கிரிக்கெட் (Cricket)

எம்.எஸ்.தோனியுடன் ஒப்பிட்ட ரசிகர்கள்: ட்ரெண்டிங்கில் ரிச்சா கோஷ்

Published On 2026-01-27 12:18 IST   |   Update On 2026-01-27 12:18:00 IST
  • ரிச்சா கோஷ் கடைசி 2 ஓவரில் 5 சிக்சர்கள் ஒரு பவுண்டரி விளாசியுள்ளார்.
  • ரிச்சா கோஷ் 50 பந்தில் 90 ரன்களை விளாசி அசத்தினார்.

பெண்கள் பிரீமியர் லீக் 2026 சீசனில் வதோதராவில் நடைபெற்ற போட்டியில் ஆர்சிபி- மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடின.

டாஸ் வென்ற ஆர்சிபி பந்து வீச்சை தேர்வு செய்தது. நாட் ஸ்கைவர்-பிரன்ட் சதத்தால் மும்பை இந்தியன்ஸ் 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் குவித்தது.

200 என்ற இலக்குடன் ஆர்சிபி அணி களமிறங்கியது. ஸ்மிருதி மந்தனா 18 ரன்களில் அவுட் ஆக, ரிச்சா கோஷ் தனி ஆளாகப் போராடி 50 பந்துகளில் 90 ரன்கள் விளாசினார். கடைசி பந்தில் ஆட்டமிழந்தார்.

இருப்பினும் ஆர்சிபி அணியால் 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் மட்டுமே எட்ட முடிந்தது. இதன் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் போராடி 15 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி அணி தோல்வியை தழுவி உள்ளது.

ஆர்சிபி அணி தோல்வியடைந்தாலும் அந்த அணியின் வீராங்கனை ரிச்சா கோஷ்-க்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. கடைசி 2 ஓவரில் ஆர்சிபி அணி 43 ரன்களை எடுக்க ரிச்சா கோஷ் முக்கிய பங்காற்றினார். அவர் கடைசி 2 ஓவரில் 5 சிக்சர்கள் ஒரு பவுண்டரி விளாசியுள்ளார்.

வெற்றிக்காக போராடிய ரிச்சா கோஷ் தற்போது சமூகவலைதளங்களில் ட்ரெண்டிங்கில் உள்ளார். அவரை பினிஷ்சர் என்றும் எம் எஸ் தோனியுடன் ஒப்பிட்டும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Tags:    

Similar News