என் மலர்
- சீவலப்பேரி ஊராட்சியில் உள்ள எஸ்.என். பள்ளிவாசல் கிராமத்தில் பயணிகள் நிழற்குடை கட்டப்பட்டது.
- நிகழ்ச்சியில் நாங்குநேரி சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் பொறுப்பாளர் அழகியநம்பி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நெல்லை:
களக்காடு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சீவலப்பேரி ஊராட்சியில் உள்ள எஸ்.என். பள்ளிவாசல் கிராமத்தில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ. 5 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடையை தமிழக காங்கிரஸ் மாநில பொருளாளர் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
இதில் நாங்குநேரி சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் பொறுப்பாளர் அழகியநம்பி, மாவட்ட துணை தலைவர்கள் சந்திரசேகர், ராஜகோபால், சீவலப்பேரி ஊராட்சி தலைவர் அய்யம்மாள், துணை தலைவர் லலிதா, களக்காடு தெற்கு வட்டார தலைவர் அலெக்ஸ், மத்திய வட்டார தலைவர் காளப்பெருமாள், நகராட்சி காங்கிரஸ் தலைவர் ஜார்ஜ் வில்சன், துணை தலைவர் காமராஜ், மூலைக்கரைப்பட்டி நகர காங்கிரஸ் தலைவர் முத்துகிருஷ்ணன், பாளை தெற்கு வட்டார தலைவர் நளன், கிழக்கு வட்டார தலைவர் சங்கரபாண்டி, கவுன்சிலர்கள் சங்கீதா ஆண்ட்ரூ, முத்துபாண்டி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுந்தர், மாவட்ட பொதுச்செயலாளர் ஓபேத், முன்னாள் ஏ.ஐ.சி.சி. உறுப்பினர் வசந்தா, மகிளா காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் குளோரிந்தாள், மாநில இணை செயலாளர் கமலா, காங்கிரஸ் ஊடகத்துறை ஆறுமுகராஜ் மற்றும் நிர்வாகிகள் ஆர்.ஆர்.துரை, வில்சன், தங்கராஜ், வேலுச்சாமி, வேலம்மாள், ஶ்ரீ தேவி, முருகன், சுகுமார், தி.மு.க. நிர்வாகி செந்தில் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
- களக்காட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட மாநாடு நடைபெற்றது.
- 100 நாள் வேலை திட்டத்தை 200 நாட்களாக உயர்த்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
களக்காடு:
களக்காட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட மாநாடு நடைபெற்றது. இதில் ஏ.ஐ.டி.சி.யின் மாநில தலைவர் காசி விஸ்வநாதன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நெல்லை மாவட்ட செயலாளர் லட்சுமணன், துணைச் செயலாளர் முத்துகிருஷ்ணன், களக்காடு ஒன்றிய செயலாளர் முருகன், விவசாய தொழிலாளர் அணி மாவட்ட செயலாளர் பாலன், இளைஞர் பெருமன்ற சுரேஷ், லெனின், முருகானந்தம் மற்றும் நெல்லை களக்காடு, அம்பை, சேரை, பத்தமடை, நாங்குநேரி, வள்ளியூர் உள்பட மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மாநாட்டில் 17 பேர் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டது. கமிட்டி தலைவராக தங்கையா, செயலா ளராக பாலன், பொருளாளராக ரமேஷ் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதனைதொடர்ந்து 100 நாள் வேலை திட்டத்தை 200 நாட்களாக உயர்த்த வேண்டும். இத்திட்டத்தை நகராட்சி பகுதிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும், அரசு நிர்ணயித்த கூலியை முழுமையாக வழங்கிட வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
- தமிழகத்தில் குறிப்பாக தென்மாவட்டத்தில் நடைபெறும் மிகச்சிறப்பு வாய்ந்த விளையாட்டு கபடி போட்டி.
- தமிழக இளைஞர்கள் தற்போது மிக ஆர்வமாக கலந்து கொண்டு வருகின்றனர் என கூறி கொண்ட விளையாட்டு வீரர்கள் அனைவருக்கும் வாழ்த்துகளை கூறினார்.
