செய்திகள்

ரூ.18 ஆயிரம் கோடி நிதியை உடனே மத்திய அரசு வழங்க வேண்டும்- தம்பிதுரை

Published On 2018-11-01 06:41 GMT   |   Update On 2018-11-01 06:41 GMT
தமிழக அரசுக்கு வழங்கவேண்டிய ரூ.18 ஆயிரம் கோடி நிதியை உடனே மத்திய அரசு வழங்க வேண்டும் என்று தம்பிதுரை வலியுறுத்தியுள்ளார். #ADMK #ThambiDurai
விராலிமலை:

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்படும் சர்தார் வல்லபாய் படேலுக்கு சிலை திறந்து இருப்பது வரவேற்கத்தக்கது.

மத்திய அரசிடமிருந்து தமிழக அரசிற்கு ரூ.18 ஆயிரம் கோடி நிதி வரவேண்டும் அதை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும். மத்திய அரசு திட்டங்களாக இருந்தாலும் அதை மாநில அரசு தான் செயல்படுத்த வேண்டும்.

எல்லாத் திட்டங்களும் மத்திய அரசு திட்டங்கள் என்ற தோற்றத்தை ஏற்படுத்தி வருகின்றனர். இதுபோன்ற நிகழ்வுகளைத்தான் நான் மத்திய அரசுக்கு எதிராக கருத்து கூறுகிறேன்.


இதேபோன்று தமிழக அரசு குறித்து மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பல்வேறு கருத்துக்களை கூறி வருகிறார். மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் என்னை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார். ஆனால் அவர் தான் சுயபரிசோதனை செய்து கொள்ளவேண்டும்.

எந்த நேரத்தில் தேர்தல் வந்தாலும் அ.தி.மு.க. சந்திக்க தயாராக உள்ளது. அதற்காகத்தான் தொகுதி பொறுப்பாளர்களை அ.தி.மு.க. நியமித்துள்ளது. தற்போது நாங்கள் தேர்தல் பணிகளை தொடங்கி விட்டோம். 20 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெறும்.

தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மத்திய அரசின் திட்டமான கிராமங்களை தத்தெடுக்கும் திட்டத்திற்கு போதிய நிதியை மத்திய அரசு வழங்கவில்லை. பாராளுமன்ற உறுப்பினர் நிதி ரூ.5 கோடியில் இருந்து தான் நான் கிராமங்களை தத்து எடுப்பதற்கு நிதி ஒதுக்கி வருகிறேன்.

கிராமங்களை தத்தெடுக்கும் திட்டத்திற்கு உடனடியாக மத்திய அரசு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். #ADMK #ThambiDurai
Tags:    

Similar News