என் மலர்
- தமிழில் அம்பிகாபதி என்ற பெயரில் வெளியானது.
- படம் 7 நாட்களில் உலகளவில் ரூ.118.76 கோடி வசூல் செய்திருந்தது.
பாலிவுட்டில் 'ராஞ்சனா' மற்றும் 'அட்ராங்கி ரே' போன்ற படங்களை இயக்கிய பிரபல பாலிவுட் இயக்குனர் ஆனந்த் எல் ராய்யின் படத்தில் தனுஷ் நடித்துள்ளார்.
பாலிவுட்டில் இயக்குனர் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் தனுஷ், சோனம் கபூர் நடிப்பில் கடந்த 2013 இல் வெளியாகி வரவேற்பை பெற்ற படம் 'ராஞ்சனா'. தமிழில் அம்பிகாபதி என்ற பெயரில் வெளியானது. படத்தில் ஏஆர் ரகுமான் இசையில் இடம்பெற்ற ஒவ்வொரு பாடலும் ஒரு கிளாசிக்.
இந்நிலையில் தனுஷ் - ஆனந்த் எல் ராய் - ஏஆர் ரகுமான் கூட்டணியில் புதிதாக உருவாகி உள்ள படம் "தேரே இஸ்க் மேன்" (Tere Ishk Mein).
இதுவும் ராஞ்சனா போலவே காதல் படமாக அமைந்துள்ளது. இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை கிரித்தி சனோன் நடித்துள்ளார். கடந்த வாரம் வெளியான இப்படம் பாலிவுட்டில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தனுஷின் நடிப்பிற்கு ரசிகர்களிடம் பாராட்டுக்கள் கிடைத்து வருகிறது.
படம் 7 நாட்களில் உலகளவில் ரூ.118.76 கோடி வசூல் செய்திருந்தது. இந்நிலையில், 'தேரே இஷக் மெய்ன்' படம் 10 நாட்களில் ரூ.141.86 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
- ரஜினியின் 50வது வருடத்தை கொண்டாடும் விதமாக அவரது பிறந்தநாள் அன்று ரீரிலீஸ் செய்யப்பட இருக்கிறது.
- முதல் பாகத்திலேயே நீலாம்பரி கதாபாத்திரத்துக்கு அதிக வரவேற்பு கிடைத்தது.
கடந்த 1999-ம் ஆண்டு கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான படம் தான் படையப்பா. சிவாஜி கணேசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த இந்த படத்தில், ரஜினிகாந்த், மறைந்த நடிகை சௌந்தர்யா, வில்லியாக ரம்யா கிருஷ்ணன், நாசர், செந்தில், ரமேஷ் கண்ணா, லட்சுமி, ராதாரவி, உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
இந்த படத்திற்கு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். படத்தில் அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
இந்நிலையில் இப்படம் திரைத்துரையில் ரஜினியின் 50வது வருடத்தை கொண்டாடும் விதமாக அவரது பிறந்தநாள் அன்று ரீரிலீஸ் செய்யப்பட இருக்கிறது.
இதனை முன்னிட்டு படையப்பா படம் தொடர்பான தனது அனுபவங்களை ரஜினிகாந்த் பகிர்ந்துகொள்ளும் வீடியோவை சௌந்தர்யா ரஜிகாநாத் பகிர்ந்துள்ளார்.
அதில் பேசிய ரஜினி, "முதல் பாகத்திலேயே நீலாம்பரி கதாபாத்திரத்துக்கு அதிக வரவேற்பு கிடைத்தது. தற்போது எல்லாமே 2.0 என எடுக்கிறார்கள். அதேபோல் ஏன் படையப்பா 2 எடுக்கக் கூடாது எனத் தோன்றியது.
நீலாம்பரி என்ற தலைப்பில் படையப்பா 2 படத்தை எடுக்க கதையை திட்டமிட்டு வருகிறோம். எல்லாம் சரியாக அமைந்தால், படம் நிச்சயமாக வரும். ரசிகர்களுக்கு விருந்தாக அமையும்" என்றார்.
- ரஜினியின் 50வது வருடத்தை கொண்டாடும் விதமாக அவரது பிறந்தநாள் அன்று ரீரிலீஸ் செய்யப்பட இருக்கிறது.
- தனது அனுபவங்களை பகிர்ந்துள்ளார் ரஜினிகாந்த்.
