தமிழ்நாடு

சென்னையில் குஷ்புவை களம் இறக்குகிறது பா.ஜனதா

Published On 2024-03-02 04:39 GMT   |   Update On 2024-03-02 04:39 GMT
  • பிரதமர் யார் என்பதை முடிவு செய்து மக்கள் வாக்களிக்கப் போகும் தேர்தல்.
  • காங்கிரசை மக்கள் வீட்டுக்கு அனுப்பும் தேர்தல்.

சென்னை:

பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பா.ஜனதா களம் இறக்கப் போகும் வேட்பாளர்கள், அவர்கள் போட்டியிடும் தொகுதிகள் பற்றி கட்சி மேலிடம் பரிசீலித்து வருகிறது.

இதில் நடிகை குஷ்பு பெயரும் இடம் பெற்றுள்ளது. சென்னையில் அவரை களம் இறக்க திட்டமிட்டுள்ளனர். தென் சென்னை அல்லது மத்திய சென்னை தொகுதியில் அவர் போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது.

இது பற்றி குஷ்புவிடம் கேட்ட போது, எனக்கு எதுவும் தெரியாது. ஒவ்வொரு தேர்தலிலும் இப்படி பெயர் அடிபடுவது வழக்கமானதுதான். கட்சி என்ன சொல்கிறதோ அதை செய்வேன் என்றார்.

இந்த தேர்தல் நாடு சந்திக்கும் வித்தியாசமான தேர்தல். பிரதமர் யார் என்பதை முடிவு செய்து மக்கள் வாக்களிக்கப் போகும் தேர்தல்.

அடுத்ததாக காங்கிரசை மக்கள் வீட்டுக்கு அனுப்பும் தேர்தல்.

1967-க்கு பிறகு மத்தியில் ஆட்சியில் இருந்தும் தமிழகத்தில் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. ஆகிய கட்சிகளில் தங்களுக்கு யார் சாதகமாக இருப்பார்களோ அவர்கள் மீது சவாரி செய்து பழக்கப்பட்டு விட்டது.

இந்த தேர்தலில் ஏற்கனவே கையில் இருக்கும் தொகுதிகளையாவது தாருங்கள் என்று தி.மு.க.விடம் கையேந்தும் நிலைக்கு வந்துள்ளது. இந்த தேர்தலோடு காங்கிரசை மக்கள் கை கழுவி விடுவார்கள்.

போதை பொருள் புழக்கத்தில் தமிழகம் முதலிடத்துக்கு வந்து விட்டது. ஆனால் அரசு போதையில் மயங்கி கிடக்கிறது.

ரூ.3500 கோடி போதை பொருள் கடத்தலில் தி.மு.க. துணையோடுதான் ஈடுபட்டுள்ளார்கள். எனவே மத்திய அரசு தீவிர விசாரணை நடத்தி உண்மையை வெளிக் கொண்டு வர வேண்டும். சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News