என் மலர்
இது புதுசு
மஹிந்திரா நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய XUV700 மாடலை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளது.
மஹிந்திரா நிறுவனம் இந்திய சந்தையில் XUV700 மாடலை 2022 இரண்டாவது காலாண்டு வாக்கில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. முந்தைய தகவல்களில் இந்த மாடல் 2021 அக்டோபர் மாதத்தில் அறிமுகமாகும் என கூறப்பட்டது.
இந்தியாவில் அறிமுகமானதும், இந்த மாடல் தற்போது விற்பனை செய்யப்படும் XUV500 மாடலுக்கு மாற்றாக இருக்கும் என கூறப்படுகிறது. அந்த வகையில் XUV700 பல்வேறு புது அம்சங்கள், அதிநவீன தொழில்நுட்பங்களை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய மஹிந்திரா XUV700 நீண்ட வீல்பேஸ் கொண்டிருக்கும் என்றும் XUV500 மாடலை விட அளவில் பெரியதாக இருக்கும் என கூறப்படுகிறது. புதிய XUV700 மஹிந்திரா நிறுவனத்தின் சக்கன் ஆலையில் உற்பத்தி செய்யப்படுகிறது. இது உலகத்தரம் வாய்ந்த அம்சங்கள் நிறைந்த மாடலாக இருக்கும் என கூறப்படுகிறது.
அந்த வகையில் இந்த கார் லெவல் 1 ஆட்டோனோமஸ் தொழில்நுட்பம், ஆட்டோமேடிக் பார்க்கிங், லேன் சேன்ஜ் அசிஸ்ட் போன்ற அம்சங்கள் வழங்கப்படலாம். புதிய XUV700 6 மற்றும் 7 சீட்டர் ஆப்ஷன்களில் கிடைக்கும் என தெரிகிறது. இரு வேரியண்ட்களும் சவுகரியமான இடவசதியை வழங்கும்.
வோக்ஸ்வேகன் நிறுவனம் தனது டிகுவான் பேஸ்லிப்ட் மாடலை விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
வோக்ஸ்வேகன் நிறுவனம் இந்த ஆண்டு துவக்கத்தில் தனது நான்காவது எஸ்யுவி மாடலை அறிமுகம் செய்தது. டிகுவான் எஸ்யுவி மாடல் ஏற்கனவே இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. எனினும், சிறிது காலத்திற்கு இந்த மாடல் விற்பனையை நிறுத்தி, பின் புது தோற்றத்தில் இந்த மாடலை வோக்ஸ்வேகன் அறிமுகம் செய்தது.
தற்போது இந்த மாடலின் பேஸ்லிப்ட் வெர்ஷனை மே மாத வாக்கில் அறிமுகம் செய்ய வோக்ஸ்வேகன் திட்டமிட்டு இருந்தது. எனினும், புது மாடல் வெளியீட்டை வோக்ஸ்வேகன் அடுத்த மாதத்திற்கு ஒத்தி வைத்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

டிகுவான் பேஸ்லிப்ட் மாடலில் எல்இடி மேட்ரிக்ஸ் தொழில்நுட்பம் கொண்ட மெல்லிய ஹெட்லேம்ப்கள், கூர்மையாக காட்சியளிக்கும் கிரில், ரி-டிசைன் செய்யப்பட்ட பம்ப்பர், இதன் மத்தியில் ஏர் டேம் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் பம்ப்பரில் முன்புற சென்சார்கள் வழங்கப்படுகின்றன.
இந்த கார் 2.0 லிட்டர் டிஎஸ்ஐ என்ஜின் கொண்டிருக்கும். இது 190 பிஹெச்பி பவர், 320 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 4MOTION ஆல்-வீல் டிரைவ் சிஸ்டம், 7 ஸ்பீடு டிஎஸ்ஜி கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
கியா இந்தியா நிறுவனம் தனது காம்பேக்ட் எஸ்யுவி மாடலை மேம்படுத்தி அறிமுகம் செய்து இருக்கிறது.
கியா இந்தயா நிறுவனம் புதிய சொனெட் மாடலை அறிமுகம் செய்தது. புது சொனெட் துவக்க விலை ரூ. 6.79 லட்சம், எக்ஸ்-ஷோரூம் ஆகும். புது மாடலில் கியா நிறுவனம் பல்வேறு மாற்றங்களை செய்து இருக்கிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 13.25 லட்சம் ஆகும்.
2021 கியா சொனெட் மாடலில் கியா இந்தியாவின் புது லோகோ வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் இந்த மாடல் இரண்டு புது வேரியண்ட்களில் கிடைக்கிறது. இவை 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.7 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவற்றுடன் 7 ஸ்பீடு டிசிடி, 6 ஸ்பீடி ஏடி டிரான்ஸ்மிஷன் யூனிட் வழங்கப்படுகிறது.

