Mutual Fund முதலீடு இனி பாதுகாப்பா? - SEBI அறிவித்த 6 புதிய விதிகள் என்ன?
- மியூச்சுவல் ஃபண்ட்களில் சில புதிய மாற்றங்களை செபி அறிவித்துள்ளது.
- புதியதாக Life Cycle Funds என்ற வகை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்வார்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், மியூச்சுவல் ஃபண்ட்களில் சில புதிய மாற்றங்களை செபி ( Securities and Exchange Board of India) அறிவித்துள்ளது.
மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் எப்படி பணத்தை முதலீடு செய்ய வேண்டும், முதலீட்டாளர்களுக்கு என்ன தகவல்கள் வழங்க வேண்டும் போன்ற பல விஷயங்களில் செபி சில மாற்றங்களை செய்துள்ளது.
இந்த புதிய விதிகள் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
1. ஈக்விட்டி ஃபண்ட்களுக்கு அதிக சுதந்திரம்
முன்பு இந்திய பங்குச்சந்தைகளில் சரிவு ஏற்பட்டால் பல ஈக்விட்டி ஃபண்ட் மேனேஜர்கள் பணத்தை Cash ஆக வைத்திருக்க வேண்டிய நிலை இருந்தது.
இப்போது புதிய விதிப்படி, ஈக்விட்டி ஃபண்ட்கள் 35% வரை non-equity assets-ல் முதலீடு செய்யலாம். அதாவது தங்கம், வெள்ளி, கடன் பத்திரங்கள் மற்றும் ரியல் எஸ்டேட் தொடர்பான டிரஸ்டுகளில் (InvITs) முதலீடு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய விதி இந்திய பங்குச்சந்தைகளில் சரிவு ஏற்படும் போது முதலீட்டாளர்களின் பணத்தை பாதுகாப்பாக நிர்வகிக்க fund managers-க்கு உதவும்.
2. "Life Cycle Funds" என்ற புதிய திட்டம்
புதியதாக Life Cycle Funds என்ற வகை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
முன்பு ஒரு பணம் சேமிப்பு இலக்குக்காக (financial goal) முதலீடு செய்தால், எந்த fund தேர்வு செய்வது, காலத்திற்கு ஏற்ப portfolio rebalance செய்வது என்றெல்லாம் முதலீட்டாளர்களே கவனிக்க வேண்டியிருந்தது.
முதலீடு செய்பவர்களின் இந்த வேலையை Life Cycle Fund தானே செய்து முதலீட்டாளர்களின் சுமையை குறைகிறது.
இப்போது Life Cycle Fund எப்படி வேலை செய்கிறது?
1. முதலீட்டு காலம் தேர்வு செய்ய வேண்டும் – 5 முதல் 30 ஆண்டுகள்
2. ஆரம்பத்தில் அதிக Equity allocation (அதிக வளர்ச்சி)
3. இலக்கு காலம் நெருங்கும் போது Debt allocation அதிகரிக்கும் (பாதுகாப்பு)
இதனால் முதலீடு சுலபமாகவும், தானாக balance ஆகும் முறையிலும் இருக்கும்.
3. போலியான Diversification-க்கு முற்றுப்புள்ளி
பல முதலீட்டாளர்கள் பல மியூச்சுவல் ஃபண்ட் வாங்கினால் diversification கிடைக்கும் என்று நினைப்பார்கள்.
ஆனால் பல fund-கள் அதே பங்குகளை வைத்திருக்கும். இதையே Portfolio Overlap என்று கூறுவர்.
முன்பு இந்த தகவலை முதலீட்டாளர்கள் third-party websites மூலம் தான் பார்க்க முடிந்தது. இப்போது SEBI விதிப்படி, fund houses ஒவ்வொரு மாதமும் portfolio overlap தகவலை வெளியிட வேண்டும்.
இதனால் முதலீட்டாளர்கள் ஈக்விட்டி , கடன் பத்திரங்கள், ஹைப்ரிட் ஃபண்ட் ஆகியவற்றில் overlap இருக்கிறதா என்று எளிதாக தெரிந்துகொள்ள முடியும்.
4. Sector Funds – ஒரே மாதிரி Portfolio இருக்க கூடாது
முன்பு Banking fund மற்றும் Financial services fund போன்ற sector funds அதே பங்குகளை வைத்திருக்கும் நிலை இருந்தது.
இப்போது புதிய விதிப்படி இரண்டு sector funds-க்கும் 50%-க்கு மேல் overlap இருக்கக்கூடாது. இதனால் sector funds உண்மையான theme-க்கு ஏற்ப முதலீடு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும்.
5. Value Fund & Contra Fund – இரண்டும் ஒரே நிறுவனத்தில்
Value Fund என்பது குறைந்த விலையில் இருக்கும் நல்ல நிறுவனங்களில் முதலீடு செய்யும் fund ஆகும்.
Contra Fund என்பது மார்க்கெட் போக்கிற்கு எதிராக முதலீடு செய்யும் fund ஆகும்.
முன்பு ஒரு fund house இந்த இரண்டில் ஒன்று மட்டுமே launch செய்ய முடியும் என்ற விதி இருந்தது. இப்போது ஒரே fund house Value fund மற்றும் Contra fund இரண்டையும் launch செய்யலாம். ஆனால் portfolio overlap 50%-க்கு மேல் இருக்கக்கூடாது என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
6. Retirement & Children Funds பிரிவு நீக்கம்
SEBI தற்போது Solution-Oriented Funds category-ஐ நீக்கியுள்ளது.
இதில் இருந்த முக்கிய schemes:
1. Retirement Funds
2. Children's Funds
இப்போது இந்த Fundsசம்பந்தப்பட்ட பிற mutual fund categories-க்கு merge செய்யப்படும். இந்த fund-களில் முதலீடு செய்திருப்பவர்களுக்கு fund house நிறுவனம் email அல்லது app notification மூலம் தகவல் வழங்கும்.
இந்த விதிகள் எப்போது நடைமுறைக்கு வரும்?
SEBI அறிவிப்பின் படி புதிய விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துவிட்டது.தற்போதுள்ள mutual fund schemes 6 மாதங்களில் portfolio மாற்றங்களை செய்ய வேண்டும்.
இந்த புதிய விதிகள் மூலம் Mutual fund transparency அதிகரிக்கும். Portfolio diversification தெளிவாக தெரியும். Fund managers-க்கு risk management வசதி கிடைக்கும். எனவே இது இந்திய mutual fund முதலீட்டாளர்களுக்கு நல்ல மாற்றமாக பார்க்கப்படுகிறது.