என் மலர்
கார்
ஹூண்டாய் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய வென்யூ பேஸ்லிப்ட் மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய வென்யூ பேஸ்லிப்ட் மாடலும் மூன்று வித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கும்.
ஹூண்டாய் இந்தியா நிறுவனம் வென்யூ பேஸ்லிப்ட் மாடலை ஜூன் 16 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. அறிமுக நிகழ்வுக்கு முன் இந்த மாடலுக்கான முன்பதிவை சில விற்பனையாளர்கள் துவங்கி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இவை விற்பனையாளர்கள் தரப்பில் மேற்கொள்ளப்படுபவை ஆகும். ஹூண்டாய் தரப்பில் புதிய வென்யூ பேஸ்லிப்ட் மாடலுக்கான முன்பதிவு பற்றி இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை.
2022 ஹூண்டாய் வென்யூ பேஸ்லிப்ட் மாடலின் வெளிப்புற டிசைன் மாற்றப்பட்டு புது தோற்றம் கொண்டிருக்கும் என இதுவரை வெளியாகி இருக்கும் ஸ்பை படங்களில் தெரியவந்துள்ளது. அதன்படி இந்த மாடலில் குரோம் இன்சர்ட்கள் கொண்ட புதிய கிரில், முன்புறம் மற்றும் பின்புறம் புது பம்ப்பர்கள், புதிய அலாய் வீல்கள், ராப் அரவுண்ட் எல்.இ.டி. டெயில் லைட்கள், சில்வர் ஸ்கிட் பிலேட்கள் மற்றும் காண்டிராஸ்ட் கலர் ரூஃப் ரெயில்கள் வழங்கப்படுகின்றன.

புதிய ஹூண்டாய் பேஸ்லிப்ட் மாடலின் உள்புறம் பற்றி இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. எனினும், இந்த மாடலில் புது வகை இருக்கைகள், ரிவைஸ்டு டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமண்ட் கிளஸ்டர், 4 ஸ்போக் ஸ்டீரிங் வீல் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
புதிய வென்யூ பேஸ்லிப்ட் மாடலில் தற்போதைய வேரியண்டில் உள்ளதை போன்றே 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின், 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இத்துடன் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின், 6 ஸ்பீடு மேனுவல், iMT மற்றும் DCT டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இரு பெட்ரோல் என்ஜின்களுடன் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்படலாம்.
மஹிந்திரா நிறுவனம் புதிய ஸ்கார்பியோ N மாடலை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த மாடலுக்கான டீசர்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.
மஹிந்திரா நிறுவனம் புதிய ஸ்கார்பியோ N மாடலுக்கான உற்பத்தி பணிகள் ஜூன் மாதத்தில் துவங்கும் என அறிவித்து இருக்கிறது. தற்போது பிரீ-ப்ரோடக்ஷன் யூனிட்கள் ஆலையில் இருந்து வெளியேற்றப்பட்டு வரும் நிலையில், இதன் ப்ரோடக்ஷன் ரெடி வெர்ஷன் ஜூன் 27 ஆம் தேதி வெளியிடப்பட இருக்கிறது.

முற்றிலும் புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ N மாடல் அம்சங்கள் மற்றும் விலை விவரங்கள் ஜூன் 20 ஆம் தேதி அறிவிக்கப்பட இருக்கிறது. புதிய ஸ்கார்பியோ N அறிமுகம் செய்யப்பட்டாலும், பழைய மாடல், ஸ்கார்பியோ கிளாசிக் எனும் பெயரில் விற்பனை செய்யப்படும் என மஹிந்திரா அறிவித்து உள்ளது.
புதிய 2022 மஹிந்திரா ஸ்கார்பியோ N மாடலில் 2.0 லிட்டர் M-ஸ்டேலியன் டர்போ பெட்ரோல் என்ஜின், 2.2 லிட்டர் M-ஹாக் டீசல் என்ஜின் வழங்கப்படும் என தெரிகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் வழங்கப்பட இருக்கிறது. இதன் டாப் எண்ட் மாடல்களில் 4x4 வெர்ஷனும் வழங்கப்படலாம்.