இத்துடன் புது சொனெட் மாடலில் பேடில் ஷிப்டர்கள், வாய்ஸ் அசிஸ்ட் வசதி கொண்ட சன்ரூப், ரியர் விண்டோ சன்ஷேட் போன்ற அம்சங்களை கொண்டிருக்கிறது. பேடில் ஷிப்டர்கள் HTX 7DCT, GTX+ 7DCT பெட்ரோல், HTX AT, GTX + AT டீசல் வேரியண்ட்களில் வழங்கப்படுகிறது.
வாய்ஸ் அசிஸ்ட் சன்ரூப் வசதி டாப் எண்ட் மாடல்களான HTX+, GTX+ வேரியண்ட்களில் மட்டுமே வழங்கப்படுகிறது. ரியர் வியூ விண்டோ சன்ஷேட்கள் HTX, HTX+ மற்றும் GTX+வேரியண்ட்களில் கிடைக்கிறது.
ஹோண்டா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் 2022 சிவிக் மாடல் விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
ஹோண்டா நிறுவனம் தனது புது சிவிக் மாடல் புகைப்படங்களை வெளியிட்டது. 50 ஆண்டுகள் வரலாற்றில் மிகவும் அதிகநவீன அம்சங்கள் நிறைந்த மாடலாக ஹோண்டா சிவிக் இருக்கிறது. இதன் இந்திய வெளியீட்டுக்கு மேலும் சில காலம் காத்திருக்க வேண்டும் என்ற சூழலில் தற்போது இதன் படங்கள் வெளியிடப்பட்டு உள்ளன.

புது மாடல் முந்தைய வெர்ஷன்களை விட மிக எளிமையான டிசைன் கொண்டிருக்கிறது. இது மேன்-மேக்சிமம், மெஷின் மினிமம் என அழைக்கப்படுகிறது. புதிய கார் அளவில் 4673 எம்எம் நீளம், 1801 எம்எம் அகலம், 1415 எம்எம் உயரம், 2735 எம்எம் வீல்பேஸ் கொண்டுள்ளது.

