கிரிக்கெட் (Cricket)

டி20 உலகக் கோப்பை: இந்திய சூழல் வெஸ்ட் இண்டீஸ்க்கு சாதகமாக இருக்கும்- பிராவோ சொல்கிறார்

Published On 2026-01-27 21:37 IST   |   Update On 2026-01-27 21:37:00 IST
  • ஐபிஎல் மூலம் இந்தியாவில் ஏராளமான வீரர்கள் விளையாடியுள்ளனர்.
  • இங்குள்ள சூழ்நிலை நன்றகாக பரிச்சயமானது. இந்த தொடரில் இது நல்ல வாய்ப்பை கொடுக்கும்.

பரிச்சயமான இந்திய சூழல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு சாதமாக இருக்கும் என வெயின் பிராவோ நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெயின் பிராவோ கூறியதாவது:-

வெஸ்ட் இண்டீஸ் அணி அதிகமான பவரும், அதிகமான அனுபவங்களையும் கொண்டுள்ளது. சிம்ரன் ஹெட்மையர், ரோவ்மன் பொவேல், பிரண்டன் கிங் போன்ற வீரர்கள் உள்ளனர். ஷாய் ஹோப் அணியை வழி நடத்துகிறார். அகீல் ஹொசைன் உலகின் சிறந்த டி20 பந்து வீச்சாளராக உள்ளார்.

அத்துடன் இளம் வீரர்கள் ஜெயன்டன் சீல்ஸ், ஷமர் ஜோசப் அணியில் உள்ளனர். ஒட்டுமொத்தத்தில் சிறந்த கலவையான அணியாக உள்ளது. ஐபிஎல் மூலம் இந்தியாவில் ஏராளமான வீரர்கள் விளையாடியுள்ளனர். இங்குள்ள சூழ்நிலை நன்றகாக பரிச்சயமானது. இந்த தொடரில் இது நல்ல வாய்ப்பை கொடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

இவ்வாறு பிராவோ தெரிவித்தார்.

வெஸ்ட் இண்டீஸ் அணி 2 முறை டி20 உலகக் கோப்பையை வென்றுள்ளது. 2016-ல் உலகக் கோப்பையை வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியில் பிராவோ இடம் பிடித்திருந்தார்.

Tags:    

Similar News