தமிழ்நாடு செய்திகள்

Karur Stampede Case| சிபிஐ விசாரணைக்காக டெல்லி புறப்பட்டார் த.வெ.க. தலைவர் விஜய்

Published On 2026-03-14 15:34 IST   |   Update On 2026-03-14 15:34:00 IST
  • ஏற்கனவே 2 முறை டெல்லி சி.பி.ஐ. அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரான நிலையில் விஜய் மீண்டும் நாளை விசாரணைக்கு ஆஜராகிறார்.
  • பாஜக தலைவர்களை விஜய் சந்திக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கரூர் பெருந்துயரம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்காக த.வெ.க. தலைவர் விஜய் நாளை ஆஜராகும் நிலையில் இன்று தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டார். 

ஏற்கனவே 2 முறை டெல்லி சி.பி.ஐ. அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரான நிலையில் விஜய் மீண்டும் நாளை விசாரணைக்கு ஆஜராகிறார். 

இதற்கிடையே, டெல்லி செல்லும் விஜய், பா.ஜ.க. தலைவர்களை சந்தித்து கூட்டணி தொடர்பாக பேச உள்ளதாக தகவல் கூறப்படுகிறது.

பாஜக கூட்டணியில் விஜய் இணையலாம் என அடுத்தடுத்து தகவல்கள் வெளியாகி வருகிறது. கூட்டணி செய்தி உண்மை எனில் தவெக தலைவர் விஜய், பாஜக தலைவர்களை சந்திக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கூட்டணி குறித்த செய்திகள் வெளியாகி வரும் நிலையில், விஜய் டெல்லி பயணம் செய்வதால் இது முக்கியத்துவம் வாய்ந்ததாக கூறப்படுகிறது. 



Tags:    

Similar News