திசையன்விளை:
நெல்லை மாவட்டம் திசையன்விளைளில் பெருந்தலைவர் காமராஜரின் 121-வது பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற ஆண், பெண்களுக்கான மின்னொளி கபடி போட்டியினை நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவரும், மாவட்ட திட்டக்குழு தலைவரும், நெல்லை மாவட்ட அமைச்சூர் கபடி கழக சேர்மனுமான வி.எஸ்.ஆர். ஜெகதீஸ் தொடங்கி வைத்தார்.
40-க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்ட இப்போட்டியினை தொடங்கி வைத்து பேசும் போது, தமிழகத்தில் குறிப்பாக தென்மாவட்டத்தில் நடைபெறும் மிகச்சிறப்பு வாய்ந்த விளையாட்டு கபடி போட்டி. இப்போட்டியில் தமிழக இளைஞர்கள் தற்போது மிக ஆர்வமாக கலந்து கொண்டு வருகின்றனர் என கூறி கொண்ட விளையாட்டு வீரர்கள் அனைவருக்கும் வாழ்த்துகளை கூறினார்.
நிகழ்ச்சியில் ராதாபுரம் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஜோசப் பெல்சி, மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் முரளி, தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் எஸ்த்தாக் கெனிஷ்டன், முன்னாள் மாவட்ட பிரதிநிதி ஐ.ஆர். ரமேஷ், ஊராட்சிமன்ற தலைவர் அருள், தக்காளி குமார், முன்னாள் திசையன்விளை நகர தலைவர் ராஜன், திசையன்விளை பேரூராட்சி கவுன்சிலர் கண்ணன், திசையன்விளை போரூர் கழக இளைஞரணி அமைப்பாளர் நெல்சன், ஒன்றிய தொண்டரணி சங்கர், குமார், எழில் ஜோசப், விளையாட்டு வீரர்கள் மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- தடியடியில் உயிர் தப்பிப்பதற்காக தாமிரபரணி ஆற்றில் 17 பேர் குதித்து இறந்தனர்.
- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் ஸ்ரீராம், மோகன் உள்பட பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் மாஞ்சோலையில் பணியாற்றிய தேயிலை தோட்ட தொழிலாளர்கள் கூலி உயர்வு கேட்டு கடந்த 1999-ம் ஆண்டு ஜூலை 23-ந்தேதி ஊர்வலம் சென்றனர்.
நினைவு தினம்
அப்போது நடந்த தடியடியில் உயிர் தப்பிப்பதற்காக தாமிரபரணி ஆற்றில் 17 பேர் குதித்து இறந்தனர். இதன் 24-வது ஆண்டு நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்பட்டது. இதனை ஒட்டி பல்வேறு அரசியல் கட்சியினரும், பல்வேறு அமைப்பினரும் தாமிரபரணி ஆற்றுக்கு வந்து மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி னர்.
பா.ஜனதா சார்பில் நெல்லை வடக்கு மாவட்ட தலைவர் தயா சங்கர் தலைமையில் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ., முன்னாள் மாவட்டத் தலைவர் மகாராஜன், மாவட்ட பொதுச்செயலாளர் வேல் ஆறுமுகம், சுரேஷ் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
மாவீரன் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்கம் சார்பில் நிறுவன தலைவர் மாரியப்ப பாண்டியன் தலைமையில் நிர்வாகிகள் பிரேம்குமார், பாலமுருகன், முத்து கருப்பன் உள்பட ஏராள மானோர் வந்து அஞ்சலி செலுத்தினர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாவட்ட செயலா ளர் லட்சுமணன் தலைமை யில் காசி விஸ்வநாதன் உள்பட பலர் மலரஞ்சலி செலுத்தினர். தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் மாவட்ட தலைவர் சுத்தமல்லி முருகே சன் மற்றும் நிர்வாகிகள் மாரித்துரை, சிந்தா சுப்பிரமணியன், திருமலை மற்றும் நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் ஸ்ரீராம், மோகன், முருகன் உள்பட பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். தமிழர் உரிமை மீட்புகளம் சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் லெனின் கென்னடி தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது. மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் சார்பில் சுந்தர்ராஜ், ரமேஷ் மற்றும் பலர் வந்து அஞ்சலி செலுத்தினர்.
