தமிழ்நாடு செய்திகள்

தி.மு.க. ஆட்சியில் ஆண்டுதோறும் மின் கட்டணம் உயர்ந்து வருகிறது- எடப்பாடி பழனிசாமி

Published On 2025-07-25 18:37 IST   |   Update On 2025-07-25 18:37:00 IST
  • அதிமுக என்ற கட்சியினால் தான் ரகுபதி எம்எல்ஏ, அமைச்சராக ஆனார்.
  • மாற்றுக் கட்சிக்குப் போன பிறகு அதிமுகவை விமர்சனம் செய்யலாமா?

புதுக்கோட்டை அண்ணா சிலை பகுதியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ரோடு ஷோ நடைபெற்று வருகிறது.

மக்களவை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பில் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பரப்புரை மேற்கொடு வருகிறார்.

அங்கு, எடப்பாடி பழனிசாமிக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பை அளித்தனர்.

இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி அங்கு பேசியதாவது:-

இரவு, பகல் பாராமல் அதிமுக தொண்டர்கள் உழைத்ததால் தான் ரகுபதிக்கு பதவி வழங்கப்பட்டது.

அதிமுக என்ற கட்சியினால் தான் ரகுபதி எம்எல்ஏ, அமைச்சராக ஆனார்.

அதிமுக கொடுத்த அடையாளத்தை வைத்து தானே மாற்றுக் கட்சிக்கு சென்றார் ரகுபதி. மாற்றுக் கட்சிக்குப் போன பிறகு அதிமுகவை விமர்சனம் செய்யலாமா?

திமுக ஆட்சியில் ஆண்டுதோறும் மின் கட்டணம் உயர்ந்து வருகிறது. என் வீட்டிற்கு ரூ.4,000 என்று வந்த மின்கட்டணம் தற்போது ரூ.12,000 வரை வருகிறது.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News