இந்தியா

VIDEO: மேற்கு வங்க ஆளுநராக பொறுப்பேற்றார் ஆர்.என்.ரவி | R.N. Ravi

Published On 2026-03-12 15:10 IST   |   Update On 2026-03-12 15:10:00 IST
  • இந்த விழாவில் முதல்வர் மம்தா பானர்ஜி கலந்துகொண்டார்.
  • கடந்த மார்ச் 5 ஆம் தேதி சி.வி. ஆனந்த போஸ் ராஜினாமா செய்தார்.

மேற்கு வங்கத்தின் 22வது ஆளுநராக  ஆர்.என்.ரவி இன்று (வியாழக்கிழமை) பதவியேற்றார்.

கொல்கத்தாவில் உள்ள லோக் பவனில் நடைபெற்ற விழாவில், கல்கத்தா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சுஜோய் பால் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

இந்த விழாவில் முதல்வர் மம்தா பானர்ஜி, சட்டமன்ற சபாநாயகர் பிமன் பானர்ஜி, மூத்த அமைச்சரும் கொல்கத்தா மேயருமான ஃபிர்ஹாத் ஹக்கிம் மற்றும் இடதுசாரி முன்னணித் தலைவர் பிமன் போஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பாஜகவை சேர்ந்த எந்தத் தலைவரும் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை.

அதிகாரிகள் மட்டத்தில் தலைமைச் செயலாளர் நந்தினி சக்ரவர்த்தி மற்றும் மூத்த காவல்துறை அதிகாரிகள் உட்பட பல மூத்த அதிகாரிகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

கடந்த மார்ச் 5 ஆம் தேதி சி.வி. ஆனந்த போஸ் ராஜினாமா செய்த பிறகு, மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டார். முன்னதாக நாகலாந்து, மேகாலயா ஆளுநராக செயல்பட்ட ஆர்.என் ரவி 2021 முதல் தற்போது வரை தமிழக ஆளுநராக இருந்தார்.

தனது பதவிக்காலத்தின்போது ஆர்என் ரவி மற்றும் திமுக தலைமையிலான தமிழக அரசு இடையே மோதல் போக்கு நிலவி வந்தது. ஆர்.என்.ரவி முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது. 

இதற்கிடையே தமிழக கூடுதல் பொறுப்பு ஆளுநராக கேரள ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர் இன்று பொறுப்பேற்றார்.  

Tags:    

Similar News