தமிழக மக்கள் முன்னேற்ற கழகம்
தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நெல்லை மாவட்டத் தலைவர் கண்மணி மாவீரன் தலைமையில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் மாநிலத் துணைப் பொதுச் செயலா ளர்கள் சண்முக சுதாகர், நெல்லையப்பன், மாநகர் மாவட்ட செயலாளர் துரைப்பாண்டியன், மாநகர் மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்து பாண்டி யன், மகளிர் அணி நளினி சாந்தகுமாரி, மாநகர் மாவட்ட இளைஞரணி தலைவர் மணிமாறன், மேலப்பாளையம் பகுதி தலைவர் டிக் முத்து, மேலப் பாளையம் பகுதி இணைச் செயலாளர் முருகேஷ், மேலப்பாளையம் பகுதி இளைஞரணி செய லாளர் உலகநாதன், சிந்து, பேராச்சி, காட்டுராணி, கருப்பசாமி, பாலசந்தர், மணி, இசை செல்வா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆதித்தமிழர் கட்சி சார்பில் மாவட்ட செய லாளர் கலைக்கண்ணன் தலைமையிலும், ஆதித்தமி ழர் பேரவை சார்பில் மாவட்ட செயலாளர் ராம மூர்த்தி தலைமையிலும், திராவிட தமிழர் கட்சி சார்பில் கதிரவன் தலைமை யிலும் மரியாதை செலுத்தப் பட்டது. நாம் தமிழர் கட்சி சார்பில் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பா ளர் சத்யா உள்பட திரளான நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.
தமிழர் விடுதலைக் களம் நிறுவனத் தலைவர் ராஜ்குமார் தலைமையில் மாவட்ட செயலாளர் முத்துக்குமார், வண்ணை முருகன் மற்றும் ஏராளமான நிர்வாகிகள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர்.

தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் மாவட்டத் தலைவர் கண்மணி மாவீரன் மற்றும் நிர்வாகிகள் அஞ்சலி செலுத்திய காட்சி.
- ராமையன்பட்டி குப்பை கிடங்கில் கடந்த 20-ந்தேதி திடீரென தீப்பற்றியது.
- தீ காரணமாக எழுந்த புகையானது மாநகரில் 5 கிலோ மீட்டர் சுற்றளவில் பரவியது.
நெல்லை:
நெல்லை மாநகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைக் கழிவுகள் ராமையன்பட்டி யில் உள்ள குப்பை கிடங்கில் சேகரிக்கப்பட்டு வருகிறது. அங்குள்ள குப்பைகள் ஒரு சில நேரங்களில் தீப்பிடித்து வருகிறது. இந்நிலையில் ராமையன்பட்டி குப்பை கிடங்கில் கடந்த 20-ந்தேதி திடீரென தீப்பற்றியது.
5 கிலோ மீட்டர்
அப்போது காற்றின் வேகத்தால் மளமளவென பற்றி எரிந்தது. இதைத்தொடர்ந்து தீயை அணைக்கும் முயற்சியில் பாளை மற்றும் பேட்டை தீயணைப்பு நிலைய வீரர்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர். பெரும்பகுதி தீ அணைக்கப்பட்ட நிலையில் தீ காரணமாக எழுந்த புகையானது மாநகரில் 5 கிலோ மீட்டர் சுற்றளவில் பரவியது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.
அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கடந்த 4 நாட்களாக மூச்சுத் திணறல் காரணமாக அவதிப்பட்டனர். இன்று 4-வது நாளாக குப்பைகளை ஜே.சி.பி. எந்திரம் மூலம் கிளறி அதில் தீப்பிடித்திருந்தால் தண்ணீர் பீய்ச்சி அடித்து அதனை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். அதேபோல் லாரிகள் மூலம் மணல் கொண்டு வரப்பட்டு அதனை கொட்டும் பணியிலும் ஈடுபட்டனர்.
இதனால் பெரும்பாலான இடங்களில் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து தீயை அணைக்கும் முயற்சியில் வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இன்று குறிப்பிட்ட சில இடங்களில் புகை மூட்டம் காணப்பட்டது.
- தி.மு.க தலைமை செயற்குழு உறுப்பினர் வக்கீல் பிரபாகரன் குத்துவிளக்கேற்றி முகாமை தொடங்கி வைத்தார்.
- முகாமில் கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டது.