ஹூண்டாய் நிறுவனம் தனது வென்யூ மாடலுக்கான முன்பதிவை நிறுத்தி இருக்கிறது. முன்னதாக வென்யூ பேஸ்லிப்ட் மாடல் ஸ்பை படங்கள் பலமுறை வெளியாகி இருக்கின்றன.
ஹூண்டாய் இந்தியா நிறுவனம் தனது வென்யூ காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடலை அதிகாரப்பூர்வ வலைதளத்தில் இருந்து நீக்கி இருக்கிறது. இது குறித்து ஹூண்டாய் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும் என தெரிகிறது. கடந்த சில மாதங்களாக ஹூண்டாய் வென்யூ பேஸ்லிப்ட் மாடலின் ஸ்பை படங்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கின்றன.
அந்த வகையில், இந்த மாடல் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதோடு புதிய வென்யூ பேஸ்லிப்ட் மாடலின் டிசைன் விவரங்களு்ம இணையத்தில் லீக் ஆகி இருந்தது. இந்த நிலையில், ஹூண்டாய் தனது வென்யூ மாடலுக்கான முன்பதிவை நிறுத்தி இருக்கிறது.

தற்போது இந்திய சந்தையில் ஹூண்டாய் வென்யூ மாடல் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதில் 82 ஹெச்.பி. பவர், 114 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின், 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இத்துடன் 118 ஹெச்.பி. பவர், 172 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின், 6 ஸ்பீடு மேனுவல், iMT மற்றும் DCT டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
இவை தவிர ஹூண்டாய் வென்யூ டீசல் வேரியண்டில் 99 ஹெச்.பி. பவர், 240 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின், 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
பி.எம்.டபிள்யூ. நிறுவனம் தனது M பிரிவின் 50 ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு புதிதாக ஸ்பெஷல் எடிஷன் மாடல்களை அறிமுகம் செய்து இருக்கிறது.
பி.எம்.டபிள்யூ. நிறுவனத்தின் 50 ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு M3 மற்றும் M4 கார்களின் M50 ஜாரெ எடிஷன் மாடல்களை அறிமுகம் செய்து இருக்கிறது. உயர் ரக ஸ்போர்ட்ஸ் கார் மாடல்களில் பிரத்யேக அப்டேட்கள் செய்யப்பட்டு தேர்வு செய்யப்பட்ட நாடுகளில் மிக குறைந்த எண்ணிக்கையிலேயே விற்பனைக்கு வருகிறது. இது மட்டுமின்றி பி.எம்.டபிள்யூ. 1 சீரிஸ் மற்றும் 2 சீரிஸ் கிரான் கூப் மாடல்களையும் எடிஷன் கலர் விஷனில் அறிமுகம் செய்துள்ளது.
புதிய ஸ்பெஷல் எடிஷன் M4 50 ஜாரெ எடிஷன் மாடல்கள் - சான் மரினோ புளூ, கார்பன் பிலாக், இமோலா ரெட், மேகோ புளூ மற்றும் ஹேட்ச் கிரே போன்ற நிறங்களில் கிடைக்கிறது. இத்துடன் முன்புறம் 19 இன்ச் M ஃபோர்ஜ்டு அலாய் வீல்கள், பின்புறம் 20 இன்ச் 2 ஸ்போக் டிசைன் கொண்ட வீல் வழங்கப்பட்டுள்ளது. முதல் முறையாக இந்த வீல்களை கோல்டு பிரான்ஸ் மேட் மற்றும் ஆர்பிட் மேட் பினிஷ் கொண்டுள்ளன.