கடந்த 1999-ம் ஆண்டு கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான படம் தான் படையப்பா. சிவாஜி கணேசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த இந்த படத்தில், ரஜினிகாந்த், மறைந்த நடிகை சௌந்தர்யா, வில்லியாக ரம்யா கிருஷ்ணன், நாசர், செந்தில், ரமேஷ் கண்ணா, லட்சுமி, ராதாரவி, உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். படத்தில் அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
இந்நிலையில் இப்படம் திரைத்துரையில் ரஜினியின் 50வது வருடத்தை கொண்டாடும் விதமாக அவரது பிறந்தநாள் அன்று ரீரிலீஸ் செய்யப்பட இருக்கிறது. இதனை முன்னிட்டு அவர் பேசும் வீடியோ ஒன்று வெளியாகும் என அவரது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் தெரிவித்திருந்தார். அந்த வீடியோ நேற்றே (டிச.7) வரும் என எதிர்பார்த்திருந்த நிலையில் தாமதமானது. இந்நிலையில் வீடியோவை வெளியிட்டுள்ளார் சௌந்தர்யா ரஜினிகாந்த். அந்த வீடியோவில் படையப்பா படம் தொடர்பான தனது அனுபவங்களை பகிர்ந்துள்ளார் ரஜினிகாந்த்.
- ‘கருப்பு’ அடுத்த ஆண்டு ஜனவரியில் வெளியாகும் என கூறப்படுகிறது.
- இன்னும் சில மலையாள நடிகர்கள் படத்தில் இணைய உள்ளதாக தகவல்
சூர்யா நடிப்பில் கடைசியாக வெளியான படம் 'ரெட்ரோ'. இந்தப் படத்தை தொடர்ந்து ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் 'கருப்பு' படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. இதில் த்ரிஷா, மலையாள நடிகர் இந்திரன்ஸ், சுவாசிகா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். சாய் அபயங்கர் இசையமைக்கிறார். இந்தப் படம் அடுத்த ஆண்டு ஜனவரியில் வெளியாகும் என கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து 'வாத்தி', 'லக்கி பாஸ்கர்' உள்ளிட்ட படங்களை இயக்கிய வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடிக்கிறார். இதில் மமிதா பைஜூ நாயகியாக நடிக்கிறார். இதைத் தொடர்ந்து சூர்யா நடிக்கும் 47-வது படத்தை 'ஆவேஷம்' பட இயக்குநர் ஜித்து மாதவன் இயக்குகிறார். இதில் சூர்யா போலீசாக நடிக்கிறார். நஸ்ரியா ஜோடியாக நடிக்க உள்ளார். பிரேமலு படத்தில் நடித்த நஸ்லேன் உள்ளிட்டோர் இந்தப் படத்தில் நடிக்கவிருக்கிறார்கள், இந்தப் படத்திற்கு சுஷின் ஷ்யாம் இசையமைக்கிறார்.
இப்படத்தின் பூஜை சென்னையில் நேற்று நடந்தது. இந்நிலையில் இப்படத்தில் ஆவேஷம் புகழ் பிரணவ் ராஜ் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுதொடர்பான புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வில்லனாக அறிமுகமாகி, தற்போது ஒட்டுமொத்த திரையுலகையும் தன்னை சூப்பர் ஸ்டார் என அழைக்க வைப்பவர்தான் நடிகர் ரஜினி. ரஜினிகாந்த் திரையில் அறிமுகமாகி இந்தாண்டோடு ஐம்பது ஆண்டுகள் நிறைவடைந்தன. இதற்கு பல பிரபலங்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
இந்த திரைசாதனையை கொண்டாடும் வகையில், அவரது பிறந்தநாளான டிசம்பர் 12ஆம் தேதி, அவரது 'படையப்பா' படம் மீண்டும் திரையரங்குகளில் புதிய பொலிவுடன் திரையிடப்படுகிறது.
இந்த தகவலை சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருந்தார். மேலும் படையப்பா படம் தொடர்பான தனது அனுபவங்களை ரஜினி பகிர்ந்துகொள்ளும் ஒரு சிறப்பு க்ளிம்ப்ஸ் வீடியோவும் இன்று மாலை வெளியாகும் எனவும் தெரிவித்திருந்தார்.
ஆனால் வீடியோ வெளியாகவில்லை. இந்நிலையில் தொழில்நுட்ப கோளாறால் வீடியோ வெளியாக தாமதமாவதாக தெரிவித்துள்ளார். விரைவில் வீடியோ வெளியிடப்படும் எனவும் தெரிவிதார்.
ஆனால், ரசிகர்கள் நீண்ட நேரமாக எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த நிலையில், வீடியோ வெளியாகவே இல்லை. இந்த நிலையில், சௌந்தர்யா ரஜினிகாந்த் புதிய போஸ்டருடன் அப்டேட் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில்," படையப்பா படத்தின் மாயாஜாலத்தை மீண்டும் அனுபவிக்கும் வகையில், தலைவரின் பிரத்யேக வீடியோ இன்றிரவு 7 மணிக்கு வௌியாகும்" என குறிப்பிட்டுள்ளார்.