நெல்லை:
அம்பை யூனியன் சிவந்திபுரம் ஊராட்சியில் மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத்துறை சார்பாக கலைஞரின் வரும் முன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமை தி.மு.க தலைமை செயற்குழு உறுப்பினர் வக்கீல் பிரபாகரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கினார். அதன் பின்னர் அங்கு வைக்கப்பட்டிருந்த மூலிகை மற்றும் உணவு பொருட்கள் கண்காட்சியையும் வக்கீல் பிரபாகரன் பார்வையிட்டார்.இந்த நிகழ்ச்சியில் அம்பை யூனியன் சேர்மன் பரணி சேகர், சிவந்திபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் ஜெகன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் அருண் தபசு பாண்டியன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- பூலம்மாளுக்கும், ராஜதுரைக்கும் இடம் தொடர்பாக பிரச்சினை இருந்து வருகிறது.
- சில நுண்ணறிவு போலீசார் தங்களது சொந்த வியாபார வேலைகளில் தான் அதிக ஆர்வம் காட்டுவதாக சமூக ஆர்வலர்கள் புகார் கூறுகின்றனர்.
நெல்லை:
நெல்லை மாநகர போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பேட்டை போலீஸ் நிலைய நுண்ணறிவு போலீசாக கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு மாநகர ஆயுதப்படையில் பணியாற்றிய செந்தில்குமார் தற்காலிகமாக நியமிக்கப்பட்டார்.
தொடர்ந்து அவர் பணிகளை மேற்கொண்டு வந்த நிலையில், நேற்று அவரை மீண்டும் மாநகர ஆயுதப்படைக்கு மாற்றி போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் உத்தர விட்டுள்ளார். அவர் திடீரென மாற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பேட்டையை சேர்ந்த கொம்பையா என்பவரது மனைவி பூலம்மாளுக்கும், போலீஸ்காரர் செந்தில்கு மாரின் தந்தை ராஜதுரைக்கும் இடம் தொடர்பாக பிரச்சினை இருந்து வருகிறது. இதுசம்பந்தமாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த பிரச்சனை குறித்த வழக்கு நிலுவையில் உள்ளதால் நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் இரு வீட்டாரும் செயல்படுமாறு தெரி விக்கப்பட்டு இருந்தது.
தற்போது அந்த இடப்பிரச்சினை மீண்டும் நடந்து வருவதால், செந்தில்குமார் ஆயுதப்படைக்கு மீண்டும் மாற்றப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளன.
மாநகர பகுதியில் ஒரு சில நுண்ணறிவு பிரிவு போலீசார் நீண்ட காலமாக ஒரே இடத்தில் பணிபுரிவதால், அவர்களுக்கு வேண்டியவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாகவும், சில நுண்ணறிவு போலீசார் தங்களது சொந்த வியாபார வேலைகளில் தான் அதிக ஆர்வம் காட்டுவதாகவும் சமூக ஆர்வலர்கள் மற்றும் சில அமைப்பினர் புகார் கூறுகின்றனர்.
எனவே மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் இதனை கவனத்தில் எடுத்து குறைந்தபட்சம் 3 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்தில் யாரேனும் பணியாற்றினால் அவர்களை வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
- தொடக்க பள்ளியின் கட்டிடங்கள் பழுதடைந்த நிலையில் இருந்தது.
- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி புதிய வகுப்பறை கட்ட ரூ. 30 லட்சம் ஒதுக்கப்பட்டது.
கல்லிடைக்குறிச்சி:
கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள அயன்சிங்கம்பட்டி பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வரும் நிலையில் அந்த பள்ளியின் கட்டிடங்கள் பழுதடைந்த நிலையில் இருந்தது.
இதனால் பள்ளி கட்டிடத்தை சீரமைத்து புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என்று அந்த பள்ளியில் 2-ம் வகுப்பு படிக்கும் இஷா என்ற மாணவி முதல்- அமைச்சருக்கு கடிதம் எழுதினார். இதையடுத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி புதிய வகுப்பறை கட்டுவதற்கு ரூ. 30 லட்சம் ஒதுக்கப்பட்டது.இதனைதொடர்ந்து தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் பிரபாகரன், ஒன்றிய குழு தலைவர் பரணி சேகர் தலைமையில் கட்டிடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
இதில் புதிய கட்டிடம் கட்ட முதல்-அமைச்சருக்கு கோரிக்கை வைத்த மாணவி இஷா அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து பள்ளி குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. விழாவில் பள்ளி ஆசிரியர்கள், பொதுமக்கள், மாணவ- மாணவிகள் உள்பட 300- க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
- ராஜஸ்தானை சேர்ந்த மெஹரா ராம் என்பவர் கடைகளுக்கு நகைகளை விற்பனை செய்து வருகிறார்.
