என் மலர்tooltip icon
    TNLGanesh

    About author
    அச்சு ஊடக துறையில் 12 வதுஆண்டு பயணம். மலை பயணமும்,மழையில் பயணமும் பிடித்தமான ஒன்று. படைப்பியலில் அதிக ஆர்வம் . இயற்கையின் அழகை தனிமையில் ரசிக்க பிடிக்கும். நகர்வுகளை கண்டறிய பிடிக்கும். நான் தமிழின் மூத்த மகன் என்பதில் பெருமை.
      • விழாவில் மூப்பன்ஹபீபுர் ரஹ்மான் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
      • 86 மாணவர்களுக்கும், 92 மாணவிகளுக்கும் விலையில்லா சைக்கிள் வழங்கப்பட்டது.

      கடையநல்லூர்:

      தமிழ்நாடு அரசு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா கடையநல்லூர் மசூது தைக்கா மேல்நிலைப்பள்ளியில், பள்ளியின் தாளாளர் பட்டத்து சாஹிப் ஹஸன்மக்தூம் ஆலிம் சாகிப் தலைமையில் நடந்தது. பள்ளியின் தலைமை ஆசிரியர் சிக்கந்தர் ரஹிமான் முன்னிலை வகித்தார். கடையநல்லூர் நகர் மன்ற தலைவர் மூப்பன்ஹபீபுர் ரஹ்மான் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பள்ளியின் தாளாளருடன் இணைந்து மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். தொடந்து 86 மாணவர்களுக்கும், 92 மாணவிகளுக்கும் தமிழ்நாடு அரசு விலையில்லா சைக்கிள் வழங்கப்பட்டது.

      விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக நகர்மன்ற உறுப்பினர்கள் முகமதுஅலி , இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர்மன்ற உறுப்பினர் நிலோபர் அப்பாஸ், பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியர் முகமதுபுகாரி, முன்னாள் பட்டதாரி ஆசிரியர் உதுமான், தி.மு.க. நகர தகவல் தொழில்நுட்ப அணி ஜாஹிர் உசேன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

      • வடக்கு ரத வீதியில் உள்ள மண்டகப்படியில் இருந்து மண்டகப்படிதாரர்கள் கிளம்பி கோவிலுக்கு சென்றனர்.
      • விழாவை முன்னிட்டு கோவிலில் கோமதி அம்மனுக்கு அனுக்ஞை பூஜை நடந்தது.

      சங்கரன்கோவில்:

      சங்கரன்கோவில் சங்கர நாராயண சுவாமி கோவிலில் பிரசித்தி பெற்ற ஆடித்தபசு திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக மண்டகப்படி தாரர்களான கம்மவார் நாயுடு மகாஜன சங்கம் சார்பில் கொடியேற்றத்தை முன்னிட்டு நேற்று சுருள் அழைப்பு நிகழ்ச்சி நடந்தது. வடக்கு ரத வீதியில் உள்ள மண்டகப்படியில் இருந்து கிளம்பி கோவிலுக்கு சென்றனர்.

      பின்னர் கோவிலில் கோமதி அம்மனுக்கு அனுக்ஞை பூஜை நடந்தது. இதில் முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி எம்.எல்.ஏ.வுமான கடம்பூர் ராஜூ, கம்மவார் நாயுடு மகாஜன சங்க மண்டல தலைவர் சரஸ்வதி ஓட்டல் சின்னசாமி, நகர தலைவர் பொறியாளர் அசோக்குமார், செயலாளர் வெங்கடபதி, பொருளாளர் சங்கரநாராயணன், ஆர்.வி.எஸ். துரைராஜ், டாக்டர்கள் சுப்பாராஜ், போத்திராஜ், சாந்தி, அம்சவேணி, வக்கீல்கள் மாதவரம், புஷ்பராஜ், பிரதாப் மற்றும் வக்கீல்கள், சமுதாய நிர்வாகிகள் மற்றும் பல்வேறு கிராமங்களை சேர்ந்த சமுதாய மக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

      • அடிக்கல் நாட்டு விழாவுக்கு பாப்பாக்குடி ஒன்றிய செயலாளர் மாரி வண்ணமுத்து முன்னிலை வகித்தார்.
      • நிகழ்ச்சியில் ஒன்றியக் குழு உறுப்பினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

      ஆலங்குளம்:

      ஆலங்குளம் அருகே உள்ள உடையாம்புளியில் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் நிதியில் இருந்து ரூ. 8.50 லட்சம் மதிப்பில் அலங்கார தளக்கல் சாலை அமைக்க அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. உடையாம்புளி காமராஜர் நகரில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு பாப்பாக்குடி ஒன்றிய செயலாளர் மாரி வண்ணமுத்து முன்னிலை வகித்தார். இதில் மாவட்ட ஊராட்சி தலைவர் தமிழ்செல்வி போஸ் தலைமை தாங்கி அடிக்கல் நாட்டினார்.