உள்புறம் M4 ஜாரெ எடிஷன் ஸ்டாண்டர்டு M4 மாடலை தழுவி உருவாக்கப்பட்டு உள்ளது. எனினும், உள்புறங்களில் விசேஷமாக ஸ்பெஷல் எடிஷனை குறிக்கும் பேட்ஜிங் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த காரில் ஸ்டாண்டர்டு M ஸ்போர்ட் ஹெட்ரெஸ்ட், ஆப்ஷனல் கார்பன் பைபர் பக்கெட் முன்புற இருக்கைகள் உள்ளன.
M3 ஜாரெ ஸ்பெஷல் எடிஷன் கார் அமெரிக்கா மற்றும் கனடாவில் மட்டுமே விற்பனை செய்யப்பட இருக்கிறது. இந்த கார் மொத்தத்தில் 500 யூனிட்களே விற்பனை செய்யப்பட உள்ளன. பி.எம்.டபிள்யூ. M3 ஜாரெ எடிஷன் மாடல் ஐந்து பிரத்யேக நிறங்களில் கிடைக்கிறது. இந்த கார்- லைம்ராக் கிரே, சினிபார் ரெட், டெக்னோ வைலண்ட், ஃபயர் ஆரஞ்சு மற்றும் இண்டர்லகோஸ் புளூ ஷேட்களில் கிடைக்கிறது.
கியா நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய EV6 மாடலுக்கான முன்பதிவை துவங்கி இருக்கிறது. இந்த கார் 528 கிலோமீட்டர் ரேன்ஜ் கொண்டிருக்கிறது.
கியா நிறுவனம் இந்திய சந்தையில் தனது முதல் எலெக்ட்ரிக் கார் கியா EV6 மாடலுக்கான முன்பதிவை துவங்கி இருக்கிறது. கியா EV6 மாடலுக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 3 லட்சம் ஆகும். கியா EV6 முன்பதிவு நாட்டின் 12 நகரங்களில் உள்ள 15 விற்பனை மையங்களில் நடைபெற்று வருகிறது.
கியா EV6 மாடலில் 77.4 கிலோவாட் ஹவர் திறன் கொண்ட பேட்டரி வழங்கப்பட இருக்கிறது. சர்வதேச சந்தையில் இந்த கார் 58 கிலோவாட் ஹவர் மற்றும் 77.4 கிலோவாட் ஹவர் என இருவித பேட்டரி ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. எனினும், இந்தியாவில் ஒரு வேரியண்ட் மட்டுமே அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

இந்த எலெக்ட்ரிக் கார் முழு சார்ஜ் செய்தால் மணிக்கு 425 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டுள்ளது. மேலும் இந்த கார் 320 ஹெச்.பி. பவர், 605 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.
இந்திய சந்தையில் புதிய கியா EV6 மாடலின் விலை ரூ. 50 முதல் ரூ. 60 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதற்கட்டமாக இந்த காரின் 100 யூனிட்கள் மட்டுமே இந்தியாவில் விற்பனைக்கு கொண்டுவரப்பட இருக்கின்றன. கியா EV6 மாடல் RWD மற்றும் AWD என இரண்டு வேரியண்ட்களிலும் கிடைக்கும்.
ஹூண்டாய் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய தலைமுறை ஹூண்டாய் டக்சன் காரை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
ஹூண்டாய் இந்தியா நிறுவனம் தனது டக்சன் மாடலை அதிகாரப்பூர்வ வலைதளத்தில் இருந்து நீக்கி, முன்பதிவையும் அதிரடியாக நிறுத்தி இருக்கிறது. இந்தியாவில் புதிய ஹூண்டாய் டக்சன் மாடல் இந்த ஆண்டின் இரண்டாவது அரையாண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய தலைமுறை ஹூண்டாய் டக்சன் மாடல் ஏராளமான மாற்றங்களை கொண்டிருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.
