புதுச்சேரி
த.வெ.க-வில் நாளை இணைகிறார் பாஜக முன்னாள் தலைவர் சுவாமிநாதன்
- பாஜகவில் இருந்து முழுமையாக விலகிக் கொள்கிறேன் என்று அறிவித்தார்.
- புதிய அரசு அமைய முழு வீச்சில் பாடுபடுவேன் என்றார்.
புதுச்சேரி பாஜக மாநிலத் தலைவராக இருந்த முன்னாள் எம்எல்ஏ சாமிநாதன், கடந்த செப்டம்பர் மாதத்தில் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில், "கடந்த 25 ஆண்களுக்கு மேலாக இருந்த பாஜகவில் இருந்து முழுமையாக விலகிக் கொள்கிறேன்.
புதுச்சேரி மாநில வளர்ச்சிக்காக தொடர்ந்து பாடுபடுவேன். புதுச்சேரி மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுப்பேன். ஊழலற்ற, நேர்மையான புதியவர்களை கொண்டு புதிய அரசு அமைய முழு வீச்சில் பாடுபடுவேன்" என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், புதுச்சேரி மாநில பாஜக முன்னாள் தலைவர் சுவாமிநாதன் தவெகவில் நாளை இணைவதாக அறிவித்துள்ளார். கடந்த வாரம் விஜயை நேரில் சந்தித்து அவர் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.