- கொள்ளை கும்பலை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
நெல்லை:
ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டம் சிவாணா பகுதியை சேர்ந்தவர் அனுமந்தர் ராம் (வயது 45). இவர் ஆந்திர மாநிலம் நெல்லூர் பகுதியில் தங்க நகைகளை வாங்கி, நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் உள்ள நகை கடைகளுக்கு விற்பனை செய்து வருகிறார்.
1½ கிலோ நகை கொள்ளை
இதற்காக அவர் நெல்லை சிந்துபூந்துறை செல்விநகர் பகுதியில் ஒரு வீட்டின் மாடியில் கடந்த 10 ஆண்டுகளாக வாடகைக்கு குடியிருந்து வருகிறார். தற்போது நெல்லையில் அவரது உறவினரான ராஜஸ்தானை சேர்ந்த மெஹரா ராம் என்பவர் தங்கியிருந்து கடைகளுக்கு நகைகளை விற்பனை செய்து வருகிறார்.
இந்நிலையில் அவர் தனது வீட்டின் பூஜை அறையில் ரூ.75 லட்சம் மதிப்புள்ள சுமார் 1½ கிலோ நகைகளை ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் வைத்துள்ளார். நேற்று காலை அவர் வீட்டை பூட்டிவிட்டு உடன்குடி சென்ற நிலையில் மாலையில் வந்து பார்த்தபோது வீட்டு கதவு உடைக்கப்பட்டு அங்கு 1½ கிலோ நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.
3 தனிப்படை
இதுகுறித்து தகவல் அறிந்த துணை போலீஸ் கமிஷனர் சரவணகுமார், நெல்லை சந்திப்பு உதவி கமிஷனர் ராஜேஷ்வரன், இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். இந்த துணிகர கொள்ளை சம்பவம் குறித்து சந்திப்பு குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொள்ளை கும்பலை பிடிக்க துணை போலீஸ் கமிஷனர் சரவணக் குமார் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். சம்பவம் நடந்த வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்லும் நபர்கள் அதாவது மெஹரா ராமிற்கு நன்கு தெரிந்த நபர்கள் தான் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்று போலீசார் சந்தேகம் அடைந்துள்ளனர். இதனால் மெஹரா ராமுடன் தொழில் ரீதியாகவும், நட்பின் அடிப்படையிலும் பழக்கத்தில் உள்ள வடமாநில வியாபாரிகள், வடமாநில வாலிபர்களின் விபரங்களை போலீசார் சேகரித்து அவர்களிடம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
மேலும் அப்பகுதியில் சந்திப்பு பஸ் நிலையம் வரையிலும் உள்ள கடைகள், வீடுகளில் பொருத்தப்ப ட்டுள்ள சி.சி.டி.வி. காமிரா காட்சிகளை அடிப்படையாக கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி சரவணன் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார்.
- நிகழ்ச்சியில் தி.மு.க. நிர்வாகிகள், சுகாதார ஆய்வாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் நகராட்சியில் தூய்மைப் பணிகளுக்காக 15-வது நிதி குழு மானியம் மூலம் 20 பேட்டரி வாகனங்கள் சுமார் ரூ. 40 லட்சம் மதிப்பீட்டில் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
ராஜா எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி சரவணன் தலைமை தாங்கினார். கமிஷனர் சபாநாயகம், சுகாதார அலுவலர் பாலச்சந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு புதிய பேட்டரி வாகனங்களை நகராட்சி பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் மேலநீலதநல்லூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பெரியதுரை, நகர செயலாளர் பிரகாஷ், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் சரவணன், சிவகிரி சேது சுப்பிரமணியன், சுகாதார ஆய்வாளர்கள் வெங்கட்ராமன், மாரிசாமி மாரிமுத்து, வக்கீல் சதீஷ், வீரமணி, தாஸ், ஜெயக்குமார், பிரகாஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- ரெயில் நிலையத்தில் உள்ள குப்பைகள், செடி, கொடிகளை மாணவ, மாணவிகள் அகற்றினர்.
