என் மலர்
பைக்
- ஓலா ஸ்போர்ட்ஸ் பைக்கின் புகைப்படங்களை தனது எக்ஸ் பக்கத்தில் பவிஷ் அகர்வால் பகிர்ந்துள்ளார்.
- இந்த பைக்கின் எக்ஸ் ஷோ ரூம் விலை 1.50 லட்சமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .
ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் ஆரோஹெட் எலெக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் பைக் விரைவில் சந்தைக்கு வரும் என்று அந்நிறுவனத்தின் சி.இ.ஓ. பவிஷ் அகர்வால் தெரிவித்துள்ளார்.
ஆரோஹெட் எலெக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் பைக்கின் புகைப்படங்களை தனது எக்ஸ் பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார்.
இந்தாண்டு ஆகஸ்ட் மாதம் ஆரோஹெட் ஸ்போர்ட்ஸ் பைக் இந்தியாவில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பைக்கின் எக்ஸ் ஷோ ரூம் விலை 1.50 லட்சமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- இந்த பைக்கில் 21 மற்றும் 17-இன்ச் வயர் ஸ்போக் வீல்கள் வழங்கப்படுகின்றன.
- கே.டி.எம். 390 அட்வெஞ்சர் S மாடலில் 399 சிசி லிக்விட் கூல்டு எஞ்சின் வழங்கப்படுகிறது.
பைக் பிரியர்களுக்கு பலவிதமான மாடல்களில் உள்ள பைக்குளில் பயணிப்பது மிகவும் விருப்பமான ஒன்று. அதுவும் கே.டி.எம். மாடல் பைக்குகள் மீது கொள்ள ஆசை கொண்டுள்ளனர். அதிலும் பல நாட்களாக கே.டி.எம். 390 அட்வெஞ்சர் மாடல் குறித்து சில தகவல்கள் மட்டுமே வெளியான நிலையில், தற்போது பைக் அறிமுக தேதி மற்றும் அம்சங்கள் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி வருகிற 30-ந்தேதி அதாவது நாளை மறுநாள் இந்தியாவில் கே.டி.எம். 390 அட்வெஞ்சர் மோட்டார் சைக்கிள் அறிமுகம் செய்யப்படுவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. கோவாவில் நடைபெற்ற இந்தியா பைக் வாரம் நிகழ்வில் 390 அட்வெஞ்சர் S உடன் வெளியிடப்பட்ட 390 எண்டிரோ R பைக்குகளும் இந்த 390 பைக்குகளின் வரிசையில் அடங்கும்.
புதிய கே.டி.எம். 390 அட்வெஞ்சர் பைக்கில் செங்குத்தான ஹெட்லேம்ப்களை சுற்றி டி.ஆர்.எல்.கள் வழங்கப்படுகின்றன. இதில் ஒற்றை இருக்கை அமைப்பு மற்றும் டிசைன் இதனை ரேலி பைக் போன்ற தோற்றத்தை வழங்குகிறது.

இந்த பைக்கில் 21 மற்றும் 17-இன்ச் வயர் ஸ்போக் வீல்கள் வழங்கப்படுகின்றன. இவற்றில் டியூப்லெஸ் டயர்கள் வழங்கப்படும். பிரேக்கிங்கை பொருத்தவரை இருபுறமும் டிஸ்க் பிரேக்குகள் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஸ்விட்ச் செய்யக்கூடிய டூயல் சேனல் ஏ.பி.எஸ். வழங்கப்படுகிறது.
இத்துடன் TFT டிஸ்ப்ளே, டிராக்ஷன் கண்ட்ரோல் வசதி, கார்னெரிங் ஏ.பி.எஸ்., மற்றும் ரைடு மோட்கள் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன. இத்துடன் குரூயிஸ் கண்ட்ரோல் வசதி வழங்கப்படுகிறது. இந்திய சந்தையில் கே.டி.எம். தனது பைக்கில் இந்த வசதியை வழங்குவது இதுவே முதல் முறை ஆகும்.
கே.டி.எம். 390 அட்வெஞ்சர் S மாடலில் 399 சிசி லிக்விட் கூல்டு எஞ்சின் வழங்கப்படுகிறது. இது 45 ஹெச்.பி. பவர், 39 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் வகையில் டியூன் செய்யப்பட்டு உள்ளது.
- ஹோண்டா CBR 650R பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ. 9.99 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- இந்த 2 பைக்கிலும் 649 சிசி இன்-லைன் 4 சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.
