தமிழ்நாடு செய்திகள்

சிவகங்கை மாவட்டத்தில் 34 வழக்குகளில் தேடப்பட்டவர் சுட்டுப்பிடிப்பு

Published On 2026-03-07 15:48 IST   |   Update On 2026-03-07 15:48:00 IST
  • நீதிமன்றம் உத்தரவுப்படி போலீசார் பிடிக்க சென்றுள்ளனர்.
  • போலீசார் மீது தாக்குதல் நடத்தி தப்பி ஓட முயற்சித்தபோது போலீசார் சுட்டுப் பிடித்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டத்தில் 34 வழக்குகளில் தேடப்பட்டவரை போலீசார் சுட்டுப் பிடித்துள்ளனர். மிக்கேல் பட்டினத்தைச் சேர்ந்த ஊர்க்காவலன் என்பவரை நீதிமன்ற உத்தரவுப்படி போலீசார் பிடிக்க சென்றுள்ளனர்.

ஊர்க்காவலன் கானூர் சுடுகாடு பகுதியில் பதுங்கியிருந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு சென்ற நிலையில் ஊர்க்காவலன் போலீசாரை தாக்கிவிட்டு தப்பியோட முயற்சித்துள்ளார். அப்போது போலீசார் ஊர்க்காவலனை துப்பாக்கியல் சுட்டு பிடித்துள்ளனர்.

Tags:    

Similar News