இந்த மாடலில் புது எல்இடி ஹெட்லைட்கள், இன்டகிரேட் செய்யப்பட்ட எல்இடி டிஆர்எல்கள் வழங்கப்பட்டுள்ளன. பின்புறம் எல்இடி லைட்கள், 18 இன்ச் அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன. உள்புறம் புளோட்டிங் டச் ஸ்கிரீன் இன்போடெயின்மென்ட் யூனிட், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ போன்ற அம்சங்கள் உள்ளன.
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் புதிய EQS மாடல் அந்நிறுவன வலைதளத்தில் பட்டியலிடப்பட்டு இருக்கிறது.
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் எஸ் கிலாஸ் மாடலுக்கு இணையான EQS எலெக்ட்ரிக் எஸ்யுவியை அறிமுகம் செய்தது. எலெக்ட்ரிக் வாகனங்கள் பிரிவில் இந்த மாடல் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஒன்றாக இருந்து வந்தது. தற்போது இந்த மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் EQS அந்நிறுவனத்தின் வலைதளத்தில் பட்டியலிடப்பட்டு "Coming Soon" என குறிப்பிடப்பட்டு உள்ளது. EQS மாடல் மெர்சிடிஸ் நிறுவனத்தின் பிஸ்போக் பிளாட்பார்ம் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட முதல் மாடல் ஆகும். பென்ஸ் நிறுவனத்தின் EQE, EQE எஸ்யுவி மற்றும் EQS எஸ்யுவி மாடல்களும் இதே பிளாட்பார்மில் உருவாகின்றன.
இந்த கார் மணிக்கு 210 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் வகையில் கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது. இது ஒருமுறை சார்ஜ் செய்தால் 770 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டுள்ளது. இது 334 பிஹெச்பி பவர், 458 என்எம் டார்க் வழங்கும் திறன் கொண்டிருக்கிறது.
பஜாஜ் ஆட்டோ நிறுவனம் இந்திய சந்தையில் பல்சர் ஸ்பெஷல் எடிஷன் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்தது.
பஜாஜ் ஆட்டோ நிறுவனம் பல்சர் டேகர் எட்ஜ் எடிஷன் மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இதன் விலை ரூ. 1.02 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. டேகர் எட்ஜ் எடிஷன் பல்சர் 220எப், பல்சர் 180 மற்றும் பல்சர் 150 மாடல்களில் கிடைக்கிறது.
டேகர் எட்ஜ் எடிஷன் புது நிறங்களில் ஆன காஸ்மெடிக் அப்கிரேடுகளை பெற்று இருக்கிறது. டாப் எண்ட் பல்சர் 220எப் மாடல்- பியல் வைட், சபையர் புளூ, வொல்கானிக் ரெட் மற்றும் ஸ்பார்கிள் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 1.28 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

பல்சர் 180 டேகர் எட்ஜ் எடிஷன் மாடல் - பியல் வைட், வொல்கானிக் ரெட் மற்றும் ஸ்பார்கிள் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 1.10 லட்சம், எக்ஸ்-ஷோரூம் ஆகும்.
புதிய பஜாஜ் பல்சர் 150 டேகர் எட்ஜ் எடிஷன் மாடல் - பியல் வைட் மற்றும் சபையர் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இதன் டிஸ்க் மற்றும் டிரம் பிரேக் விலை முறையே ரூ. 1.02 மற்றும் ரூ. 1.05 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஓலா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அந்த மாதத்தில் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என தகவல் வெளியாகி உள்ளது.
ஓலா நிறுவனம் தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த மாடல் ஜூலை மாத வாக்கில் விற்பனைக்கு வரும் என ஓலா தெரிவித்து இருக்கிறது. முன்னதாக ஓலா நிறுவனம் ஹைப்பர்சார்ஜர் திட்டத்தை இந்தியாவில் செயல்படுத்த இருப்பதாக அறிவித்தது.
ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் 18 நிமிடங்களில் 50 சதவீதம் சார்ஜ் ஆகிவிடும். இதை கொண்டு ஸ்கூட்டரை அதிகபட்சம் 75 கிலோமீட்டர் வரை இயக்க முடியும். அந்த வகையில் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் சுமார் 150 கிலோமீட்டர் வரை பயணிக்க முடியும்.

