சட்டசபை தேர்தல் பாதுகாப்பு பணி - புதுச்சேரியில் துணை ராணுவப்படையினர் அணிவகுப்பு
- சட்டமன்ற தேர்தலையொட்டி பல்வேறு பாதுகாப்பு பணிகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
- சுமார் 50-க்கும் மேற்பட்டோர் வில்லியனூர் சுல்தான்பேட்டை முதல்மாட வீதி, கோட்டைமேடு, கண்ணகி ஹை மாஸ் வழியாக அணிவகுப்பு நடத்தினர்.
புதுச்சேரி:
தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலையொட்டி பல்வேறு பாதுகாப்பு பணிகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதில் புதுச்சேரி மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன், மத்திய தேர்தல் துறை அதிகாரிகள், மற்றும் போலீஸ் டி.ஐ.ஜி. சத்திய சுந்தரம், உத்தரவின்பேரில் ஐ.ஜி. மற்றும் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு மேற்பார்வையில் தேர்தல் பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டம் மேற்கொள்ளப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பொது அமைதியை பேணுதல், குற்ற செயல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை பதட்டமான ஓட்டுச்சாவடியை அடையாளம் காணுதல் மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவதற்காக மத்திய காவல் படை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அதன் முன்னோட்டமாக வில்லியனூர் பகுதியில் சட்டம்-ஒழுங்கு போலீஸ் சூப்பிரண்டு சுப்ரமணியன் மேற்பார்வையில், வட்ட ஆய்வாளர் கலைச்செல்வன் மற்றும் உதவி ஆய்வாளர் திருமுருகன் தலைமையில் இந்திய திபெத்திய எல்லை துணை ராணுவப்படையினர்
சுமார் 50-க்கும் மேற்பட்டோர் வில்லியனூர் சுல்தான்பேட்டை முதல்மாட வீதி, கோட்டைமேடு, கண்ணகி ஹை மாஸ் வழியாக அணிவகுப்பு நடத்தினர்.
இதுபோல் புதுச்சேரியில் பெரிய கடை போலீஸ் நிலையம் அருகே இருந்து ஆம்பூர் சாலை, எஸ்.வி.பட்டேல் சாலை, அண்ணா சாலை, குமரகுரு பள்ளம், மறைமலை அடிகள் சாலை வழியாக புதிய பஸ் நிலையம் வரை துணை ராணுவப்படையினர் அணிவகுப்பு சென்றனர்.
ரோந்து பணியின்போது துணை ராணுவப்படையினர் துப்பாக்கி வைத்திருந்தனர்.