தமிழ்நாடு

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 இடங்கள் ஒதுக்கீடு

Published On 2024-03-09 13:58 GMT   |   Update On 2024-03-09 14:10 GMT
  • காங்கிரஸ் மேலிட நிர்வாகிகள் தி.மு.க. தொகுதி பங்கீட்டு குழுவை சந்தித்தனர்.
  • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொகுதி பங்கீட்டு குழுவுடன் அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனை நடத்தினார்.

தி.மு.க. தலைமையிலான கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு காங்கிரஸ் தவிர மற்ற கட்சிகளுக்கு முடிவடைந்த நிலை இருந்தது.

இந்நிலையில், இன்று மாலையில் காங்கிரஸ் மேலிட நிர்வாகிகள் தி.மு.க. தொகுதி பங்கீட்டு குழுவை சந்தித்தனர்.

அதன்படி, சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தொகுதி பங்கீட்டுக் குழுவுடன் காங்கிரஸ் நிர்வாகிகள் சந்தித்தனர்.

தொகுதி பங்கீட்டை இறுதி செய்ய கே.சி.வேணுகோபால், அஜோய்குமார், முகுல் வாஸ்னிக், செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் அண்ணா அறிவாலயம் வந்தனர்.

இதற்கிடையில், காங்கிரஸ் கேட்கும் மொத்த தொகுதிகள் குறித்தும், எந்தெந்த தொகுதிகளை ஒதுக்குவது குறித்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொகுதி பங்கீட்டு குழுவுடன் அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனை நடத்தினார்.

காங்கிரசுக்கு எந்தெந்த தொகுதிகளை ஒதுக்குவது, மக்கள் நீதி மய்யத்திற்கு எந்த தொகுதி ஒதுக்குவது, கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் குறித்தும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விவாதித்தார்.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் 9 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் ஒரு தொகுதி என மொத்தம் 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


Tags:    

Similar News