- முகாமில் அரிமா சங்க நிர்வாகிகள், ஊராட்சி தலைவர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தென்காசி:
நாட்டு நலப்பணித்திட்டம் மற்றும் பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கத்தின் சார்பாக ஐன்ஸ்டீன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் பாவூர்சத்திரம் ரெயில் நிலையத்தை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். மாணவர்கள் மற்றும் மாணவிகள் 40 பேர் குழுவாக சேர்ந்து பாவூர்சத்திரம் ரெயில் நிலையத்தில் உள்ள குப்பைகள் மற்றும் தேவையற்று வளர்ந்திருக்கும் செடி, கொடிகளை அகற்றினர். இருக்கை களை சீர்படுத்தி சுத்தப்படுத்தினர். பாவூர்சத்திரம் ரெயில்வே நிலையத்தின் நிலைய அதிகாரிகள் ஒத்துழைப்போடு அரிமா சங்கம், ஊராட்சி தலைவர் மற்றும் சமூக ஆர்வலர்களுடன் ஐன்ஸ்டீன் கல்லூரி மாணவர்கள் இணைந்து இந்தப் பணியில் ஈடுபட்டனர். ஏற்பாடுகளை ஐன்ஸ்டீன் கல்லூரி நிர்வாக இயக்குனர் ஆலடி எழில்வாணன்,லயன்ஸ் கிளப் கே.ஆர்.பி.இளங்கோ, லட்சுமி சேகர், பரமசிவன், தளிர் தங்கராஜ், பாண்டியராஜா ஆகியோர் செய்திருந்தனர்.
- பவானி அம்மனுக்கு 21 நறுமணப் பொருள்களால் அபிஷேகங்கள் நடந்தது.
- இரவு 9 மணிக்கு பவானி அம்மனுக்கு நலங்கு வைக்கும் நிகழ்ச்சி நடந்தது.
புளியங்குடி:
புளியங்குடி முப்பெரும் தேவியர் பவானி அம்மன் ஆலயத்தில் அருள் பாலிக்கும் பெரியபாளையத்து பவானி அம்மன், நாக கன்னியம்மன், நாகம்மன் ஆகிய தெய்வங்களுக்கு ஆடிப்பூர வளைகாப்பு விழா நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது.
விழாவில் கலந்து கொள்வதன் மூலம் நீண்ட நாட்கள் திருமண மாகாதவர்களுக்கு திருமணம், குழந்தை பாக்கியம் இல்லாத வர்களுக்கும் வரம் கிடைக்கும் என்பது ஐதீகம். விழாவை முன்னிட்டு மாலை 6 மணிக்கு குருநாதர் சக்தியம்மா ஆடிப்பூர வளைகாப்பு பற்றி ஆன்மிக சொற்பொழி வாற்றினார்.
தொடர்ந்து முப்பெரும் தேவியர் பவானி அம்மனுக்கு பால், தயிர், மஞ்சள், குங்குமம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 21 நறுமணப் பொரு ள்களால் அபிஷேகங்கள் நடந்தது. தொ ர்ந்து மஞ்சள் காப்பு, வளையல் மாலைகள் அலங்காரம் செய்ய ப்பட்டு, 21 வகையான வளைகாப்பு சாதங்கள் படையல் வைத்து, பெரிய தீபாராதனை காண்பிக்கப்பட்டு பூஜைகள் நடந்தது. அதனைத்தொ டர்ந்து குருநாதர் சக்தியம்மா முப்பெரும்தேவியர் பவானி அம்மனுக்கு இரவு 9 மணிக்கு நலங்கு வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. அதனைத் தொடர்ந்து அம்மன்களுக்கு வளைகாப்பு அணியும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பின்னர் கோவில் வளாகத்தில் உள்ள புற்றுக்காளி, நாகக்காளி, சூலக்காளி, ரத்தக்காளி, பவானி பத்ரகாளியம்மன், மகாகாளியம்மன், வள்ளி, தெய்வானை ஆகிய பரிவார தெய்வங்களுக்கும் வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
விழாவில் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் பிரசாத மாக வளைகாப்பு சாதம், வளையல், மஞ்சள் கிழங்கு, மஞ்சள் காப்பு, குங்குமம், தாலிக்கயிறு வழங்கப்பட்டது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் நடைபெற்றது.
இதில் தென்காசி, விருதுநகர், தேனி, மதுரை, நெல்லை, தூத்து க்குடி ஆகிய மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்த ர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை கோவில் குருநாதர் சக்தியம்மா மற்றும் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.







