உலகம்

ரஷியாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதால் பிராமணர்களுக்கே லாபம் - அமெரிக்கா

Published On 2025-09-01 10:28 IST   |   Update On 2025-09-01 10:28:00 IST
  • இந்திய பொருட்கள் மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் 50 சதவீதம் வரி விதித்தார்.
  • இந்தியா ரஷியாவினுடைய சலவை நிலையமாக உள்ளது

ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கி உக்ரைன் போருக்கு உதவுவதாக கூறி இந்திய பொருட்கள் மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் 50 சதவீதம் வரி விதித்தார்.

டிரம்பின் எதிர்ப்பை தொடர்ந்தும் இந்தியா தொடர்ந்து ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெயை வாங்கி வருகிறது.

இந்நிலையில், ரஷியாவிடம் இருந்து இந்தியா தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெயை அதை சுத்திகரித்து ஐரோப்பா மற்றும் பிற நாடுகளுக்கு விற்பதாக வெள்ளை மாளிகை ஆலோசகர் பீட்டர் நவாரோ குற்றம் சாட்டினார்.

ஃபாக்ஸ் நியூஸுக்கு அளித்த பேட்டியில் பேசிய பீட்டர் நவாரோ, இந்தியா ரஷியாவினுடைய சலவை நிலையமாக உள்ளது. இந்திய மக்களின் செலவில் பிராமணர்கள் லாபம் ஈட்டுகிறார்கள் . அதை நாம் நிறுத்த வேண்டும். இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் தள்ளுபடி விலையில் ரஷ்ய கச்சா எண்ணெயை வாங்கி, பதப்படுத்தி, அதிக விலைக்கு ஏற்றுமதி செய்கின்றன. இது உக்ரேனியர்களைக் கொல்கிறது. வரி செலுத்துவோராக நாம் என்ன செய்ய வேண்டும்? நாம் அவர்களுக்கு அதிக பணம் அனுப்ப வேண்டும்.

பிரதமர்மோடி ஒரு சிறந்த தலைவர். உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான அவர் விளாடிமிர் புடின் மற்றும் ஜி ஜின்பிங்குடன் ஏன் கூட்டு சேருகிறார் என்பது எனக்குப் புரியவில்லை" என்று தெரிவித்தார். 

Tags:    

Similar News