தமிழ்நாடு செய்திகள்

ஜி.கே. மணி ஒரு துரோகி- அன்புமணி ராமதாஸ் கடும் தாக்கு

Published On 2026-02-10 15:36 IST   |   Update On 2026-02-10 15:36:00 IST
  • நேற்றைய தினம் நீதிமன்றத்தில் நமக்கு சாதகமான தீர்ப்பு வந்துள்ளது.
  • ஜி.கே.மணி செய்த துரோகங்கள் நிறைய இருக்கிறது.

ராயப்பேட்டை:

சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்ற பா.ம.க. மாநில இளைஞரணி பொதுக்குழுக் கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:-

* ராமதாசை சுற்றி சில துரோகிகள் இருக்கிறார்கள். அதில் முக்கியமான துரோகி ஜி.கே.மணி.

* நேற்றைய தினம் நீதிமன்றத்தில் நமக்கு சாதகமான தீர்ப்பு வந்துள்ளது. ஆனால் ராமதாசிடம் தவறாக சொல்லி இருக்கிறார்கள்.

* ராமதாசை சுற்றி இருக்கும் துரோகிகள் அவருக்கு தவறான தகவல்களை சொல்லி அவரது மனதை மாற்றுகிறார்கள்.

* ஜி.கே.மணி செய்த துரோகங்கள் நிறைய இருக்கிறது. பொதுக்குழு கூட்டத்தில் பேசும் அளவிற்கு அவருக்கு தகுதி இல்லை என்று பேசினார். 

Tags:    

Similar News