உள்ளூர் செய்திகள்

உடுமலையில் மின் வயர்களை திருடியதாக கூறி வாலிபர்கள் 2 பேரை மரத்தில் கட்டி வைத்து தாக்குதல்

Published On 2026-02-10 17:30 IST   |   Update On 2026-02-10 17:30:00 IST
  • கார்த்திக்குமார் மற்றும் கருப்புசாமி ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
  • உடுமலை அமராவதி போலீசார் விசாரணை நடத்தினர்.

உடுமலை:

திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியில் வாலிபர்கள் 2பேரை மரத்தில் கட்டி வைத்து சிலர் தாக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலை தளங்களில் வைரலாக பரவியது.

இதுகுறித்து உடுமலை அமராவதி போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அப்பகுதியை சேர்ந்த வாலிபர்கள் கார்த்திக்குமார், கருப்புசாமி ஆகியோர் மானுப்பட்டி பகுதியில் மோட்டார் வயர்கள் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதாகவும், அவர்களை அப்பகுதியை சேர்ந்த சிலர் பிடித்து மரத்தில் கட்டி வைத்து தாக்கியதும் தெரிய வந்தது.

இதையடுத்து கார்த்திக்குமார் மற்றும் கருப்புசாமி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களை மரத்தில் கட்டி வைத்து தாக்கிய 2 பேர் மீது வன்கொடுமை தடுப்புச்சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Tags:    

Similar News