தமிழ்நாடு செய்திகள்

Sorry வேண்டாம் நீதி வேண்டும்: போராட்ட களத்தில் குவிந்த த.வெ.க. தொண்டர்கள்

Published On 2025-07-13 09:05 IST   |   Update On 2025-07-13 09:05:00 IST
  • அஜித் குமார் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து த.வெ.க சென்னையில் இன்று காலை போராட்டம் நடத்துகிறது.
  • போதாது போதாது பொய் மன்னிப்பு போதாது போன்ற பதாகைகளையும் தொண்டர்கள் பிடித்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டம் மடப்புரத்தில் சமீபத்தில் கோவில் காவலாளி அஜித் குமார் திருட்டு வழக்கு விசாரணையின் போது போலீஸ்காரர்களால் கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்டார்.

தமிழகம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக 5 போலீசார் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு கட்சியினரும் கண்டன போராட்டம் நடத்தினார்கள்.

அஜித் குமார் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சென்னையில் இன்று காலை போராட்டம் நடைபெறவுள்ளது. இந்த போராட்டத்தில் விஜய் பங்கேற்கவுள்ள நிலையில், காலையில் இருந்தே போராட்டம் நடைபெறும் இடத்திற்கு த.வெ.க. தொண்டர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

போராட்டம் நடைபெறும் இடத்தில் த.வெ.க. தொண்டர்கள் தங்களது கையில் 'Sorry வேண்டாம் நீதி வேண்டும்' என்ற பதாகை பிடித்திருப்பது கவனம் பெற்றுள்ளது. மேலும், போதாது போதாது பொய் மன்னிப்பு போதாது, உயிரின் மதிப்பு தெரியுமா? மன்னராட்சி புரியுமா? போன்ற பதாகைகளையும் தொண்டர்கள் பிடித்துள்ளனர்.

முன்னதாக உயிரிழந்த அஜித்குமாரின் தாயாரிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் Sorry கேட்டார். அதனை விமர்சிக்கும் வகையில் த.வெ.க. தொண்டர்கள் இந்த பதாகையை பிடித்துள்ளனர்.

Tags:    

Similar News