என் மலர்
நீங்கள் தேடியது "கனடா விபத்து"
- ஒரு பெண் ஓட்டி வந்த கார் பிரகாஷ் மீது மோதியதில் அவர் பலத்த காயமடைந்தார்.
- பிரகாஷின் உடல் அவர் சொந்த ஊரான வீரசிகாமணிக்கு கொண்டு வரப்பட்டது.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் அருகே உள்ள வீரசிகாமணி கிராமத்தை சேர்ந்தவர் மாரியப்பன்-கோமதி தம்பதியரின் மகன் சிதம்பர வேல் பிரகாஷ் (வயது28).
இவருக்கு திருமணம் ஆகி இந்துமதி என்ற மனைவியும், 1½ வயதில் ஒரு குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் சிதம்பர வேல் பிரகாஷ் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் கனடாவில் உள்ள தனியார் சாப்ட்வேர் கம்பெனியில் பணிபுரிந்து வந்துள்ளார்.
இவர் தனது மனைவி, குழந்தைகளுடன் அங்கு வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 3-ந்தேதி காலை 9.30 மணிக்கு பிரகாஷ் கனடாவில் வெளியே சென்று தன் வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்கி கொண்டு சைக்கிளில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு ஒரு பெண் ஓட்டி வந்த கார் இவர் மீது மோதியதில் பலத்த காயமடைந்தார். அவரை உடனடியாக மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் கார் ஓட்டி வந்த பெண்ணை கைது செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அப்போது இங்கிருந்து கனடா செல்ல பிரகாஷின் சகோதரர் ரஞ்சித்துக்கு பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என குடும்பத்தினர் கோரிக்கை வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து சென்னை பாஸ்போர்ட் அதிகாரிகளை தொடர்பு கொண்ட வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. பாஸ்போர்ட் உடனடியாக கிடைக்க நடவடிக்கை எடுத்தார்.
இந்த நிலையில் கடந்த 3-ந்தேதி கனடாவில் இறந்த பிரகாஷின் உடல் நேற்று காலை அவர் சொந்த ஊரான வீரசிகாமணிக்கு கொண்டு வரப்பட்டது.
அவரது உடலுக்கு தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ., சங்கரன்கோவில் தெற்கு ஒன்றிய செய லாளரும், சங்கரன்கோவில் யூனியன் சேர்மனுமான லாலா சங்கரபாண்டியன், மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பெரிய துரை, முருகையா, வார்டு கவுன்சிலர் வேல்தாய், மாவட்ட மாணவர் அணி உதயகுமார், விவேகானந்தா பள்ளி தாளாளர் கல்யாண சுந்தரம், சுரண்டை நகராட்சி சேர்மன் வள்ளிமுருகன் மற்றும் குடும்பத்தினர், ஊர் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். அதனை தொடர்ந்து அவருடைய உடல் தகனம் செய்யப்பட்டது.