சுனாமியல் குடும்பத்தை இழந்த நாயகன் கௌதம் கண்ணகி நகரில் வசித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த தீபா உமாபதியை ஐந்து பேர் சேர்ந்து கடத்தி கற்பழித்து கொன்றதாக கௌதமுக்கு தகவல் கிடைக்கிறது. இதை அறிந்த கௌதம் அவர்களை பழிவாங்க திட்டம் போடுகிறார்.
இறுதியில் தீபாவிற்கு என்ன ஆனது? அந்த ஐந்து பேர் யார்? கௌதம் அவர்களை பழிவாங்கினாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
படத்தில் கதையின் நாயகனாக நடித்து இருக்கும் கௌதம், கண்ணகி நகர் மொழியை உள்வாங்கி, முக பாவனைகளில் வெளிப்படுத்துகிறார். நாயகியான தீபா உமாபதி எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். படத்தில் நடித்த மற்ற கதாபாத்திரங்கள் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார்கள்.
இயக்கம்
எல்லா உறவுகளையும் இழந்த பின்பு ஒரு மனிதனின் கடைசி முடிவு என்ன என்பதை மக்களுக்கு காட்டியிருகிறார் இயக்குனர் குணா. சென்னை தமிழ், கண்ணகி நகர், காட்சிப்படுத்திய விதம் அருமை. வலுவான காட்சிகள் இல்லாதது படத்திற்கு பலவீனம்.
இசை
தேவாவின் இசையில் பாடல்கள் படத்தின் முதுகெலும்பாக அமைந்திருக்கிறது. பின்னணி இசையை தேவையான அளவிற்கு கொடுத்து இருக்கிறார்.
ஒளிப்பதிவு
பா.மு.முஹம்மது ஃபர்ஹான் ஒளிப்பதிவு கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.
ரேட்டிங்- 2/5
- அவர் நடித்த முதல் படம் கிச்சா. அதனால் அவரை அவரது ரசிகர்கள் கிச்சா சுதீப் என அழைக்கிறார்கள்.
- இது கிச்சா சுதீப்பின் 47- வது படமாகும்.
கன்னட திரையுலகின் முன்னணி நடிகராக இருப்பவர் கிச்சா சுதீப். அவர் நடித்த முதல் படம் கிச்சா. அதனால் அவரை அவரது ரசிகர்கள் கிச்சா சுதீப் என அழைக்கிறார்கள். இவர் நடிகர் விஜய்யின் புலி, நானியின் 'நான் ஈ' ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
இவரது நடிப்பில் கடைசியாக வெளியான மேக்ஸ் திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இப்படத்தை விஜய் கார்த்திகேயா இயக்கினார்.
இந்நிலையில் கிச்சா மீண்டும் விஜய் கார்த்திகேயா இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். இது கிச்சா சுதீப்பின் 47- வது படமாகும். இந்த படத்திற்கு மார்க் என பெயரிடப்பட்டுள்ளது.
மேலும், இப்படம் வருகிற கிறிஸ்துமஸ் பண்டிகையில் வெளியாக உள்ளது.
இந்நிலையில், மார்க் படத்தின் டிரெய்லர் தற்போது படக்குழுவால் வெளியிடப்பட்டுள்ளது.
- அனில் ரவிபுடி அடுத்ததாக சிரஞ்சீவி நடிக்கும் 157 திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
- கேத்ரீன் தெரேசா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.
கடந்த ஜனவரி மாதம் வெங்கடேஷ், மீனாட்சி சவுத்ரி மற்றும் ஐஷ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியானது சங்கராந்திகி வஸ்துனம் திரைப்படம். இப்படத்தை அனில் ரவிபுடி இயக்கினார்.
இப்படம் வெளியாகி பிளாக்பஸ்டர் திரைப்படமாக அமைந்தது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அனில் ரவிபுடி அடுத்ததாக சிரஞ்சீவி நடிக்கும் 157 திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
படத்திற்கு மன ஷங்கர வரபிரசாத் என தலைப்பு வைத்துள்ளனர். படத்தின் நாயகியாக நயன்தாரா நடிக்கிறார். கேத்ரீன் தெரேசா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். படத்தை சாகு கரபதி மற்றும் சுஷ்மிதா கொனிடேலா தயாரிக்கின்றனர்.