புதிய தலைமுறை ஹூண்டாய் டக்சன் மாடலில் முற்றிலும் புது டிசைன், ஏராளமான அம்சங்கள் மற்றும் அதீத சௌகரிய வசதிகள் வழங்கப்பட இருக்கிறது. இதே மாடல் இந்திய சந்தையிலும் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த மாடல் முந்தைய வெர்ஷனை விட அதிக கூர்மையான தோற்றம் கொண்டிருக்கிறது. இதன் முன்புறத்தில் புதிய கிரில் இண்டகிரேட் செய்யப்பட்ட எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள், எல்.இ.டி. ஹெட்லைட்கள் மற்றும் புது பம்ப்பர் வழங்கப்பட்டு இருக்கிறது.

காரின் உள்புறம் 10.25 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, புளூ லின்க் கனெக்டட் கார் தொழில்நுட்பம், கிளைமேட் கண்ட்ரோல் சிஸ்டத்திற்கு டச் கண்ட்ரோல், ஆம்பிண்ட் லைட்டிங், இ பார்க்கிங் பிரேக், ஸ்விட்ச் கியர்கள் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
புதிய 2022 ஹூண்டாய் டக்சன் மாடலில் 2 லிட்டர், 4 சிலிண்டர் டர்போ பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கும் என தெரிகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல், ஆட்டோமேடிக் மற்றும் ஆல்-வீல் டிரைவ் போன்ற ஆப்ஷ்ன்கள் வழங்கப்படலாம்.
முன்னணி ஆடம்பர கார் உற்பத்தியாளரான போர்ஷே இந்தியாவில் பயன்படுத்திய கார்களை விற்பனை செய்யும் துறையில் களமிறங்க முடிவு செய்து உள்ளது.
ஆடம்பர கார் உற்பத்தியாளர்களில் முன்னணி நிறுவனம் போர்ஷே. இந்தியாவில் போர்ஷே நிறுவனம் பயன்படுத்திய கார்களை விற்பனை செய்யும் துறையில் களமிறங்குகிறது. போர்ஷே நிறுவனத்தின் முதல் பயன்படுத்திய கார்களை விற்பனை செய்யும் மையம் ஜூன் மாதம் 8 ஆம் தேதி கேரளா மாநிலத்தில் திறக்கப்பட இருக்கிறது. இந்த விற்பனை மையங்கள் ‘Porsche Approved' பெயரின் கீழ் இயங்க இருக்கின்றன.
போக்ஸ்வேகன் குழுமத்தின் அங்கமாக போர்ஷே அப்ரூவ்டு செண்டர், போக்வ்கேன் தாஸ் வெல்ட் ஆட்டோ மற்றும் ஆடி அப்ரூவ்டு பிளஸ் திட்டங்களின் வரிசையில் இணைகிறது. இதன் மூலம் சான்றளிக்கப்பட்ட பயன்படுத்திய கார்களை விற்பனை, வாங்குவது அல்லது எக்சேன்ஜ் செய்ய ஒற்றை தளமாக இவை மாறும்.

போர்ஷே அப்ரூவ்டு மையங்கள் ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட கார்களை வாங்குவது, விற்பனை செய்வது மற்றும் எக்சேன்ஜ் செய்வது போன்ற பணிகள் நடைபெறும். இதன் மூலம் செகண்ட் ஹேண்ட் கார்களுக்கு மிகவும் போட்டியை ஏற்படுத்தும் விலையில் வழங்குவதோடு, ஒரிஜினல் அக்சஸரீ, இன்சூரன்ஸ் மற்றும் நிதியுதவி உள்ளிட்டவைகளை வழங்கவும் போர்ஷே முடிவு செய்துள்ளது.
போர்ஷே கார்களை புதிய முறையில் அனுபவிக்க வழி வகுக்கும் படி இந்த விற்பனை மையங்கள் செயல்படும் என போர்ஷே நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. இது குறித்த மற்ற தகவல்கள் விற்பனை மையம் துவங்கப்படும் போது அறிவிக்கப்படும் என போர்ஷே தெரிவித்துள்ளது.
ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் 19 லேண்ட் ரோவர் கார்களை ரிகால் செய்வதாக அறிவித்து இருக்கிறது. ரிகால் செய்யப்படும் கார்கள் இலவசமாக சரிசெய்து தரப்பட இருக்கின்றன.
ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் 2022 ரேன்ஜ் ரோவர் மாடல்களின் கிராஷ் சென்சார் சரியாக பொருத்தப்படவில்லை என்பதை கண்டறிந்து உள்ளது. இதனை சரி செய்யவில்லை எனில் மோசமான பின் விளைவுகள் ஏற்படலாம் என ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் கருதுகிறது.
இதனால் அமெரிக்க சந்தையில் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 2 முதல் பிப்ரவரி 22 ஆம் தேதிக்குள் விற்பனை செய்யப்பட்ட ரேன்ஜ் ரோவர் எஸ்.யு.வி. மாடல்களை ரிகால் செய்ய ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதே காலக்கட்டத்தில் விற்பனை செய்யப்பட்ட யூனிட்களில் 100 சதவீதம் கோளாறு உள்ளன.

இந்த கோளாறு காரணமாக காரின் முன்புற கிராஷ் சென்சார் செயலிழக்கலாம். இதனால் காரின் ஆக்டிவ் ரெசிஸ்டண்ட் சிஸ்டம்களும் சரியாக இயங்காமல் போகும். முன்புற கிராஷ் சென்சார்கள் இயங்காமல் போனால், காரணம் ஏர்பேக் சரியாக செயல்படாது. இது ஓட்டுனர் மட்டும் இன்றி காரில் பயணம் செய்யும் பயணிகளுக்கும் கடும் காயங்களை ஏற்படுத்தி விடும்.
இந்த கோளாறை ஏப்ரல் மாத வாக்கில் கண்டறிந்த ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் ஆலையில் இதுபற்றிய விசாரணையை நடத்தியது. அதன் பின் தற்போது கோளாறு பாதுகாப்பு விஷயத்தில் ஆபத்தை ஏற்படுத்தி விடும் என்பதை உறுதிப்படுத்தி இருக்கிறது. இதைத் தொடர்ந்து கார்களை ரிகால் செய்யும் நடவடிக்கையை ஜாகுவார் லேண்ட் ரோவர் மேற்கொண்டு வருகிறது.
ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய தலைமுறை டக்சன் மாடல் இந்திய வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது. இந்த மாடல் முற்றிலும் புது டிசைன் மற்றும் அதிக அம்சங்களை கொண்டிருக்கும்.
முற்றிலும் புதிய ஹூண்டாய் டக்சன் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த மாடல் 2022 இரண்டாவது அரையாண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. 2004 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், டக்சன் மாடல் இதுவரை உலகம் முழுக்க 70 லட்சத்திற்கும் அதிக யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. இவற்றில் ஐரோப்பாவில் மட்டும் சுமார் 17 லட்சம் யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளன.
புதிய தலைமுறை ஹூண்டாய் டக்சன் மாடலில் முற்றிலும் புது டிசைன், ஏராளமான அம்சங்கள் மற்றும் அதீத சௌகரிய வசதிகள் வழங்கப்பட இருக்கிறது. இதே மாடல் இந்திய சந்தையிலும் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த மாடல் முந்தைய வெர்ஷனை விட அதிக கூர்மையான தோற்றம் கொண்டிருக்கிறது. இதன் முன்புறத்தில் புதிய கிரில் இண்டகிரேட் செய்யப்பட்ட எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள், எல்.இ.டி. ஹெட்லைட்கள் மற்றும் புது பம்ப்பர் வழங்கப்பட்டு இருக்கிறது.

காரின் உள்புறம் 10.25 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, புளூ லின்க் கனெக்டட் கார் தொழில்நுட்பம், கிளைமேட் கண்ட்ரோல் சிஸ்டத்திற்கு டச் கண்ட்ரோல், ஆம்பிண்ட் லைட்டிங், இ பார்க்கிங் பிரேக், ஸ்விட்ச் கியர்கள் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
புதிய ஹூண்டாய் டக்சன் மாடலில் 2 லிட்டர், 4 சிலிண்டர் டர்போ பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கும் என தெரிகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல், ஆட்டோமேடிக் மற்றும் ஆல்-வீல் டிரைவ் போன்ற ஆப்ஷ்ன்கள் வழங்கப்படலாம்.
