என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sports bike"

    • இந்த சம்பவம் சிசிடிவி கேமராக்களில் பதிவாகி தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
    • ஹயாபூசா பைக் சாலையில் சிறிது தூரம் சென்று மின் கம்பத்தில் மோதியது

    கர்நாடக மாநிலம் மைசூரில் நடந்த சாலை விபத்தின் அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.

    ஜூலை 6 ஆம் தேதி நடந்த இந்த சம்பவம் தாமதமாக வெளிச்சத்துக்கு வந்தது. வேகமாக வந்த ஸ்போர்ட்ஸ் பைக் மோதியதில் உணவு டெலிவரி முகவரும், பைக்கில் சென்ற ஒரு இளைஞரும் உயிரிழந்தனர். இந்த சம்பவம் சிசிடிவி கேமராக்களில் பதிவாகி தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

    ஜொமாட்டோ டெலிவரி ஊழியராக பணிபுரியும் கார்த்திக், சாலையோரத்தில் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அதே நேரத்தில், சையத் சரூன் என்ற இளைஞர் சுசுகி ஹயாபூசா ஸ்போர்ட்ஸ் பைக்கில் அதிவேகமாக வந்து கார்த்திக்கின் வாகனம் மீது மோதியுள்ளார். விபத்தில் பலத்த காயமடைந்த கார்த்திக் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    மோதிய பிறகு, ஹயாபூசா பைக் சாலையில் சிறிது தூரம் சென்று மின் கம்பத்தில் மோதியது. இதனால் பைக்கில் இருந்த பெட்ரோல் கசிந்து தீப்பிடித்தது. விபத்தில் பலத்த காயமடைந்த சையத், உள்ளூர்வாசிகளால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், ஆனால் சிகிச்சையின் போது இறந்தார். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

    • பனிகேல் V4 S மாடலின் விலை ரூ. 2.2 லட்சம் அதிகம் ஆகும்.
    • இந்த பைக்கில் டூயல் பீம் அலுமினியம் ஃபிரேம் உள்ளது.

    அப்ரிலியா நிறுவனத்தின் RSV4 ஃபேக்டரி மாடல் இந்திய சந்தையில் விற்பனைக்கு கிடைக்கிறது. புதிய அப்ரிலியா ஸ்போர்ட்ஸ் பைக்கின் விலை ரூ. 31 லட்சத்து 26 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. முன்னதாக அப்ரிலியா RSV4 மாடல் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

    பிளாக்ஷிப் மாடல் என்பதால் RSV4 ஃபேக்டரி மாடலில் ரேசிங் ஸ்டைல் ஏரோடைனமிக்ஸ், சக்திவாய்ந்த என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்திய சந்தையில் அப்ரிலியா RSV4 ஃபேக்டரி மாடல் டுகாட்டி நிறுவனத்தின் பனிகேல் V4 S மாடலுக்கு போட்டியாக அமைகிறது. டுகாட்டி பனிகேல் V4 S மாடலின் விலை ரூ. 2.2 லட்சம் அதிகம் ஆகும்.

     


    புதிய RSV4 ஃபேக்டரி மாடலில் 1099 சிசி, V4 என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 214 ஹெச்.பி. பவர், 125 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இந்த பைக்கில் டூயல் பீம் அலுமினியம் ஃபிரேம் மற்றும் அசத்தலான ஸ்விங் ஆர்ம் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இத்துடன் 43 மில்லிமீட்டரில் முழுமையாக அட்ஜஸ்ட் செய்யக்கூடிய ஒலின்ஸ் யு.எஸ்.டி. ஃபோர்க், பின்புறம் எலெக்ட்ரிக் முறையில் இயக்கப்படும் மோனோஷாக் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த மோட்டார்சைக்கிளில் 17.9 லிட்டர்கள் ஃபியூவல் டேன்க் வழங்கப்பட்டுள்ளது. 

    • ஓலா ஸ்போர்ட்ஸ் பைக்கின் புகைப்படங்களை தனது எக்ஸ் பக்கத்தில் பவிஷ் அகர்வால் பகிர்ந்துள்ளார்.
    • இந்த பைக்கின் எக்ஸ் ஷோ ரூம் விலை 1.50 லட்சமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .

    ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் ஆரோஹெட் எலெக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் பைக் விரைவில் சந்தைக்கு வரும் என்று அந்நிறுவனத்தின் சி.இ.ஓ. பவிஷ் அகர்வால் தெரிவித்துள்ளார்.

    ஆரோஹெட் எலெக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் பைக்கின் புகைப்படங்களை தனது எக்ஸ் பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார்.

    இந்தாண்டு ஆகஸ்ட் மாதம் ஆரோஹெட் ஸ்போர்ட்ஸ் பைக் இந்தியாவில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த பைக்கின் எக்ஸ் ஷோ ரூம் விலை 1.50 லட்சமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ×