இந்தியா

கடத்தப்பட்ட இளம்பெண்கள்.. மாதக்கணக்கில் பாலியல் சித்ரவதை.. கருக்கலைப்பு செய்த அவலம்

Published On 2024-06-18 12:54 IST   |   Update On 2024-06-18 13:00:00 IST
  • அந்த அறையில் என்னுடன் பல இளம் பெண்கள் இருந்தனர்.
  • எங்களை அடைத்து வைத்து தினமும் அடித்து பாலியல் சித்திரவதை செய்யத் தொடங்கினர்.

பீகார் மாநிலம் முஸாபர்பூரில் உள்ள ஒரு கும்பல் பல பெண்களை அடைத்து வைத்து மாதக்கணக்கில் பாலியல் துன்புறுத்தல் செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது. சமூக வலைதளங்களின் மூலம் இந்த பெண்களை குறிவைத்த அந்த கும்பல் தங்களின் மார்க்கெட்டிங் நிறுவனத்தில் அதிக சம்பளத்தில் வேலை தருவதாக ஆசை வார்த்தை காட்டி வரவழைத்து அவர்களை அடைத்து வைத்து இந்த வெறிச்செயல்களில் ஈடுபட்டுள்ளது.

அவர்களிடம் இருந்து தப்பித்த ஒரு பெண் நேராக சென்று காவல் நிலையத்தில் அளித்த புகாரை அடுத்து இந்த குட்டு வெளிப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து அவர்கள் அடைத்துவைக்கப்பட்ட இடத்துக்கு சென்ற போலீசார் பெண்களை மீட்டனர். குற்றத்தில் ஈடுபட்ட 9 பேர் கொண்ட அந்த குமபல் அங்கிருந்து கம்பி நீட்டிய நிலையில் அவர்கள் மீது வழக்கு பதிந்து போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.

இடதற்கிடையில் பாதிக்கப்பட்ட பெண்கள் அளித்த வாக்குமூலம் நெஞ்சைப் பதற வைப்பதாக உள்ளது. அவர்களில் ஒரு பெண் தனது வாக்குமூலத்தில், கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் என்னைத் தொடர்புகொண்டு வேலை தருவதாக உறுதியளித்த அந்த கும்பலை நம்பி சென்றபோது, என்னை ஒரு அறையில் காத்திருக்க சொன்னார்கள்.

அந்த அறையில் என்னுடன் பல இளம் பெண்கள் இருந்தனர். பின்னர் எங்களை வேறொரு இடத்துக்கு கூட்டிச் சென்ற அவர்கள், மேலும் பல பெண்களிடம் போன் செய்து அதிக சம்பளத்தில் வேலை இருப்பதாக சொல்லக் சொன்னார்கள். இப்படியாக பல பெண்கள் சேர்ந்ததும் எங்களை அடைத்து வைத்து தினமும் அடித்து பாலியல் சித்ரவதை செய்யத் தொடங்கினர். அதனால் உருவான எங்களின் கருவையும் கலைத்தனர் என்று தெரிவித்துள்ளார். 

Tags:    

Similar News