தமிழ்நாடு செய்திகள்

அஜித்குமார் கொலைவழக்கு - நிகிதா நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு

Published On 2026-02-10 19:49 IST   |   Update On 2026-02-10 19:49:00 IST
  • நிகிதா அளித்த நகை திருட்டுப் புகார் முற்றிலும் பொயானது என்பது உறுதி செய்யப்பட்டது.
  • இதுவரை 10-க்கும் மேற்பட்ட காவலர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

திருப்புவனம் மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் மரண வழக்கில், பொய்ப் புகார் அளித்ததாகக் கூறப்படும் பேராசிரியை நிகிதா வரும் மார்ச் 4-ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நிகிதாவை நேரில் விசாரிக்க அனுமதி கோரி சிபிஐ தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம், அவருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் தனது 9.5 சவரன் நகை காணாமல் போனதாக அஜித்குமார் மீது நிகிதா அளித்த புகாரின் பேரில், காவல்துறையினர் அஜித்குமாரை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அஜித்குமார் போலீசாரால் அடித்தே கொல்லப்பட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்த இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது.

இது குறித்து சிபிஐ நடத்திய விசாரணையில், நிகிதா அளித்த நகை திருட்டுப் புகார் முற்றிலும் பொயானது என்பது உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும்நிலையில் இதுவரை 10-க்கும் மேற்பட்ட காவலர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனிடையே நிகிதா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவரைக் கைது செய்ய வேண்டும் என்றும் அஜித்குமாரின் குடும்பத்தினர் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில் நீதிமன்றம் நிகிதாவை ஆஜராக உத்தரவிட்டுள்ளது.  

Tags:    

Similar News