தட்டம்மை நோய் பரவல் எதிரொலி - மெக்சிகோ பள்ளிகளில் முகக்கவசம் கட்டாயம்
- குவாடலஜாரா முழுவதும் உள்ள பள்ளிகளில் முகக்கவசம் தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
- மெக்சிகோ நாடு முழுவதும் 2,143 தட்டம்மை பாதிப்புகள் பதிவாகி உள்ளன.
மெக்சிகோ தட்டம்மை நோய் பரவல் காரணமாக அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலம், பள்ளிகளில் சுகாதாரப் பரிசோதனைகளை அதிகரித்துள்ளதாகவும், மாணவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு முகக்கவசம் பயன்படுத்த பரிந்துரைத்துள்ளதாகவும் அறிவித்துள்ளது.
மெக்சிகோவின் ஜலிஸ்கோ மாநிலத்தில் கடந்த வாரம் எடுக்கப்பட்ட தடுப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து மெக்சிகோவின் இரண்டாவது பெரிய நகரமான குவாடலஜாரா முழுவதும் உள்ள பள்ளிகளில் முகக்கவசம் தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மெக்சிகோ நாடு முழுவதும் 2,143 தட்டம்மை பாதிப்புகள் பதிவாகி உள்ளன. மேலும் 6,000 பேருக்கு நோய் பாதிப்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இந்த உறுதிப்படுத்தப்பட்ட தொற்றுநோய்களில் பாதிக்கும் மேற்பட்டவை ஜலிஸ்கோவில் பதிவாகின. இருப்பினும் இப்போது மெக்சிகோவின் வடக்குப் பகுதியிலிருந்து தெற்கு எல்லைகள் வரை நோய் பரவல் அடையாளம் காணப்பட்டுள்ளன.
அடுத்த 30 நாட்களுக்கு ஏழு குறிப்பிட்ட சுற்றுப்புறங்களில் உள்ள குவாடலஜாரா பள்ளிகளில் முகக்கவசம் கட்டாயம் என்று ஜலிஸ்கோ சுகாதார அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.