இந்த படத்தின் முதல் பாடல் "மீசால பில்லா" அண்மையில் வெளியாகி வைரலானது. இந்நிலையில் 2வது பாடலான
"சசிரேகா" தற்போது வெளியாகி உள்ளது.
இப்பாடலை பீம்ஸ் செசிரோலியொ மற்றும் மது பிரியா ஆகியோர் பாடியுள்ளனர். இப்படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என்று கூறப்படுகிறது.
ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாகிறார் கதையின் நாயகன் நிவாஸ் ஆதித்தன். ஒரு கட்டத்தில் ஆன்லைன் ஆப் மூலம் கடன் வாங்குகிறார். இதனால், எதிர்பாராத விபரீதத்தை சந்திக்கிறார்.
இந்த கடனில் சூழல் என்ன ?, அதில் இருந்து அவர் தப்பித்தாரா? இல்லையா? என்பது படத்தின் மீதிக்கதை..
நடிகர்கள்
கதையின் நாயகன் நிவாஸ் ஆதித்தன், உணர்வுப்பூர்வமாக நடித்துள்ளார். அளவாக நடித்து தனது கதாபாத்திரத்திற்கும், திரைக்கதைக்கும் பலம் சேர்த்திருக்கிறார். மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அபிநய், நாயகனுக்கு இணையாக கவனம் ஈர்க்கிறார்.
ஆத்விக், எஸ்தர் ஆகியோரின் நடிப்பு படத்திற்கு கூடுதல் பலம்.
இயக்கம்
ஒரு சம்பவத்தின் மூலம் பல உண்மைகளை சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குநர் அபிஷேக் லெஸ்லி. உண்மை சம்பவத்தின் பின்னணியில், அதிர்ச்சிகரமான கற்பனை மூலம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்த முயற்சிக்கிறார். ஆங்காங்கே படத்தின் ஓட்டத்தில் வரும் தொய்வு படத்திற்கு பலவீனம். கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.
இசை
படத்தின் பின்னணி இசை பாராட்டக்கூடியது.
ஒளிப்பதிவு
ஒளிப்பதிவாளர் சபரி நேர்த்தியாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.
ரேட்டிங்- 1.5/5
- வில்லனாக அறிமுகமாகி, தற்போது ஒட்டுமொத்த திரையுலகையும் தன்னை சூப்பர் ஸ்டார் என அழைக்க வைப்பவர்
- விரைவில் க்ளிம்ஸ் வீடியோ வெளியாகும்
வில்லனாக அறிமுகமாகி, தற்போது ஒட்டுமொத்த திரையுலகையும் தன்னை சூப்பர் ஸ்டார் என அழைக்க வைப்பவர்தான் நடிகர் ரஜினி. ரஜினிகாந்த் திரையில் அறிமுகமாகி இந்தாண்டோடு ஐம்பது ஆண்டுகள் நிறைவடைந்தன. இதற்கு பல பிரபலங்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். இந்த திரைசாதனையை கொண்டாடும் வகையில், அவரது பிறந்தநாளான டிசம்பர் 12ஆம் தேதி, அவரது 'படையப்பா' படம் மீண்டும் திரையரங்குகளில் புதிய பொலிவுடன் திரையிடப்படுகிறது.
இந்த தகவலை சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருந்தார். மேலும் படையப்பா படம் தொடர்பான தனது அனுபவங்களை ரஜினி பகிர்ந்துகொள்ளும் ஒரு சிறப்பு க்ளிம்ப்ஸ் வீடியோவும் இன்று மாலை வெளியாகும் எனவும் தெரிவித்திருந்தார். ஆனால் வீடியோ வெளியாகவில்லை. இந்நிலையில் தொழில்நுட்ப கோளாறால் வீடியோ வெளியாக தாமதமாவதாக தெரிவித்துள்ளார். விரைவில் வீடியோ வெளியிடப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
- அம்பிகா அனுபவ நடிப்பை வழங்கியுள்ளார்
- நாடக வடிவில் நகர்கிறது படம்.
கட்டுமான நிறுவனம் ஒன்றில் முதன்மை பொறியாளராக பணியாற்றுகிறார் படத்தின் நாயகி சாக்ஷி அகர்வால் (சாரா). சாராவுக்கும், அங்கு பணியாற்றும் மற்றொரு பொறியாளர் விஜய் விஷ்வாவுக்கும் காதல் மலர்கிறது. காதலுக்கு சாராவின் பெற்றோரும் ஒப்புதல் அளித்தனர். இச்சூழலில் கட்டிடங்களுக்கு கலப்பட மணல் அனுப்பி ஏமாற்றும் வெட்டுக்கிளிக்கும் (மிரட்டல் செல்வா) சாராவுக்கும் பகை ஏற்படுகிறது.
