உள்ளூர் செய்திகள்

ஊராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு- தேர்தலை புறக்கணிக்க கோம்பைபட்டி கிராம மக்கள் முடிவு

Published On 2026-02-10 18:00 IST   |   Update On 2026-02-10 18:00:00 IST
  • கோரிக்கையை வலியுறுத்தி கிராம மக்கள் வருகிற சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்கப்போவதாக முடிவு செய்துள்ளனர்.
  • வருவாய்த்துறை அதிகாரிகள் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்துள்ளனர்.

திண்டுக்கல்:

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள கணக்கன்பட்டி ஊராட்சியில் இருந்து கோம்பைபட்டி கிராமத்தை அப்பகுதி மக்களிடம் கருத்தை கேட்காமல் வருவாய்த்துறையினர் பச்சலநாயக்கன்பட்டி ஊராட்சியுடன் இணைத்தனர். எனவே இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த கிராம மக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தனர்.

ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே பச்சலநாயக்கன்பட்டி ஊராட்சியுடன் கோம்பைபட்டி கிராமத்தை இணைக்க கூடாது. கோம்பைபட்டி ஊராட்சியை தனி ஊராட்சியாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கிராம மக்கள் வருகிற சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்கப்போவதாக முடிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து துண்டு பிரசுரங்களையும் கிராம மக்கள் வழங்கி வருவதுடன் தங்கள் கிராமத்தில் பதாகைகளையும் வைத்துள்ளனர். இதனால் வருவாய்த்துறை அதிகாரிகள் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்துள்ளனர்.

Tags:    

Similar News