      நிகழ்ச்சியில் ஒன்றியக் குழு உறுப்பினர் சுபாஷ் சந்திர போஸ், ஓடை மறிச்சான் ஊராட்சி தலைவர் பொன்ராஜ், துணை தலைவர் இசக்கிமுத்து, தி.மு.க. நிர்வாகிகள் சந்தன சுப்பிரமணியன், சந்தனமுத்து, இசக்கிமுத்து, மாசாணம் , முத்துக்குட்டி, அய்யாதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

      • பாலமுருகன் பட்டாசு கடையில் டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார்.
      • விசாரணையில் முகமது அலி, சுடலைகுமார் ஆகியோர் டிரைவரிடம் செல்போனை திருடியது தெரிய வந்தது.

      தென்காசி:

      விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 53). இவர் அங்குள்ள பட்டாசு கடையில் டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார். தென்காசியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு கடந்த 18-ந் தேதி வந்தபோது தென்காசி பழைய பேருந்து நிலையத்தில் வைத்து அவரது செல்போனை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். அது குறித்து தென்காசி போலீசில் புகார் அளித்திருந்த நிலையில் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் கவிதா மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் மாடசாமி தலைமையிலான போலீசார் தென்காசி பழைய பஸ் நிலையம் அருகே சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்த இருவரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் தென்காசி பாறையடி தெருவை சேர்ந்த முகமது அலி(36) மற்றும் ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்த சுடலைகுமார் (36) ஆகியோர் என்பதும், இவர்கள் டிரைவரிடம் செல்போன் திருடியதும் தெரிய வந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

      • ஒரு பெண் ஓட்டி வந்த கார் பிரகாஷ் மீது மோதியதில் அவர் பலத்த காயமடைந்தார்.
      • பிரகாஷின் உடல் அவர் சொந்த ஊரான வீரசிகாமணிக்கு கொண்டு வரப்பட்டது.

      சங்கரன்கோவில்:

      சங்கரன்கோவில் அருகே உள்ள வீரசிகாமணி கிராமத்தை சேர்ந்தவர் மாரியப்பன்-கோமதி தம்பதியரின் மகன் சிதம்பர வேல் பிரகாஷ் (வயது28).

      இவருக்கு திருமணம் ஆகி இந்துமதி என்ற மனைவியும், 1½ வயதில் ஒரு குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் சிதம்பர வேல் பிரகாஷ் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் கனடாவில் உள்ள தனியார் சாப்ட்வேர் கம்பெனியில் பணிபுரிந்து வந்துள்ளார்.

      இவர் தனது மனைவி, குழந்தைகளுடன் அங்கு வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 3-ந்தேதி காலை 9.30 மணிக்கு பிரகாஷ் கனடாவில் வெளியே சென்று தன் வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்கி கொண்டு சைக்கிளில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார்.

      அப்போது அங்கு ஒரு பெண் ஓட்டி வந்த கார் இவர் மீது மோதியதில் பலத்த காயமடைந்தார். அவரை உடனடியாக மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

      இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் கார் ஓட்டி வந்த பெண்ணை கைது செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அப்போது இங்கிருந்து கனடா செல்ல பிரகாஷின் சகோதரர் ரஞ்சித்துக்கு பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என குடும்பத்தினர் கோரிக்கை வைத்தனர்.

      அதனைத் தொடர்ந்து சென்னை பாஸ்போர்ட் அதிகாரிகளை தொடர்பு கொண்ட வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. பாஸ்போர்ட் உடனடியாக கிடைக்க நடவடிக்கை எடுத்தார்.