ஹோண்டா நிறுவனம் CBR650R மற்றும் CB650R ஆகிய இரண்டு புதிய பைக்குகளை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.
ஹோண்டா CBR 650R பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ. 9.99 லட்சமாகவும் ஹோண்டா CB650R பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.9.20 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த 2 பைக்கிலும் 649 சிசி இன்-லைன் 4 சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 12,000 ஆர்.பி.எம். இல் 93 ஹெச்.பி. மற்றும் 6,500 ஆர்.பி.எம். இல் 63 என்.எம். ஆற்றலை உருவாக்கும்.
இந்த பைக்குகளுக்கான டெலிவரி அடுத்த மாதம் முதல் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
- 2025 ஹோண்டா டியோவில் புதிதாக 4.2-இன்ச் டிஎஃப்டி டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது.
- டியோவில் யூ.எஸ்.பி டைப்-சி சார்ஜிங் போர்ட் பொருத்தப்பட்டுள்ளது.
ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் இந்திய சந்தையில் மேம்பட்ட அம்சங்களுடன் 2025 டியோ ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது.
2025 ஹோண்டா டியோ எஸ்டிடி (STD) மற்றும் டிஎல்எக்ஸ் (DLX) என்ற 2 வகைகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் டிஎல்எக்ஸ் ஸ்கூட்டரின் எக்ஸ் ஷோ ரூம் விலை ரூ. 74,930 ஆகவும் டியோ டிஎல்எக்ஸ் ஸ்கூட்டரின் எக்ஸ் ஷோ ரூம் விலை ரூ 85,648 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இது எஸ்டிடி மற்றும் டிஎல்எக்ஸ் ஆகிய இரண்டு வகைகளிலும் ஐந்து நிறங்களில் ஹோண்டா டியோ கிடைக்கிறது.
இந்த புதிய டியோ ஸ்கூட்டரில் 109.51-சிசி மற்றும் ஒற்றை சிலிண்டர் PGM-Fi இன்ஜின் உள்ளது. இது 7.9 ஹார்ஸ் பவர் மற்றும் 9.03 என்எம் டார்க் விசையை உருவாக்கும்
இதில் புதிதாக 4.2-இன்ச் டிஎஃப்டி டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. டியோவில் யூ.எஸ்.பி டைப்-சி சார்ஜிங் போர்ட் பொருத்தப்பட்டுள்ளது. பயணத்தின்போது மொபைல்போன்களை இதனால் சார்ஜ் செய்து கொள்ளலாம்.
- புதுப்பிக்கப்பட்ட 450 எஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ரூ.1.30 லட்சத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது.
- இந்த ஸ்கூட்டரை ஒருமுறை முழுவதுமாக சார்ஜ் செய்தால் 105 கிமீ தூரம் ஓட்ட முடியும்.
ஏத்தர் எனர்ஜி நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதுப்பிக்கப்பட்ட 450 ரேஞ்ச் எலெக்ட்ரிக் கூட்டரை அறிமுகம் செய்துள்ளது.
இதில், 450 எஸ், 450 எக்ஸ் 2.9 kWh 450 எக்ஸ் 3.7 kWh ஆகிய 3 புதுப்பிக்கப்பட்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு வந்துள்ளது.
புதுப்பிக்கப்பட்ட 450 எஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் எக்ஸ் ஷோ ரூம் விலையாக ரூ.1.30 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது பழைய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலையை விட 4,400 ரூபாய் அதிகமாகும்.
புதிய நீல நிறத்தில் அறிமுகமாகியுள்ள இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இப்போது சற்று வேகமான 350W-லிருந்து 375W சார்ஜருடன் வருகிறது. ஒருமுறை முழுவதுமாக சார்ஜ் செய்தால் 105 கிமீ தூரம் ஓட்ட முடியும்.
புதுப்பிக்கப்பட்ட 450 எக்ஸ் 2.9 kWh 1.47 Pro Pack ஸ்கூட்டரின் எக்ஸ் ஷோ ரூம் விலையாக 1.64 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது பழைய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலையை விட 6,400ரூபாய் அதிகமாகும்.
இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இப்போது 700W சார்ஜருடன் வருகிறது. இதில் ஒருமுறை முழுவதுமாக சார்ஜ் செய்தால் 105 கிமீ தூரம் ஓட்ட முடியும்.
