search icon
என் மலர்tooltip icon

    பைக்

    புதுப்பிக்கப்பட்ட 450 ரேஞ்ச் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்தியாவில் அறிமுகம் செய்தது ஏத்தர் நிறுவனம்
    X

    புதுப்பிக்கப்பட்ட 450 ரேஞ்ச் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்தியாவில் அறிமுகம் செய்தது ஏத்தர் நிறுவனம்

    • புதுப்பிக்கப்பட்ட 450 எஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ரூ.1.30 லட்சத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது.
    • இந்த ஸ்கூட்டரை ஒருமுறை முழுவதுமாக சார்ஜ் செய்தால் 105 கிமீ தூரம் ஓட்ட முடியும்.

    ஏத்தர் எனர்ஜி நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதுப்பிக்கப்பட்ட 450 ரேஞ்ச் எலெக்ட்ரிக் கூட்டரை அறிமுகம் செய்துள்ளது.

    இதில், 450 எஸ், 450 எக்ஸ் 2.9 kWh 450 எக்ஸ் 3.7 kWh ஆகிய 3 புதுப்பிக்கப்பட்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு வந்துள்ளது.

    புதுப்பிக்கப்பட்ட 450 எஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் எக்ஸ் ஷோ ரூம் விலையாக ரூ.1.30 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது பழைய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலையை விட 4,400 ரூபாய் அதிகமாகும்.

    புதிய நீல நிறத்தில் அறிமுகமாகியுள்ள இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இப்போது சற்று வேகமான 350W-லிருந்து 375W சார்ஜருடன் வருகிறது. ஒருமுறை முழுவதுமாக சார்ஜ் செய்தால் 105 கிமீ தூரம் ஓட்ட முடியும்.

    புதுப்பிக்கப்பட்ட 450 எக்ஸ் 2.9 kWh 1.47 Pro Pack ஸ்கூட்டரின் எக்ஸ் ஷோ ரூம் விலையாக 1.64 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது பழைய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலையை விட 6,400ரூபாய் அதிகமாகும்.

    இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இப்போது 700W சார்ஜருடன் வருகிறது. இதில் ஒருமுறை முழுவதுமாக சார்ஜ் செய்தால் 105 கிமீ தூரம் ஓட்ட முடியும்.

    புதுப்பிக்கப்பட்ட 450 எக்ஸ் 3.7 kWh 1.57 Pro Pack எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை 1.77 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது பழைய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலையை விட 2,000 ரூபாய் அதிகமாகும். இதில் ஒருமுறை முழுவதுமாக சார்ஜ் செய்தால் 130 கிமீ தூரம் ஓட்ட முடியும்.

    Next Story
    ×