      இந்த நிலையில் கடந்த 3-ந்தேதி கனடாவில் இறந்த பிரகாஷின் உடல் நேற்று காலை அவர் சொந்த ஊரான வீரசிகாமணிக்கு கொண்டு வரப்பட்டது.

      அவரது உடலுக்கு தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ., சங்கரன்கோவில் தெற்கு ஒன்றிய செய லாளரும், சங்கரன்கோவில் யூனியன் சேர்மனுமான லாலா சங்கரபாண்டியன், மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பெரிய துரை, முருகையா, வார்டு கவுன்சிலர் வேல்தாய், மாவட்ட மாணவர் அணி உதயகுமார், விவேகானந்தா பள்ளி தாளாளர் கல்யாண சுந்தரம், சுரண்டை நகராட்சி சேர்மன் வள்ளிமுருகன் மற்றும் குடும்பத்தினர், ஊர் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். அதனை தொடர்ந்து அவருடைய உடல் தகனம் செய்யப்பட்டது.

      • அம்பையில் 475 மீட்டர் நீளம் கொண்ட 3 நடைமேடைகள் உள்ளது.
      • நடைமேடைகள் நீளத்தை அதிகரித்தால் 24 பெட்டிகள் நிறுத்த முடியும்.

      தென்காசி:

      தென்காசியில் 540 மீட்டர் நீளம் கொண்ட 3 நடைமேடைகள், 507 மீட்டர் நீளம் கொண்ட ஒரு நடைமேடை, கீழப்புலியூர், மேட்டூர், ரவணசமுத்திரம், ஆழ்வார்குறிச்சி, கீழ ஆம்பூர், கல்லிடைக்குறிச்சி, வீரவநல்லூர், பேட்டை, நெல்லை டவுன் ஆகிய ரெயில் நிலையங்களில் 405 மீட்டர் நீளம் கொண்ட ஒற்றை நடைமேடை, பாவூர்சத்திரம், கீழக்கடையம், சேரன்மகாதேவி ஆகியவற்றில் 405 மீட்டர் நீளம் கொண்ட 2 நடை மேடைகளும், அம்பையில் 475 மீட்டர் நீளம் கொண்ட 3 நடைமேடைகளும் உள்ளது.

      நெல்லையில் 24 பெட்டிகள் நிறுத்தும் வகையில் 5 பயணிகள் நடைமேடைகள், 2 சரக்கு லைன், ஒரு வி.ஐ.பி. லைன், 5 ஸ்டேபிளிங் லைன், 2 சிக் லைன் உள்ளது. 24 பெட்டிகள் கொண்ட ரெயில்கள் நிறுத்துவதற்கு 540 மீட்டர் நீளம் கொண்ட நடைமேடை தேவை. தென்காசி மற்றும் நெல்லை ரெயில் நிலையங்களில் மட்டுமே தென்காசி - நெல்லை ரெயில் வழித்தடத்தில் 24 பெட்டிகள் நிறுத்தும் அளவுக்கு நடைமேடை நீளம் உள்ளது. மற்ற நிலையங்களில் இல்லை.

      இந்த மொத்த ரெயில் வழித்தடங்களின் நடைமேடைகளின் நீளத்தை நீட்டித்தால் மட்டுமே கூடுதல் ரெயில் பெட்டிகள் இணைத்து இயக்க முடியும்.

      இதுகுறித்து ரெயில்வே ஆலோசனை குழு உறுப்பினர் பாண்டியராஜா கூறியதாவது:-

      தற்போது நெல்லை - தென்காசி ரெயில் வழித்தடத்தில், அதிகபட்சமாக நெல்லை - மேட்டுப்பாளையம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் 15 பெட்டிகளுடனும், செங்கோட்டை - தாம்பரம் ரெயில் 17 பெட்டிகளுடனும் இயங்கி வருகின்றன. இந்த ரெயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்க வேண்டும் என்றால் குறைந்தபட்சம், நெல்லை - தென்காசி வழித்தடங்களில் உள்ள முக்கிய ரெயில்வே கிராசிங் நிலையங்களான சேரன்மகாதேவி, அம்பை, கீழக்கடையம், பாவூர்சத்திரம் நடைமேடைகளின் நீளத்தை 540 மீட்டர் வரை உடனடியாக நீட்டிக்க வேண்டும். எனவே நடைமேடைகளை கூடுதலாக 135 மீட்டர் நீளம் அதிகரித்தால் 24 பெட்டிகள் நிறுத்த முடியும். ஒரு நடைமேடையை நீட்டிப்பதற்கு தோராயமாக ரூ.15 லட்சம் வரை செலவாகும். எனவே தெற்கு ரெயில்வே உடனடியாக போர்க்கால அடிப்படையில் நெல்லை-தென்காசி ரெயில் வழித்தடத்தில் உள்ள நடைமேடைகளின் நீளத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

      இவ்வாறு அவர் கூறினார்.