புதுப்பிக்கப்பட்ட 450 எக்ஸ் 3.7 kWh 1.57 Pro Pack எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை 1.77 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது பழைய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலையை விட 2,000 ரூபாய் அதிகமாகும். இதில் ஒருமுறை முழுவதுமாக சார்ஜ் செய்தால் 130 கிமீ தூரம் ஓட்ட முடியும்.
- Platina 110 ABS பைக் 2022 ஆம் ஆண்டு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.
- கடந்த ஆண்டு அப்டேட் செய்யப்பட்ட Pulsar F250 பைக்கின் விலை ரூ.1.50 லட்சமாக இருந்தது.
பஜாஜ் ஆட்டோ நிறுவனம் இந்தியாவில் தனது 3 பைக்குகளின் விற்பனையை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.
பஜாஜ் நிறுவனத்தில் Platina 110 ABS, CT125X, Pulsar F250 ஆகிய மூன்று பைக்குகளின் விற்பனை இந்தியாவில் நிறுத்தப்பட்டுள்ளது.
Platina 110 ABS பைக் 2022 ஆம் ஆண்டு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் விலை ரூ.72,224 ஆக நிர்ணயிக்கப்பட்டது. CT125X பைக்கின் விலை ரூ.71,354 - ரூ.74,554 ஆக இருந்தது. கடந்த ஆண்டு அப்டேட் செய்யப்பட்ட Pulsar F250 பைக்கின் விலை ரூ.1.50 லட்சமாக இருந்தது.
தற்போது இந்த பைக்குகளின் விற்பனையில் மந்தநிலை ஏற்பட்டுள்ளதால் பஜாஜ் நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளது.
- பைக்குகளின் மேம்பட்ட மாடல்களும் இடம்பெற்றன.
- கடந்த ஆண்டு வெளியான பைக்குகளில் டாப் 10 பட்டியல்.
இந்திய இருசக்கர வாகனங்கள் சந்தையில் கடந்த ஆண்டு ஏராளமான மோட்டார்சைக்கிள் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டன. இதில் முற்றிலும் புதிய மாடல்களும், ஏற்கனவே விற்பனை செய்யப்படும் பைக்குகளின் மேம்பட்ட மாடல்களும் இடம்பெற்று இருந்தன. அந்த வகையில், கடந்த ஆண்டு வெளியான பைக்குகளில் டாப் 10 பட்டியலை தொடர்ந்து பார்ப்போம்.
பஜாஜ் பல்சர் என்125
பஜாஜ் நிறுவனம் பல்சர் என்125 மோட்டார்சைக்கிளை கடந்த அக்டோபர் மாதம் அறிமுகம் செய்தது. இதன் விலை ரூ. 94,707 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. இதில் 124.53சிசி சிங்கில் சிலிண்டர் எஞ்சின் வழங்கப்பட்டு இருக்கிறது. இது 12 ஹெச்.பி. பவர், 11 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.
கவாசகி நிஞ்சா ZX-4RR
கவாசகி நிறுவனத்தின் டாப் எண்ட் மாடல்களில் ஒன்றாக இந்த பைக் கடந்த நவம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. ரூ. 9.42 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த பைக்கில் 399 சிசி இன்லைன்-4 எஞ்சின் உள்ளது. இது 77 ஹெச்.பி. பவர், 39 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும்.
ஹோண்டா எஸ்.பி. 125 (2025)
2025 ஹோண்டா எஸ்.பி. 125 மாடல் கடந்த டிசம்பர் 23 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விலை ரூ. 91,771 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் 124சிசி சிங்கில் சிலிண்டர் ஃபியூவல் இன்ஜெக்ட் செய்யப்பட்ட எஞ்சின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த பைக்கில் மைலேஜை சிக்கனப்படுத்தும் ஐடில் ஸ்டாப் சிஸ்டம் உள்ளது.

ஹோண்டா எஸ்.பி. 160 (2025)
2025 ஹோண்டா எஸ்.பி. 160 மோட்டார்சைக்கிள் கடந்த டிசம்பர் 24 ம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விலை ரூ. 1.21 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் 162.71 சிசி சிங்கில் சிலிண்டர் எஞ்சின் வழங்கப்பட்டு இருக்கிறது. இது 9.7 கிலோவாட் பவர், 14.8 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.
கவாசகி நிஞ்சா 1100SX
இந்திய சந்தையில் கடந்த டிசம்பர் 19 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்ட நிஞ்சா 1100SX ரூ. 13.39 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் கிடைக்கிறது. இதில் 1099சிசி இன்லைன் 4-சிலிண்டர் எஞ்சின் உள்ளது. இது 135 ஹெச்.பி. பவர், 113 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் ஏ.பி.எஸ்., டிராக்ஷன் கண்ட்ரோல், குரூயிஸ் கண்ட்ரோல் வசதிகள், பவர் மோட் வழங்கப்படுகிறது.
டிரையம்ப் ஸ்பீடு டுவின் 900
டிரையம்ப் நிறுவனம் கடந்த டிசம்பர் 24 ஆம் தேதி அறிமுகம் செய்த புதிய ஸ்பீடு டுவின் 900 மாடலில் 900சிசி பேரலல் டுவின் எஞ்சின் வழங்கப்பட்டு இருக்கிறது. இது 65 ஹெச்.பி. பவர், 80 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இதன் விலை ரூ. 8.89 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

ராயல் என்பீல்டு கோன் கிளாசிக் 350
இந்திய சந்தையில் கடந்த நவம்பர் 23 ஆம் தேதி இந்த பைக் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விலை ரூ. 2.35 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த பைக்கிலும் கிளாசிக் 350 மாடலில் உள்ள எஞ்சினே வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் டிஜிட்டல் அனலாக் கன்சோல், டிரிப்பர் நேவிகேஷன், யு.எஸ்.பி. சார்ஜிங் வசதி உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.
கே.டி.எம். 1290 சூப்பர் அட்வென்ச்சர் ஆர்
கே.டி.எம். நிறுவனம் தனது 1290 சூப்பர் அட்வென்ச்சர் ஆர் மோட்டார்சைக்கிளை கடந்த நவம்பர் 14 ஆம் தேதி அறிமுகம் செய்தது. இதன் விலை ரூ. 22.74 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் 1301சிசி, டுவின் சிலிண்டர் லிக்விட் கூல்டு எஞ்சின் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் பை-டைரக்ஷனல் குயிக் ஷிஃப்டர், ஸ்லிப்பர் கிளட்ச், ரைடு மோட்கள் என ஏராளமான வசதிகள் வழங்கப்பட்டு இருக்கிறது.
ராயல் என்பீல்டு பியர் 650
ராயல் என்பீல்டு நிறுவனம் தனது பியர் 650 மோட்டார்சைக்கிளை கடந்த நவம்பர் 5 ஆம் தேதி அறிமுகம் செய்தது. இதன் விலை ரூ. 3.39 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதில் 650சிசி பேரலல் டுவின் எஞ்சின் வழங்கப்பட்டு இருக்கிறது.
கே.டி.எம். 1390 சூப்பர் டியூக் ஆர்
இந்திய சந்தையில் கே.டி.எம். 1390 சூப்பர் டியூக் ஆர் மோட்டார்சைக்கிள் கடந்த நவம்பர் 14 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விலை ரூ. 22.96 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதில் 1350சிசி வி டுவின் எஞ்சின் வழங்கப்பட்டுள்ளது. இது 190 ஹெச்.பி. பவர், 145 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது.
- ஏத்தர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விலை உயர்த்தப்படுகிறது.
- விலை உயர்வு பற்றிய தகவல் வெளியானது.
ஏத்தர் எனர்ஜி நிறுவனம் இந்திய சந்தையில் தனது ரிஸ்டா மாடல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விலையை அடுத்த ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதியில் இருந்து உயர்த்துவதாக அறிவித்து இருக்கிறது. அதன்படி இந்த ஸ்கூட்டரின் விலை ரூ. 4 ஆயிரத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 6 ஆயிரம் வரை அதிகரிக்கும் என்று தெரிகிறது.
இந்திய சந்தையில் ஏத்தர் ரிஸ்டா மாடல் S, Z 2.9 மற்றும் Z 3.7 என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது. இவற்றின் விலை முறையே ரூ. 1 லட்சத்து 10 ஆயிரம், ரூ. 1 லட்சத்து 27 ஆயிரம் மற்றும் ரூ. 1 லட்சத்து 46 ஆயிரம் ஆகும்.
இத்துடன் ப்ரோ பேக் வாங்கும் போது மூன்று வேரியண்ட்களின் விலை முறையே ரூ. 13 ஆயிரம், ரூ. 15 ஆயிரம் மற்றும் ரூ. 20 ஆயிரம் அதிகரிக்கும். 2025, ஜனவரி 1 ஆம் தேதியில் இருந்து ஏத்தர் ரிஸ்டா மாடலின் விலை உயர இருக்கும் நிலையில், எந்த வேரியண்டிற்கு எவ்வளவு விலை உயரும் என்பது பற்றிய தகவல் இல்லை.
