நியூசிலாந்து தொடரில் இருந்து முழுமையாக வெளியேறிய நட்சத்திர வீரர்
- இந்தியா- நியூசிலாந்து அணிகள் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.
- முதல் 3 போட்டிகள் முடிவில் 3-0 என்ற கணக்கில் இந்தியா தொடரை கைப்பற்றியது.
இந்தியா- நியூசிலாந்து அணிகள் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் 3 போட்டிகள் முடிவில் இந்திய அணி 3 போட்டிகளிலும் வெற்றி பெற்ற தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இரு அணிகள் மோதும் 4-வது டி20 போட்டி 28-ந் தேதி நடக்கவுள்ளது.
காயம் காரணமாக முதல் 3 போட்டிகளில் திலக் வர்மா இந்திய அணியில் இடம் பெறவில்லை. அவருக்கு பதிலாக ஷ்ரேயாஸ் ஐயர் இந்திய அணியில் இடம் பிடித்திருந்தார்.
இந்நிலையில் அடுத்து வரும் 2 போட்டிகளில் திலக் வர்மா இடம் பெற மாட்டார் எனவும் அடுத்த இரு போட்டிகளுக்கும் இந்திய அணியுடன் ஷ்ரேயாஸ் ஐயர் பயணிப்பார் எனவும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.
விஜய் ஹசாரே டிராபியின் போது ஏற்பட்ட வயிற்றுத் தசைப்பிடிப்பு காரணமாக திலக் வர்மா இந்த மாத தொடக்கத்தில் ராஜ்கோட்டில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.
தற்போது பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் ஓய்வில் இருக்கும் அவர், காயத்தில் இருந்து மீள்வதற்கான பணிகளைத் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 7-ம் தேதி தொடங்கும் உலகக் கோப்பைக்கு முன்பு அவர் முழு உடற்தகுதியை எட்டுவார் என அணி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஒருநாள் அணியின் துணை கேப்டனான ஷ்ரேயாஸ் ஐயருக்கு, தற்போதைய தொடரில் இதுவரை ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைக்கவில்லை. 2023 டிசம்பருக்குப் பிறகு ஐயர் இந்தியாவுக்காக டி20 போட்டிகளில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.