      • கலெக்டர் அலுவலகத்தில் தொடங்கிய பேரணி மஞ்சம்மாள் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நிறைவடைந்தது.
      • பேரணியில் சிலம்பாட்டம்,நாட்டுப்புற கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

      தென்காசி:

      தென்காசி மாவட்ட கலெக்டர் கூட்டரங்கில் தமிழ்நாடு நாளை முன்னிட்டு சிறப்பு புகைப்பட கண்காட்சியை மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் ராஜா,பழனிநாடார் ஆகியோர் திறந்து வைத்தனர். பின்னர் மாணவ- மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

      கலெக்டர், பொதுமக்கள் மாணவ- மாணவிகள் சிறப்பு புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டனர். பேரணியானது மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தொடங்கி மேம்பாலம் வழியாக மஞ்சம்மாள் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நிறைவடைந்தது.

      பேரணியில் மஞ்சம்மாள் மகளிர் மேல்நிலைப்பள்ளி, இ.சி.ஈ. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் இலஞ்சி ராமசாமி பிள்ளை மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளை சேர்ந்த 350-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

      பேரணியில் சிலம்பாட்டம் மற்றும் நாட்டுப்புற கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. சிறப்பு புகைப்பட கண்காட்சியை மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பார்வையிட்டனர்.

      இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் தமிழ்செல்வி, துணை தலைவர் உதய கிருஷ்ணன், தென்காசி ஒன்றிய குழு தலைவர் சேக் அப்துல்லா, தென்காசி நகர்மன்ற தலைவர் சாதிர், முதன்மைக் கல்வி அலுவலர் முத்தையா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இளவரசி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) ராமசுப்பிரமணியன் மற்றும் அரசு அலுவலர்கள், பள்ளி மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.

      • நிகழ்ச்சிக்கு பேரூராட்சி தலைவர் சுதா மோகன்லால் தலைமை தாங்கினார்.
      • புதிய சிமெண்ட் சாலை பணியை சிவபத்மநாதன் தொடங்கி வைத்தார்.

      ஆலங்குளம்:

      ஆலங்குளம் பேரூராட்சியில் உள்ள 11, 12, 14 ஆகிய வார்டுகளில் தமிழ்நாடு நகர்புற சாலை மேம்பாட்டு திட்டத்தின் மூலம் ரூ.85 லட்சம் மதிப்பீட்டில் புதிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணியின் தொடக்க விழா நடந்தது.

      விழாவுக்கு பேரூராட்சி தலைவர் சுதா மோகன்லால் தலைமை தாங்கினார். பேரூ ராட்சி துணைத்தலைவர் ஜான்ரவி, பேரூராட்சி கவுன்சிலர்கள் சாலமோன் ராஜா, சுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

      செயல் அலுவலர் ஜா.மாணிக்கராஜ் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் கலந்து கொண்டு புதிய சிமெண்ட் சாலை பணியை தொடங்கி வைத்தார். விழாவில் முன்னாள் கவுன்சிலர்கள் மோகன் லால், அருணாசலம், ராஜ துரை, மாவட்ட பிரதிநிதி அன்பழகன், ஒன்றிய பிரதிநிதி ஆதி விநாயகம் , தொழிலதிபர் மணிகண்டன், சீதாராமன், கிளை செயலாளர் அல்போ ன்ஸ், லிங்க வேல் ராஜா, மகளிரணி சரஸ்வதி, கிளை செயலாளர் சாலமோன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

      • சந்தனகுமார்பட்டியில் தனி நபர் ஒருவர் ஊரின் பெயர் பலகை வைத்ததாக கூறப்படுகிறது.
      • காலையில் தொடங்கிய போராட்டமானது மாலை 5 மணி வரை நீடித்தது.

