இந்தியா

ரெயிலில் சக பயணியின் இருக்கையில் சிறுநீர் கழித்த நீதிபதி.. மீண்டும் பணியில் சேர்ப்பு - உச்சநீதிமன்றம் எதிர்ப்பு

Published On 2026-01-13 02:46 IST   |   Update On 2026-01-13 02:46:00 IST
  • நீதிபதி, பயணிகளைத் தாக்கியதுடன், டிக்கெட் பரிசோதகரிடமும், தான் நீதிபதி என கூறி தகராறு செய்தார்.
  • பிறழ் சாட்சியம் காரணமாக அவர் விடுவிக்கப்பட்டார்.

மத்தியப் பிரதேசம் இந்தூர் முதல் ஜபல்பூர் வரை செல்லும் ரெயிலில் கடந்த 2018 பயணித்த சிவில் நீதிபதி ஒருவர் மது அருந்திவிட்டு சக பயணிகளுடன் தகராறில் ஈடுபட்டார்.

இதன்போது சகா பயணியின் இருக்கையில் நீதிபதி சிறுநீர் கழித்தார். அப்போது அந்த பெட்டியில் பெண்களும் அமர்ந்திருந்தனர்.

மேலும் நீதிபதி, பயணிகளைத் தாக்கியதுடன், டிக்கெட் பரிசோதகரிடமும், தான் நீதிபதி என கூறி தகராறு செய்தார்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த ரெயில்வே போலீசார் அவருக்கு எதிரான ஆதாரங்களை சமர்ப்பித்தனர்.

இதைதொடர்ந்து துறை ரீதியான விசாரணையில் அவர் குற்றவாளி எனத் தெரிந்ததையடுத்து, 2019-ல் அவரைப் பணியிலிருந்து நீக்கி அம்மாநில ஆளுநர் உத்தரவிட்டார்.

அதேநேரம், அவர் மீதான குற்றவியல் வழக்கில் பிறழ் சாட்சியம் காரணமாக அவர் விடுவிக்கப்பட்டார்.

இதை அடிப்படையாகக் கொண்டு, 2025-ல் மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றம் அந்த நீதிபதியை மீண்டும் பணியில் சேர்க்க உத்தரவிட்டது.

உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது பேசிய அவர்கள், "நீதிபதியின் இந்தச் செயல் மிகவும் அருவருப்பானது" என்று கூறி அவரை மீண்டும் பணியில் அமர்த்தியதற்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டனர்.

அவரை மீண்டும் பணியமர்த்தும் உயர்நீதிமன்றத்தின் முடிவை விமர்சித்த நீதிபதிகள், இது குறித்து மாநில அரசு பதிலளிக்கவும் அவர்கள் உத்தரவிட்டனர்.

Tags:    

Similar News