#WomensDay2026 மகளிர் தினத்தையொட்டி பெண்களுக்கு இலவச படகு சவாரி
- சுற்றுலா தலமான புதுச்சேரிக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
- சுற்றுலா பயணிகள் படகு குழாமில் உற்சாகமாக படகு சவாரி செய்ய ஆர்வம் கொள்வார்கள்.
சுற்றுலா தலமான புதுச்சேரிக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் நோணாங்குப்பம், ஊசுட்டேரி படகு குழாமில் உற்சாகமாக படகு சவாரி செய்ய ஆர்வம் கொள்வார்கள்.
இந்தநிலையில் மகளிர் தினத்தையொட்டி அங்கு இலவசமாக படகு சவாரி செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து புதுச்சேரி சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி உத்தரவின்படி சர்வதேச மகளிர் தினத்தையொட்டி இன்று சுற்றுலா வளர்ச்சிக்கழகத்தின் கீழ் இயங்கும் நோணாங்குப்பம் சுண்ணாம்பாறு மற்றும் ஊசுட்டேரி படகு குழாம்களுக்கு வருகை தரும் பெண்கள் கட்டணமின்றி இலவசமாக படகு சவாரி செய்ய லாம்.
அனைத்து பெண்களுக்கும் மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதோடு, இச்சலுகையை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.