என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிவந்திபுரம் ஊராட்சியில் கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம்
    X

    சிவந்திபுரம் ஊராட்சியில் கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம்

    • தி.மு.க தலைமை செயற்குழு உறுப்பினர் வக்கீல் பிரபாகரன் குத்துவிளக்கேற்றி முகாமை தொடங்கி வைத்தார்.
    • முகாமில் கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டது.

    நெல்லை:

    அம்பை யூனியன் சிவந்திபுரம் ஊராட்சியில் மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத்துறை சார்பாக கலைஞரின் வரும் முன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமை தி.மு.க தலைமை செயற்குழு உறுப்பினர் வக்கீல் பிரபாகரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

    தொடர்ந்து கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கினார். அதன் பின்னர் அங்கு வைக்கப்பட்டிருந்த மூலிகை மற்றும் உணவு பொருட்கள் கண்காட்சியையும் வக்கீல் பிரபாகரன் பார்வையிட்டார்.இந்த நிகழ்ச்சியில் அம்பை யூனியன் சேர்மன் பரணி சேகர், சிவந்திபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் ஜெகன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் அருண் தபசு பாண்டியன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×