இந்திய சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்டு வந்த ஜீப் மெரிடியன் மாடல் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
ஜீப் இந்தியா நிறுவனம் இந்திய சந்தையில் நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்டு வந்த ஜீப் மெரிடியன் எஸ்.யு.வி. மாடலின் இந்திய விலை விவரங்களை அறிவித்து இருக்கிறது. புதிய ஜீப் மெரிடியன் மாடல் விலை ரூ. 29 லட்சத்து 90 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது. புதிய ஜீப் மெரிடியன் 3-ரோ எஸ்.யு.வி மாடல்- லிமிடெட் மேனுவல் முன்புற வீல் டிரைவ் (FWD) மற்றும் ஆட்மோடேிக் 4 வீல் டிரைவ் (FWD) ஆப்ஷன் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது.
முன்னதாக ஜீப் மெரிடியன் மாடலுக்கான உற்பத்தி பணிகள் இந்திய ஆலையில் துவங்கி நடைபெற்று வருகிறது. இத்துடன் ஜீப் மெரிடியன் மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. ஜீப் மெரிடியன் மாடலுக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 50 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

புதிய ஜீப் மெரிடியன் எஸ்.யு.வி. மாடலில் 2 லிட்டர் மல்டிஜெட் டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 168 ஹெச்.பி. பவர், 350 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல், 9 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் முன்புற வீல் டிரைவ் சிஸ்டம் இருவித கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
மற்ற அம்சங்களை பொருத்தவரை புதிய ஜீப் மெரிடியன் எஸ்.யு.வி. மாடலில் 10.1 இன்ச் தொடுதிரை வசதி மற்றும் 10.2 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், கனெக்டட் கார் தொழில்நுட்பம், பானரோமிக் சன்ரூப், வயர்லெஸ் ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி, வயர்லெஸ் போன் சார்ஜிங், பவர்டு சீட்கள், பவர்டு டெயில்கேட் உள்ளது. பாதுகாப்பிற்கு ஆறு ஏர்பேக், 360-டிகிரி கேமரா மற்றும் டையர் பிரெஷர் மாணிட்டரிங் போன்ற அம்சங்கள் உள்ளன.
இந்தியாவில் ஜீப் மெரிடியன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 36 லட்சத்து 95 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய ஜீப் மெரிடியன் மாடல் இந்திய சந்தையில் டொயோட்டா பார்ச்சூனர், எம்.ஜி. குளோஸ்டர் மற்றும் ஸ்கோடா கோடியக் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
சிட்ரோயன் நிறுவனம் இந்திய சந்தையில் தனது எலெக்ட்ரிக் கார் எப்போது வெளியிடப்படும் என்ற தகவலை அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது.
ஸ்டெலாண்டிஸ் இந்தியா குழுமத்தின் முதல் எலெக்ட்ரிக் வாகனம் இந்திய சந்தையில் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்திய சந்தைக்கான எலெக்ட்ரிக் வாகன வெளியீட்டு திட்டம் பற்றி பேசும் போது இந்த தகவலை ஸ்டெலாண்டிஸ் தலைமை செயல் அதிகாரி கார்லோஸ் டவாரஸ் தெரிவித்து இருக்கிறார்.
“சிட்ரோயன் பிராண்டுக்கான ஸ்மார்ட் கார் திட்டம் உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் எலெக்ட்ரிக் கார் வெர்ஷன்கள் இடம்பெற்றுள்ளன. இந்திய சந்தையில் வாகனங்களை எலெக்ட்ரிக் வெர்ஷனுக்கு மாற்றுவதில் சிட்ரோயன் முன்னணி பிராண்டாக இருக்கும்,” என டவாரஸ் தெரிவித்தார்.

