தமிழ்நாடு செய்திகள்

மதுரை விமான நிலையத்தில் ரூ.9.5 கோடி மதிப்பிலான உயர்தர கஞ்சா பறிமுதல்

Published On 2026-02-10 18:23 IST   |   Update On 2026-02-10 18:23:00 IST
  • பாங்காக்கில் இருந்து கொழும்பு வழியாக வந்த பயணியிடம் அதிகாரிகள் சோதனை.
  • சாக்லேட் பாக்கெட்டுகளில் மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர்.

மதுரை விமான நிலையத்தில் பாங்காக்கில் இருந்து கொழும்பு வழியாக மதுரை வந்த ஆண் பயணியிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது அவர் சாக்லேட் பாக்கெட்டுகள் வைத்திருந்தது தெரியவந்தது.

அந்த பாக்கெட்டுகளை அதிகாரிகள் பிரித்து பார்த்தனர். அப்போது உயர்தர ஹைட்ரோபோனிக் கஞ்சா மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். பயணியிடம் இருந்து 9.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு 9.5 கோடி ரூபாய் ஆகும். கஞ்சாவை பறிமுதல் செய்த அதிகாரிகள், பயணியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News