இந்தியா
வாரணாசியில் மோடி மீண்டும் போட்டி... பட்டாசு வெடித்து பாஜகவினர் கொண்டாட்டம்
- 195 இடங்களுக்கான வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது.
- வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி மீண்டும் போட்டியிடுவதால் பாஜக தொண்டர்களிடையே மகிழ்ச்சியடைந்தனர்.
வாரணாசி:
பாராளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.
அதன்படி, 195 இடங்களுக்கான வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. இதில், 28 பேர் பெண்கள், பட்டியலினத்தவர்- 27, ஓபிசி- 57 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
இதில், வாரணாசி மக்களவை தொகுதியில் பிரதமர் மோடி மீண்டும் போட்டியிடுவதால் பாஜக தொண்டர்களிடையே மகிழ்ச்சியடைந்தனர்.
இதனால் வாரணாசியில் உள்ள பாஜக தொண்டர்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்த பட்டாசுகள் வெடித்தும், நடனமாடியும் கொண்டாடினர்.