- டிவிஎஸ் நிறுவனம் ரோனின் பைக்கை அப்டேட் செய்தது.
- புதிய பைக்கின் விற்பனை அடுத்த ஆண்டு துவங்குகிறது.
டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் தனது அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ரோனின் 2025 மோட்டார்சைக்கிள் மாடலை அறிமுகப்படுத்தியது. மோட்டோசோல் 4.0 நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்ட முற்றிலும் புதிய ரோனின் 2025 மாடல் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் ஹண்டர் 350 மோட்டார்சைக்கிளுக்கு போட்டியாக அமைகிறது.
2025 டிவிஎஸ் ரோனின் மோட்டார்சைக்கிளின் விலை அடுத்த மாதம் அறிவிக்கப்படும். 2025 ரோனின் மாடல் கிளேசியர் சில்வர் மற்றும் சார்கோல் எம்பெர் என இரண்டு புதிய நிறங்களில் கிடைக்கிறது. இது முந்தைய ஆண்டு மாடலின் டெல்டா புளூ மற்று்ம ஸ்டார்கேஸ் பிளாக் நிறங்களுக்கு மாற்றாக அமைகிறது.
புதிய ரோனின் மாடல் SS, DS மற்றும் TD என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதில் DS வேரியண்டில் டூயல் சேனல் ஏபிஎஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த பைக்கிலும் 225.9சிசி சிங்கில் சிலிண்டர் எஞ்சின் வழங்கப்பட்டு இருக்கிறது. இது 20.1 ஹெச்பி பவர், 19.93 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
- இதற்கான பணிகள் கடந்த மாதம் முதலே நடைபெற்று வருகிறது.
- கான்செப்ட் மாடலை நிஜமாக்க திட்டமிட்டு வருகிறது.
ஹோண்டா நிறுவனத்தின் GB350 மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் ஹோன்டா CB350 என்ற பெயரில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ரெட்ரோ பைக் போன்ற தோற்றம், ஏர்-கூல்டு சிங்கில் சிலிண்டர் எஞ்சின் உள்ளிட்ட அம்சங்கள் இந்த மோட்டார்சைக்கிள் நல்ல வரவேற்பை பெற காரணங்களாக மாறின.
GB350 சீரிசில் காலப்போக்கில் நிறைய மாற்றங்கள் செய்யப்படும், GB350C பைக் அறிமுகம் செய்யப்பட்ட போதிலும், இதே சீரிசில் GB500 மோட்டார்சைக்கிளை ஹோண்டா உருவாக்கி வருவதாக நீண்ட காலமாக கூறப்பட்டு வருகிறது. அந்த வரிசையில், ஹோண்டா நிறுவனம் தனது கான்செப்ட் மாடலை நிஜமாக்க திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதனை உறுதிப்படுத்தும் வகையில் ஹோண்டா நிறுவனம் GB500 என்ற பெயரை பயன்படுத்த டிரேட்மார்க் கோரி விண்ணப்பித்துள்ளது. இந்த விண்ணப்பம் சர்வதேச சந்தையில் பல நாடுகளில் சமர்பிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான பணிகள் கடந்த மாதம் முதலே நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
ஹோண்டா நிறுவனம் சர்வதேச சந்தையில் விரிவாக்க பணிகளை முடுக்கிவிட்டுள்ள நிலையில், சக்திவாய்ந்த மாடல் மேலும் அதிக வாடிக்கையாளர்களை கவரும் என்றும் ராயல் என்பீல்டு பைக்குகளை வாங்க நினைப்போருக்கு மாற்றாக புது பைக் என்ற ஆப்ஷனை இந்த மாடல் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஐந்து நிறங்களில் கிடைக்கிறது.
- இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் 101 கி.மீ. ரேஞ்ச் வழங்கும்.
ஹோண்டா நிறுவனம் இந்திய சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஆக்டிவா e: எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்தது. புதிய ஆக்டிவா e: எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் எல்.இ.டி. ஹெட்லைட், எல்.இ.டி. டி.ஆர்.எல். உள்ளது. இதன் பக்கவாட்டில் சில்வர் அக்சென்ட்கள் உள்ளன. இந்த ஸ்கூட்டர் எளிமையான டிசைன் கொண்டிருக்கிறது.
இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தோற்றம் மிக எளிமையாகவும், அதிநவீனத்துவத்தை வெளிப்படுத்தும் வகையிலும் இருக்கும் படி உருவாக்கப்பட்டு இருக்கிறது. புதிய ஆக்டிவா e: எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்- பியல் ஷாலோ புளூ, பியல் மிஸ்டி வைட், பியல் செரினிட்டி புளூ, மேட் ஃபாகி சில்வர் மெட்டாலிக் மற்றும் பியல் இக்னியஸ் பிளாக் என ஐந்து நிறங்களில் கிடைக்கிறது.

புதிய ஆக்டிவா e: எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 1.5 கிலோவாட் ஹவர் திறன் கொண்ட கழற்றி மாற்றிக் கொள்ளும் பேட்டரிகளை கொண்டிருக்கிறது. இந்த ஸ்கூட்டரில் உள்ள இரு பேட்டரிகளை முழு சார்ஜ் செய்தால் 102 கிலோமீட்டர்கள் வரையிலான ரேஞ்ச் வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
ஆக்டிவா e: டாப் எண்ட் மாடலில் டிஎப்டி டிஸ்ப்ளே, ப்ளூடூத் கனெக்டிவிட்டி, அழைப்புகள் மற்றும் நேவிகேஷன் அலர்ட்களை வழங்கும் வசதி வழங்கப்படுகிறது. இந்த ஸ்கூட்டரில் உள்ள எலெக்ட்ரிக் மோட்டார் 6 கிலோவாட் திறன் வெளிப்படுத்தும். இது மணிக்கு 60 கிலோமீட்டர் வேகத்தை 7.3 நொடிகளில் எட்டிவிடும்.
இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இகோ, ஸ்டாண்ட்ர்டு மற்றும் ஸ்போர்ட் என மூன்றுவித ரைடிங் மோட்களை கொண்டுள்ளது. இது மணிக்கு அதிகபட்சம் 80 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது. புதிய ஆக்டிவா e: எலெக்ட்ரிக் மாடலுக்கான முன்பதிவுள் அடுத்த ஆண்டு ஜனவரி மாதமும், விநியோகம் பிப்ரவரி மாதமும் துவங்க இருக்கிறது.
- இரு ஸ்கூட்டர்களும் அசத்தலான டிசைன் கொண்டுள்ளது.
- அதிகபட்சம் 146 கிலோமீட்டர் வரையிலான ரேஞ்ச் கிடைக்கும்.
ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் S1 Z மற்றும் S1 Z பிளஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இவற்றின் விலை முறையே ரூ. 59 ஆயிரத்து 999 மற்றும் ரூ. 64 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
புதிய S1 Z மற்றும் S1 Z பிளஸ் ஸ்கூட்டர்களில் கழற்றக்கூடிய பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கிறது. இதனால், ஸ்கூட்டரின் பேட்டரியை எஹ்கு வேண்டுமானாலும் எடுத்துச் சென்று சார்ஜ் ஏற்றிக் கொள்ளலாம். இதற்காக 3-பின் சார்ஜிங் சாக்கெட் வழங்கப்படுகிறது. இரு ஸ்கூட்டர்களும் அசத்தலான டிசைன், மெல்லிய பேனல்களை கொண்டுள்ளது.

ஓலா அறிமுகம் செய்திருக்கும் இரண்டு புதிய ஸ்கூட்டர்களிலும் 1.5 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கிறது. இது முழு சார்ஜ் செய்தால் 75 கிலோமீட்டர்கள் வரை ரேஞ்ச் வழங்குகிறது. இந்த ஸ்கூட்டர்களில் இரண்டு பேட்டரிகள் இருப்பதால், அதிகபட்சம் 146 கிலோமீட்டர் வரையிலான ரேஞ்ச் கிடைக்கும்.
இரண்டு ஸ்கூட்டர்களும் மணிக்கு அதிகபட்சம் 70 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும். இந்த ஸ்கூட்டரில் 2.9 கிலோவாட் ஹப் மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்கூட்டர் மணிக்கு 40 கிலோமீட்டர் வேகத்தை 4.8 நொடிகளில் எட்டிவிடும் திறன் கொண்டுள்ளது. இதில் எல்.சி.டி. இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ப்ளூடூத் கனெக்டிவிட்டி போன்ற வசதிகள் உள்ளன.






