தமிழ்நாடு செய்திகள்

#Vijay விஜய் இமேஜை கெடுக்க முயற்சி- செல்லூர் ராஜூ

Published On 2026-03-07 14:27 IST   |   Update On 2026-03-07 14:27:00 IST
  • செங்கல்பட்டு நீதிமன்றத்தில் விஜயின் மனைவி சங்கீதா இன்று புதிய மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
  • தி.மு.க. கூட்டணி ஒரு மூழ்கும் கப்பல்.

சேலம்:

நடிகரும், தமிழக வெற்றிக்கழகத் தலைவருமான விஜயிடம் இருந்து விவாகரத்து வழங்கக்கோரி செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விஜயின் மனைவி சங்கீதா மனு தாக்கல் செய்து இருந்தார். இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் நடைபெற்ற திருமண விழாவில் விஜய்- திரிஷா பங்கேற்றது பேசு பொருளாகி உள்ளது.

இதனிடையே, தன்னை நீலாங்கரை வீட்டிற்குள் அனுமதிக்குமாறு விஜய்க்கு உத்தரவிடக்கோரி செங்கல்பட்டு நீதிமன்றத்தில் விஜயின் மனைவி சங்கீதா இன்று புதிய மனு ஒன்றை தாக்கல் செய்தார். இதுதொடர்பாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் விஜய்- சங்கீதா விவகாரத்து தொடர்பாக அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறுகையில்,

* விவாகரத்து விவகாரத்தில் விஜய் இமேஜை தி.மு.க. கெடுக்க பார்க்கிறது.

* தி.மு.க. கூட்டணி ஒரு மூழ்கும் கப்பல் என்றார். 

Tags:    

Similar News