இந்தியா

ஆளுநர்களை தவறாகப் பயன்படுத்தும் மத்திய அரசு- ராகுல் காந்தி

Published On 2025-05-21 15:52 IST   |   Update On 2025-05-21 15:55:00 IST
  • இந்தியாவின் பலம் அதன் பன்முகத்தன்மையில் உள்ளது.
  • ஒவ்வொன்றும் அதற்கேற்ற உரிய குரலுடன் கூடிய மாநிலங்களின் ஒன்றியம்.

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவுடன் கடந்த 15ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவையும் ராகுல் காந்தி பகிர்ந்துள்ளார்.

இந்நிலையில், ராகுல் காந்தி வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

இந்தியாவின் பலம் அதன் பன்முகத்தன்மையில் உள்ளது. ஒவ்வொன்றும் அதற்கேற்ற உரிய குரலுடன் கூடிய மாநிலங்களின் ஒன்றியம்.

மோடி அரசு ஆளுநர்களை தவறாகப் பயன்படுத்தி மாநில அரசுகளின் குரல்வளையை நசுக்கி, தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளைத் தடுக்கிறது.

இது கூட்டாட்சியின் மீதான மத்திய அரசின் ஆபத்தான தாக்குதலை தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News