      தென்காசி:

      பாவூர்சத்திரம் அருகே உள்ள ஆவுடையானூர் ஊராட்சிக்கு உட்பட்ட மாடியனூர், சந்தனகுமார்பட்டி ஆகிய பகுதி பொதுமக்கள் இடையே ஊர் பெயர் பலகை வைப்பது தொடர்பாக கடந்த சில மாதங்களாக பிரச்சினை இருந்து வருகிறது.

      தென்காசி தாசில்தார் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் ஏற்கனவே சமாதான கூட்டம் நடத்தப்பட்ட நிலையில் கூட்டத்தில் அரசு அனுமதி இன்றி வேறு பலகை வைக்க கூடாது என முடிவு எடுக்கப்பட்டிருந்தது.

      இந்நிலையில் சந்தனகுமார்பட்டியில் தனி நபர் ஒருவர் ஊரின் பெயர் பலகை வைத்ததாக கூறப்படுகிறது. அதனை உடனடியாக அகற்ற வேண்டும் என கூறி 40-க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் ஒன்று கூடி திடீரென நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பாவூர்சத்திரம் இன்ஸ்பெக்டர் பொறுப்பு ரமேஷ் கண்ணன் மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

      எனினும் தாசில்தார் வந்து முழுமையான தகவல் தெரிவித்தால் தான் கலைந்து செல்வோம் என தெரிவித்ததால் காலையில் தொடங்கிய போராட்டமானது மாலை 5 மணி வரை நீடித்தது. தென்காசி தாசில்தார் சுப்பையன்,வருவாய் அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அதிகாரி கந்தசாமி உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு 25 நாட்களுக்குள் பெயர் பலகை தொடர்பாக தீர்வு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட வர்களிடம் தெரிவித்தனர். இதனையடுத்து அங்கிருந்து உண்ணாவிரதத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

      • மாநில அளவிலான சதுரங்க போட்டியில் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.
      • அகமது இர்ஷாத் 2-ம் இடத்தையும்,மரிய ஜோபில் 4-ம் இடத்தையும் பெற்றனர்.

      தென்காசி:

      தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் ஆலடி அருணா பவுண்டேஷன் மற்றும் மேக்னஸ் செஸ் அகாடமி இணைந்து நடத்திய மாநில அளவிலான சதுரங்க போட்டியில் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.

      இப்போட்டியில் ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளி 5-ம் வகுப்பு மாணவன் அகமது இர்ஷாத் 2-ம் இடத்தையும், 6-ம் வகுப்பு மாணவன் மரிய ஜோபில் 4-ம் இடத்தையும், 1-ம் வகுப்பு மாணவன் அஜய் கலந்து கொண்டதற்கான சான்றிதழையும் பெற்று மாநில அளவில் சாதனை படைத்தனர். வெற்றி பெற்ற மாணவர்கள் கோப்பைகளை தட்டி சென்றனர். மாநில அளவில் சாதனை படைத்த மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் பள்ளியின் தாளாளர் டாக்டர் சேக் செய்யது அலி மற்றும் பள்ளியின் முதல்வர் சமீமா பர்வீன் ஆகியோர் பாராட்டினர்.

      • காளிதாஸ் தனது சகோதரர் காளிமுத்து, உறவினர் கருப்பசாமி ஆகியோரும் தெருவில் நின்று பேசிக்கொண்டிருந்தார்.
      • காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

      கடையநல்லூர்:

      தென்காசி மாவட்டம் கடைய நல்லூர் தாலுகா திரிகூடபுரம் பஞ்சாயத்து காந்தி நகர் காலனி பகுதியில் வசித்து வருபவர் காளிதாஸ். இவர் பஞ்சாயத்தின் 9-வது வார்டு உறுப்பினராக உள்ளார்.

      வாக்குவாதம்

      சம்பவத்தன்று இவரும், இவரது சகோதரர் காளிமுத்து, உறவினர் கருப்பசாமி ஆகியோரும் தெருவில் நின்று பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கே வந்த அதே பகுதியை சேர்ந்த வெள்ளத்துரை (வயது 38) அவருடைய வீட்டின் முன்பு நீண்ட காலமாக எரிந்து கொண்டிருந்த தெருவிளக்கு திடீரென காணாமல் போய் விட்டதாகவும், இதனை சரி செய்யுமாறும் காளிதாசிடம் முறையிட்டதாக கூறப்படுகிறது.

      அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறி உள்ளது. உடனே வெள்ளத்துரை வீட்டுக்கு சென்று கத்தியை எடுத்து வந்து காளிதாஸ், அவரது சகோதரர் காளிமுத்து மற்றும் உறவினர் கருப்பசாமி ஆகிய 3 பேரையும் கத்தியால் குத்தி கிழித்துள்ளார். இதில் காயமடைந்தவர்கள் அனைவரும் கடையநல்லூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

      கைது

      இதுகுறித்து சொக்கம்பட்டி போலீசார் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து வெள்ளத்துரையை கைது செய்தனர். மேலும் வெள்ளத்துரை அளித்த புகாரின் பேரில் காளிதாஸ் உட்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

      • எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதுதான் திராவிட மாடல் ஆட்சி.
      • இந்த வயது என்பது உங்களுக்கு மிக முக்கியமான வயதாகும்.

      சங்கரன்கோவில்:

      சங்கரன்கோவில் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் கல்வித்துறை சார்பில் தென்காசி மாவட் டத்தில் 53 அரசு பள்ளிகள், 43 அரசு உதவி பெறும் பள்ளிகளில் மொத்தம் 13,053 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா நடந்தது.

      கலெக்டர்

      நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். சங்கரன்கோவில் யூனியன் சேர்மன் லாலா சங்கர பாண்டியன், சங்கரன் கோவில் நகராட்சி சேர்மன் உமாமகேஸ்வரி சரவணன், யூனியன் துணை சேர்மன் செல்வி, நகராட்சி கவுன்சி லர் உமாசங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முத ன்மை கல்வி அலுவலர் முத்தையா வரவேற்று பேசினார்.

      தொடர்ந்து தனுஷ்குமார் எம்.பி., தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ., சதன் திருமலைகுமார் எம்.எல்.ஏ. ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

      விலையில்லா சைக்கிள்

      இதில் சிறப்பு அழைப்பாள ராக தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடர் மீட்புத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் கலந்து கொண்டு மாணவ, மாணவி களுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கி பேசியதாவது:-

      எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதுதான் திராவிட மாடல் ஆட்சி. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். விலையில்லா சைக்கிள், பள்ளி சீருடை, மாணவ, மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்த வருகின்றார்.

      பல்வேறு திட்டங்கள்

      மாணவ, மாணவிகள் ஒன்று புரிந்து கொள்ள வேண்டும். இந்த வயது என்பது உங்களுக்கு மிக முக்கியமான வயதாகும். இந்த வயதில் கல்வி உள்ளி ட்ட அனைத்திலும் சிறப்பாக செயல்பட்டு நல்ல தொரு இடத்தை அடைய வேண்டும்.

      திராவிடம் என்பது சுயமரியாதையை கற்று கொடுத்த இயக்கம். சுய மரியாதை என்பது ஆண்களும்- பெண்களும் சமம் என உணர்த்திய இயக்க மாகும். முதல்-அமைச்சர் மாணவ, மாணவிகளுக்கும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி அயராது உழைத்து வருகின்றார். அவற்றை பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேற வேண்டும்.

      இவ்வாறு அவர் பேசினார்.

      கலந்து கொண்டவர்கள்

      இதில் தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர்கள் தங்கவேல், யூ.எஸ்.டி. சீனிவாசன், மாநில மருத்துவ அணி இணை செயலாளர் டாக்டர் செண்பகவிநாயகம், புளியங்குடி நகராட்சி சேர்மன் விஜயா சவுந்தர பாண்டியன், மாவட்ட அவைத்தலைவர் பத்ம நாதன், மாவட்ட துணை செயலாளர்கள் புனிதா, ராஜதுரை, மனோகரன், பொதுக்குழு உறுப்பினர் மகேஸ்வரி, ஒன்றிய செயலாளர் பெரியதுரை, நகர செயலாளர் பிரகாஷ், மாவட்ட அணி அமைப்பா ளர்கள் கே.எஸ்.எஸ். மாரி யப்பன், முகேஷ், குருவசந்த், அப்பாஸ்அலி, மாவட்ட துணை அமைப்பாளர்கள் சரவணன், ராஜ், கார்த்தி, ராஜராஜன், வீரமணி, ஜெயக்குமார், பிரகாஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட கல்வி அலுவலர் ராஜேஸ்வரி நன்றி கூறினார்.

      ×