இவர்களுக்கு மத்தியில் கட்டுமான நிறுவனத்தில் வாட்ச்மேனாக இருப்பவர் ரோபோ சங்கர். காசுக்காக எதையும் செய்பவர். அவருடைய நண்பன் யோகிபாபு. இவர்களின் அனைவரின் கேலி, கிண்டல்களுக்கு உள்ளாகி, மதிக்கப்படாமல் அந்த இடத்தை சுற்றி கொண்டிருக்கும் ஒரு நபர் செல்லக்குட்டி. இவர்கள் அனைவரும் வெட்டுக்கிளிக்கு உதவியாக சாரவைக் கடத்த முயல்கிறார்கள். ஆனால் இவர்களுக்கு முன்னால் செல்லக்குட்டி சாராவையும், அவளது காதலரையும் கடத்துகிறார். செல்லக்குட்டி ஏன் சாராவை கடத்தவேண்டும்? கல்யாணம் நடந்ததா? என்பதே மீதிக்கதை.
நடிப்பு
தனக்கான ரோலில் கட்சிதமாக நடித்துள்ளார் சாக்ஷி அகர்வால். விஜய் விஷ்வா, சில காட்சிகளோடு காணாமல் போகிறார். படத்தின் இயக்குநர் செல்லக்குட்டி, வாட்டர்மெலன் ஸ்டார் திவாகரையே மிஞ்சுகிறார் என பார்வையாளர்கள் விமர்சனம் செய்வதற்கு ஏற்றார்போல ஓவர்டோஸ் நடிப்பு. அம்பிகா அனுபவ நடிப்பை வழங்கியுள்ளார். யோகி பாபு, ரோபோ சங்கர், பழைய ஜோக் தங்கதுரை ஆகியோரின் காமெடி பரவாயில்லை. ஆனால் ஆபாச வசனங்களை தவிர்த்திருக்கலாம். இறுதியாக நாடக வடிவில் நகர்கிறது படம்.
இயக்கம்
இயக்குநர் செல்லகுட்டி, தான் சொல்ல நினைத்த கதையில் எப்படியோ பாதியை சொல்லிவிட்டார். பவர் ஸ்டார், நடிப்பு அரக்கன் என அனைத்து கோமாளிகளையும் தூக்கி சாப்பிடும் அளவுக்கு அதிரடியான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கும் செல்லகுட்டி, இயக்குநராக வெற்றி பெறவில்லை என்றாலும், ஒரு நடிகராக நிச்சயம் டிரெண்டாக வாய்ப்புள்ளது.
இசை
இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா இசையில் பாடல்களும், பின்னணி இசையும் பரவாயில்லை.
ஒளிப்பதிவு
ஒளிப்பதிவாளர் ஜெ.லக்ஷ்மன் குமார் கதைக்கு ஏற்ப காட்சிகளை படமாக்கியுள்ளார். படத்தொகுப்பாளர் ஜான் ஆபிரகாம் இயக்குநரின் கதையை சிதைக்காத வகையில் காட்சிகளை தொகுத்திருக்கிறார்.
இசையமைப்பாளரும் நடிகருமான ஜிவி பிரகாஷ்-ன் அடுத்த படத்தை அறிமுக இயக்குனரான மரியா ராஜா இளஞ்செழியன் இயக்குகிறார். அவர் பிரதீப் ரங்கநாதனின் 'லவ் டுடே' படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றியவர்.
இந்தப் படத்தில் ஜிவி பிரகாஷ்-க்கு ஜோடியாக ஸ்ரீ கௌரி பிரியா நடிக்கிறார். மேலும் இந்த படத்தின் மூலம் 11 வருடங்களுக்குப் பிறகு தமிழ் சினிமாவிற்கு அப்பாஸ் கம்பேக் கொடுக்கிறார். இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார்.
மேலும் இப்படத்தை பியாண்ட் பிக்சர்ஸ் (Beyond Pictures) நிறுவனம் தயாரிக்கிறது.
இந்த படத்தின் டைட்டில் போஸ்டரை படக்குழு இன்று வெளியிட்டது. படத்திற்கு ஹேப்பி ராஜ் என பெயரிடப்பட்டுள்ளது. இப்படம் ஒரு ரொமாண்டிக் காமெடி படமாக இருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
இன்று மாலை 'ஹாப்பி ராஜ்' படத்தின் First Look போஸ்டர் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில், நடிகர் துல்கர் சல்மான் ஹாப்பி ராஜ் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.