மேலும் இந்த ஸ்கூட்டரை முழுமையாக சார்ஜ் செய்ய 60 நிமிடங்களே ஆகும். இந்தியாவில் செயல்படுத்தப்பட இருக்கும் ஹைப்பர்சார்ஜர் நெட்வொர்க் உலகிலேயே மிகவும் அதிக பகுதிகளில் செயல்படும் இருசக்கர வாகன சார்ஜிங் நெட்வொர்க் ஆக இருக்கும்.
ஒலா நிறுவனம் முதல் ஆண்டில் மட்டும் 400-க்கும் அதிக நாடுகளில் சுமார் 1 லட்சத்திற்கும் அதிக சார்ஜிங் பாயிண்ட்களை நிறுவ திட்டமிட்டு இருக்கிறது. முதற்கட்டமாக 5 ஆயிரத்திற்கும் அதிக சார்ஜ் பாயிண்ட்களை சுமார் 100 நகரங்களில் கட்டமைக்க இருக்கிறது.
ஸ்கோடா நிறுவனத்தின் அடுத்த தலைமுறை பேபியா மாடல் வரும் வாரங்களில் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
ஸ்கோடா பேபியா புதிய தலைமுறை மாடல் உருவாகி வருகிறது. இந்த மாடலின் டிசைன் வரைபடங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு இருக்கின்றன. நான்காவது தலைமுறை சூப்பர்மினி மாடல் வரும் வாரங்களில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய தலைமுறை ஸ்கோடா பேபியா வோக்ஸ்வேகன் குழுமத்தின் MQB-A0 பிளாட்பார்மில் உருவாகிறது. வரைபடங்களின் படி புதிய ஸ்கோடா கார் ஆக்டேவியா மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. புதிய மாடல் முந்தைய வேரியண்ட்களை விட அளவில் பெரியதாக இருக்கிறது.

மேலும் இதன் நீலம், அகலம் மற்றும் உயரம் என காரின் வெளிப்புறம் முழுக்க முந்தைய மாடலை விட பெரியதாகி இருக்கிறது. இந்த காரின் உள்புறமும் மாற்றங்கள் செய்யப்படும் என கூறப்படுகிறது. புதிய பேபியா மாடலில் 1.5 லிட்டர் டிஎஸ்ஐ, 1.0 லிட்டர் டிஎஸ்ஐ ஆப்ஷன் வழங்கப்படலாம்.
வரும் வாரங்களில் அறிமுகமாக இருக்கும் ஸ்கோடா பேபியா ஆண்டு இறுதியில் உற்பத்தி செய்யப்பட இருக்கிறது. புதிய பேபியா மாடலின் இந்திய வெளியீடு பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை.
2021 வோக்ஸ்வேகன் போலோ மாடல் 9.2 இன்ச் இன்போடெயின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி அம்சங்களை கொண்டுள்ளது.
வோக்ஸ்வேகன் நிறவனம் 2021 போலோ மாடலை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்தது. இது முந்தைய மாடலை விட அகலமாக இருக்கிறது. புது எல்டி டிஆர்எல்கள், மேம்பட்ட மெல்லிய முன்புற கிரில், புல் எல்இடி ஹெட்லேம்ப் உள்ளிட்டவை வழங்கப்படகிறது.
பின்புறம் 2-செக்ஷன் எல்இடி டெயில் லைட்கள் உள்ளன. இந்த கார் லைப், ஸ்டைல் மற்றும் ஆர் லைன் என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது. ஒவ்வொரு வேரியண்டிற்கு ஏற்ப 15 முதல் 16 இன்ச் அளவில் அலாய் வீல்கள் வழங்கப்படுகின்றன.

இதன் கேபின் 9.2 இன்ச் இன்போடெயின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி, புது ஸ்டீரிங் வீல், ப்ளூடூத் மொபைல் போன் இன்டர்பேஸ், ஹீட்டெட் மற்றும் எலெக்ட்ரிக் முறையில் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய ORVMகள் வழங்கப்பட்டு இருக்கின்றன.
புதிய 2021 வோக்ஸ்வேகன் போலோ 1.0 லிட்டர் மற்றும் 1.0 லிட்டர் டிஎஸ்ஐ என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல், 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 7 ஸ்பீடு டிஎஸ்ஜி யூனிட் வழங்கப்படுகிறது. புதிய போலோ மாடல் இந்திய வெளியீடு பற்றி இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை.
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் தனது புது எலெக்ட்ரிக் கார் கான்செப்ட் வெளியீட்டு தேதியை அறிவித்து இருக்கிறது.
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் கான்செப்ட் EQT மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது. தற்போது இந்த மாடலுக்கான டீசர் வெளியிடப்பட்டு இருக்கிறது. இந்த மாடல் டி கிளாஸ் வேன் மாடலின் எலெக்ட்ரிக் வெர்ஷன் ஆகும்.
மெர்சிடிஸ் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் பர்ஸ்ட் திட்டத்தின் கீழ் அடுத்த தலைமுறை சக்திவாய்ந்த டி கிளாஸ் மாடலாக புது EQT இருக்கும். மே 10 ஆம் தேதி அறிமுகமாகும் கான்செப்ட் EQT கிட்டத்தட்ட உற்பத்திக்கு தயார் நிலையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது EQ சீரிசில் EQA, EQB, EQC, EQV மற்றும் EQS போன்ற மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றன. இந்த வரிசையில் புதிதாக EQT இணைய இருக்கிறது. இதுதவிர EQE மாடல் ஒன்றும் விரைவில் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ஜிஎல்ஏ மாடலை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் 2021 ஜிஎல்ஏ மாடலை மே மாத வாக்கில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. முன்னதாக இதே ஆண்டில் இதுவரை ஜிஎல்சி, ஏ கிளாஸ் லிமோசின் மற்றும் இ கிளாஸ் பேஸ்லிப்ட் போன்ற மாடல்களை மெர்சிடிஸ் பென்ஸ் இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது.

