தமிழ்நாடு செய்திகள்

500 மூத்த தம்பதியருக்கு தாம்பூலம் வழங்கி சிறப்பு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Published On 2026-02-10 13:38 IST   |   Update On 2026-02-10 13:38:00 IST
  • 500 மூத்த தம்பதியினருக்கு வேட்டி மற்றும் சட்டை, புடவை, ரவிக்கை, பழ வகைகள், மஞ்சள், குங்குமம், கண்ணாடி வளையல்கள், குங்குமசிமிழ் உள்ளிட்ட மங்கலப் பொருட்களை வழங்கி சிறப்பு செய்து தொடங்கி வைத்தார்.
  • இன்றைய தினம் தமிழ்நாடு முழுவதும் 3,000 மூத்த தம்பதியினருக்கு சிறப்பு செய்யப்பட்டது.

சென்னை:

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை, வேப்பேரி, பி.கே.என் ஆடிட்டோரியத்தில் நடைபெற்ற விழாவில், இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகக் கட்டுபாட்டிலுள்ள சென்னை மண்டல கோவில்கள் சார்பில் 70 வயது பூர்த்தியடைந்த 500 மூத்த தம்பதியினருக்கு புத்தாடைகள், பழ வகைகள் மற்றும் மங்கலப் பொருட்களை வழங்கி சிறப்பு செய்தார்.

2025-2026-ம் ஆண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கையில், "திருக்கோவில்கள் சார்பில் 70 வயது பூர்த்தியடைந்த 2,000 மூத்த தம்பதியினருக்கு சிறப்பு செய்யப்படும்" என அறிவிக்கப்பட்டதை நிறைவேற்றிடும் வகையில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த 10.11.2025 அன்று திருவல்லிக்கேணியில் 200 மூத்த தம்பதியினருக்கு சிறப்பு செய்தததை தொடர்ந்து மாநிலம் முழுவதும் 2,000 மூத்த தம்பதியினருக்கு சிறப்பு செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, இரண்டாம் கட்டமாக கோவில்கள் சார்பில் 20,000 மூத்த தம்பதியினருக்கு சிறப்பு செய்திடும் வகையில் சென்னை வேப்பேரி பி.கே.என் ஆடிட்டோரியத்தில் நடைபெற்ற விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்றையதினம் 70 வயது பூர்த்தியடைந்த 500 மூத்த தம்பதியினருக்கு வேட்டி மற்றும் சட்டை, புடவை, ரவிக்கை, பழ வகைகள், மஞ்சள், குங்குமம், கண்ணாடி வளையல்கள், குங்குமசிமிழ் உள்ளிட்ட மங்கலப் பொருட்களை வழங்கி சிறப்பு செய்து தொடங்கி வைத்தார்.

இன்றைய தினம் தமிழ்நாடு முழுவதும் 3,000 மூத்த தம்பதியினருக்கு சிறப்பு செய்யப்பட்டது. இவ்விழாவில், அமைச்சர் பி.கே.சேகர்பாபு, குன்றக்குடி ஆதீனம் பொன்னம்பல அடிகளார், பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதா சல அடிகளார், சிரவை ஆதினம் குமரகுருபர சுவாமிகள், மயிலம் பொம்மபுர ஆதீனம் சிவஞானபாலய சுவாமிகள், வேளாக்குறிச்சி ஆதீனம் சத்திய ஞான மகாதேவ தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், ஸ்ரீபெரும்புதூர் ஜீயர் அப்பன் உலகாரிய இராமனுஜ எம்பார் சுவாமிகள், மேயர் பிரியா, பாராளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன், சட்டமன்ற உறுப்பினர் இ.பரந்தாமன், தாயகம் கவி, வெற்றியழகன், ஜோசப் சாமுவேல், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மணிவாசன், இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் துரை. ரவிச்சந்திரன், ஆலோசனைக் குழு உறுப்பினர் சுகி சிவம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

Tags:    

Similar News