இந்தியாவில் பெட்ரோல், டீசல் கார் மாடல்களுடன் ஒப்பிடும் போது எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை 40 முதல் 50 சதவீதம் வரை அதிகமாகவே இருக்கிறது. அந்த வகையில் புதிய சிட்ரோயன் எலெக்ட்ரிக் மாடல்களின் விலை எப்படி நிர்ணயம் செய்யப்படும் என்பது கேளிவிக்குறியாகவே இருந்த வந்தது.
தற்போது இது பற்றிய கேள்விக்கும் டவாரஸ் பதில் அளித்துள்ளார். அதில்,“எங்கள் வினியோகஸ்தர் குழுக்களுடன் இணைந்து பணியாற்றி, உற்பத்திக்கான கூடுதல் செலவீனங்களை தவிர்த்து, காரின் விலை அதிகரிப்பதை பெருமளவு குறைத்து, நடுத்தர மக்களும் இந்த காருக்கு பணம் செலுத்த வைக்க வேண்டும். இதன் காரணமாக காம்பேக்ட் கார் மாடல்கள் மட்டுமின்றி எம்.பி.வி. மாடல்களையும் அறிமுகம் செய்ய இருக்கிறோம்,” என குறிப்பிட்டுள்ளார்.
எலெக்ட்ரிக் மாடல் தவிர சிட்ரோயன் நிறுவனம் அடுத்த மாதம் தனது சிட்ரோயன் C3 காரை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இதே காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதுதவிர மேலும் சில எலெக்ட்ரிக் மாடல்களும் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளன.
ஹூண்டாய் இந்தியா நிறுவனம் தனது கார் மாடலுக்கான ஆன்லைன் முன்பதிவுகளை நிறுத்தி இருக்கிறது. இது பற்றி தொடர்ந்து பார்ப்போம்.
ஹூண்டாய் இந்தியா நிறுவனம் தனது சாண்ட்ரோ மாடலுக்கான ஆன்லைன் முன்பதிவுகளை நிறுத்தி இருக்கிறது. ஹூண்டாய் ஹேச்பேக் மாடலின் விலை இந்திய வலைதளத்தில் பட்டியலிடப்பட்டே இருக்கிறது. எனினும், சாண்ட்ரோ மாடல் ஹூண்டாய் வலைதளத்தின் ‘Click to Buy’ முன்பதிவு தளத்தில் இடம்பெறவில்லை.
முன்னதாக இம்மாத துவக்கத்தில் ஹூண்டாய் சாண்ட்ரோ மாடல் விலை ரூ. 17 ஆயிரத்து 800 வரை அதிகரிக்கப்பட்டது. புது ஹேச்பேக் மாடலான சாண்ட்ரோ விற்பனை நிறுத்தம் பற்றி ஹூண்டாய் சார்பில் எந்த தகவலும் வழங்கப்படவில்லை. எனினும், ஆன்லைன் தளம் போன்றே விற்பனை மையங்களிலும் இந்த மாடலுக்கான முன்பதிவுகள் நிறுத்தப்படலாம் என கூறப்படுகிறது.

இந்திய சந்தையில் 2018 வாக்கில் ரி-எண்ட்ரி கொடுத்த ஹூண்டாய் சாண்ட்ரோ எண்ட்ரி-லெவல் ஹேச்பேக் மாடலாக விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதில் 7 இன்ச் டச் ஸ்கிரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், ஸ்டீரிங் மவுண்ட் கண்ட்ரோல்கள், ரியர் ஏர்கான் வெண்ட்கள், கீலெஸ் எண்ட்ரி மற்றும் ரியர் பார்க்கிங் கேமரா போன்ற அம்சங்கள் உள்ளன.
ஹூண்டாய் சாண்ட்ரோ மாடலின் விலை தற்போது ரூ. 4 லட்சத்து 89 ஆயிரம் என துவங்கி அதிகபட்சமாக ரூ. 6 லட்சத்து 41 ஆயிரம் வரை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.