அந்த வரிசையில் 2021 ஆண்டு இந்தியா வரும் நான்காவது பென்ஸ் மாடலாக புதிய ஜிஎல்ஏ வெளியாக இருக்கிறது. இந்த மாடல் சர்வதேச சந்தையில் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. புதிய ஜிஎல்ஏ மாடல் முந்தைய வேரியண்டை விட அசத்தலாக இருக்கிறது. இதன் உயரம் 10 செ.மீ. வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது.
புது மாடலில் ஒற்றை ஸ்லாட் கிரில், புது எல்இடி ஹெட்லேம்ப்கள், மெல்லிய ஸ்ப்லிட் எல்இடி டெயில் லேம்ப், மேம்பட்ட பம்ப்பர் உள்ளிட்டவை வழங்கப்பட்டு உள்ளன. இவை காருக்கு அசத்தலான எஸ்யுவி தோற்றத்தை வழங்குகிறது. காரின் உள்புறம் டூயல் ஸ்கிரீன் செட்டப் மற்றும் MBUX சிஸ்டம் வழங்கப்படலாம். 2021 மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்ஏ பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
ஷாங்காய் ஆட்டோ விழாவில் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் புதிய எலெக்ட்ரிக் மாடலை அறிமுகம் செய்தது.
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் தனது EQ சீரிசில் புது மாடலை அறிமுகம் செய்தது. கடந்த வாரம் EQS மாடல் அறிமுகமான நிலையில், தற்போது EQB அறிமுகம் செய்யப்பட்டது. ஆட்டோ ஷாங்காய் மோட்டார் விழாவில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய EQB முதற்கட்டமாக சீன சந்தையில் விற்பனைக்கு வருகிறது.
மெர்சிடிஸ் பென்ஸ் EQB மாடல் ஐரோப்பா மற்றும் அமெரிக்க சந்தையில் 2022 வாக்கில் விற்பனைக்கு வரும் என கூறப்படுகிறது. புதிய கார் GLB மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த காரின் உள்புறம் அகலமான புளோட்டிங் ஸ்கிரீன் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் MBUX சிஸ்டம் வழங்கப்படுகிறது.

புதிய பென்ஸ் எலெக்ட்ரிக் கார் முன்புறம் மற்றும் ஆல்-வீல் டிரைவ் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இத்துடன் 66.5kWh பேட்டரி பேக் வழங்கப்படுகிறது. இதில் உள்ள மோட்டார்கள் 270 பிஹெச்பி பவர் வழங்குகின்றன. இதன் ஏஎம்ஜி வேரியண்ட் 290 பிஹெச்பி வழங்குகிறது.
இந்த கார் ஒருமுறை சார்ஜ் செய்தால் 470 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டுள்ளது. இத்துடன் 11kW AC பாஸ்ட் சார்ஜர் வழங்கப்படுகிறது.






