கஞ்சா மாடல் தி.மு.க ஆட்சி..!- கோவையில் இளைஞரை கொடூரமாக தாக்கும் வீடியோவை பகிர்ந்து அண்ணாமலை கண்டனம்
- கஞ்சா மாடல் தி.மு.க ஆட்சியில் தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.
- மாநிலம் முழுவதும் இத்தகைய வன்முறைச் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன.
கஞ்சா மாடல் திமுக ஆட்சியின் கீழ் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது என பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கோவையில் கஞ்சா போதையில் இருந்த கும்பல் இளைஞரை கொடூரமாக தாக்கும் வீடியோவை பகிர்ந்து அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
இது ஒரு இடத்தில நடந்த வன்முறை சம்பவம் அல்ல, சமீபத்தில் திருத்தணி, சென்னை, நேற்று கோவையில் நடந்துள்ளது.
இதுகுறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பாவது:-
கஞ்சா மாடல் தி.மு.க ஆட்சியில் தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.
கோவை கணபதி பகுதியில், கஞ்சா போதையில் இருந்த ஒரு கும்பல் ஒரு இளைஞரை மிகக் கொடூரமாகத் தாக்கியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அங்கிருந்த பொது மக்கள் சரியான நேரத்தில் தலையிட்டிருக்காவிட்டால், அந்தத் தாக்குதல் ஒரு உயிரிழப்பில் முடிந்திருக்கும்.
இது ஒரு தனிப்பட்ட சம்பவம் அல்ல. சமீபத்தில் திருத்தணியிலும், பிறகு சென்னையின் வேளச்சேரியிலும், நேற்று கோவையிலும் என மாநிலம் முழுவதும் இத்தகைய வன்முறைச் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன.
தி.மு.க-வோடு தொடர்புடையவர்கள் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடுவது மீண்டும் மீண்டும் அம்பலமாகும் போது, ஏன் கஞ்சா வலைப்பின்னல் செழித்து வளர்கிறது என்பதும், வன்முறை ஏன் கட்டுக்கடங்காமல் போகிறது என்பதும் தெளிவாகத் தெரிகிறது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.