஜ்குமார் 1976-ம் ஆண்டில் திரைப்படத்துறையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். பின்னர், இளைஞரானது முதல் புனித்ராஜ்குமார் தொடர்ந்து திரைப்படத்தில் வந்தார்.

    புனித் ராஜ்குமார்

    இளைஞராக இருக்கும்போது முதல் நேற்று வரை புனித்ராஜ்குமாருக்கு ஒரு ஆசை இருந்து வந்தது. தனது அண்ணனான சிவராஜ் குமார் நடிக்கும் திரைப்படத்தை இயக்கவேண்டும் என்று புனித் ராஜ்குமாருக்கு நீண்ட நாட்களாக ஆசை இருந்து வந்தது.

    ராக்லைன் வெங்கடேஷ் தயாரிப்பில், தனது அண்ணன் நடிக்க திரைப்படத்தை இயக்கவேண்டும் என்று தனது நண்பர்களிடம் புனித் ராஜ்குமார் கூறிவந்துள்ளார். ஆனால், அவர் தற்போது திடீரென இறந்து விட்டதால், இயக்குனராக வேண்டும் என்ற புனித் ராஜ்குமாரின் ஆசை நிறைவேறாமல் போனது குறிப்பிடத்தக்கது.
    ரஜினிகாந்த் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று பலரும் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து வருகிறார்கள்.
    சென்னை:

    நடிகர் ரஜினிகாந்த் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ரத்த நாளத்தில் ஏற்பட்ட பாதிப்பு தொடர்பாக ரஜினிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் வேகமாக குணமடைந்து வருவதாகவும், ஒருசில நாட்களில் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவார் என்றும் மருத்துவமனை நிர்வாகம் கூறியிருக்கிறது.

    ரஜினிகாந்த் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று பலரும் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து வருகிறார்கள்.

    இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் தலைவரும் நடிகருமான கமல் ஹாசன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் என் இனிய நண்பர் ரஜினிகாந்த் விரைவில் குணமடைந்து பூரண நலமுடன் வீடு திரும்ப வேண்டுமென விரும்புகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.
    அப்பு என்.பட்டாத்ரி இயக்கத்தில் குஞ்சகோ போபன், நயன்தாரா, இஸின் ஹஷ், லால் நடிப்பில் வெளியாகி இருக்கும் மாய நிழல் படத்தின் விமர்சனம்.
    மலையாளத்தில் கடந்த சில மாதங்களில் திரையரங்குகளிலும் ஓடிடிகளிலும் பல த்ரில்லர் படங்கள் வெளியாக ஆரம்பித்திருக்கின்றன. அந்த வரிசையில் இந்த நிழல் படத்தையும் வைக்கலாம். ஏற்கனவே திரையரங்கில் வெளியாகி விட்டாலும் தற்போது அமெஸானில் வெளியாகியிருக்கிறது இந்தப் படம்.

    நீதிபதியாக இருக்கும் குஞ்சகோ போபன் ஒரு விபத்தில் சிக்குகிறார். இந்த விபத்தால் ஏற்பட்ட மன நல பாதிப்புகளில் இருந்து மீண்டு கொண்டிருக்கும்போது நிதின் என்ற சிறுவனின் அறிமுகம் அவருக்கு கிடைக்கிறது. 6-7 வயதே ஆகும் அந்தச் சிறுவன் கொலை கதைகளைச் சொல்கிறான். அந்தக் கொலைகள் பல ஆண்டுகளுக்கு முன்பாக நடந்தவையாக இருக்கின்றன.

    விமர்சனம்

    அந்தக் கொலைகள் குறித்து அந்தச் சிறுவனுக்கு எப்படித் தெரிந்தது என்ற புதிரை விடுவிக்க முயல்கிறார் குஞ்சகோ போபன். ஆனால், அதற்குப் பிறகுதான் ஒன்றின் பின் ஒன்றாக பல அதிர்ச்சிகரமான சம்பவங்கள் நடக்கின்றன. இறுதியில் குஞ்சகோ போபன் கொலைகள் பற்றிய புதிரை கண்டுபிடித்தாரா? அதிர்ச்சிகரமான சம்பவங்கள் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.

    படத்தின் நாயகனாக வரும் குஞ்சக்கோ போபனுக்கு எந்த அலட்டலும் இல்லாமல் சிறப்பான நடிப்பை கொடுத்து இருக்கிறார். இவருக்கு அடுத்தபடியாக படத்தில் கலக்கியிருப்பது சிறுவன் நிதினாக வரும் இஸின் ஹஷ். நிதினின் தாய் ஷர்மிளாவாக வரும் நயன்தாராவுக்கு பெரிய சவாலான கதாபாத்திரமில்லை. இருப்பினும் கொடுத்த வேலையை சிறப்பாகவே செய்திருக்கிறார். 

    விமர்சனம்

    சாதாரணமான ஒரு சைக்கோ திரில்லராகத் துவங்கி, பேய்க் கதையைப் போல மாறி, மீண்டும் சைக்கோ திரில்லராகவே இந்த படம் முடிகிறது. பேய்ப் படங்களில் வருவதைப் போல, ஒன்றிரண்டு திகில் காட்சிகள் வைத்து மிரள வைத்திருக்கிறார்கள். அதே நேரத்தில் அமைதியாக அமர்ந்து ரசிக்கக்கூடிய நல்ல சைக்கலாஜிகல் திரில்லராக படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் அப்பு என்.பட்டாத்ரி.

    சூரஜ் எஸ் குருப் இசையும், தீபக் டி மேனனின் ஒளிப்பதிவும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

    மொத்தத்தில் ‘மாய நிழல்’ நிஜ திரில்லர்.
    ×