கிரிக்கெட் (Cricket)

எதிரணி வீரர்களின் மனதில் அச்சத்தை விதைத்து வருகிறது- இந்திய அணியை புகழ்ந்த சுனில் கவாஸ்கர்

Published On 2026-01-26 14:58 IST   |   Update On 2026-01-26 14:58:00 IST
  • நியூசிலாந்து அணி நிர்ணயித்த 154 ரன்கள் என்ற இலக்கை இந்திய அணி வெறும் 10 ஓவர்களிலேயே எட்டிப்பிடித்தது.
  • எதிரணி வீரர்களின் மனதில் அச்சத்தையும் விதைத்து வருகிறது.

இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3-வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரை 3-0 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது.

இந்நிலையில் இந்திய அணி எதிரணி வீரர்களின் மனதில் அச்சத்தை விதைத்து வருவதாக முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-

இந்திய அணி ஒரு சாம்பியன் அணி. அவர்கள் பந்துவீச்சு, பீல்டிங் மற்றும் பேட்டிங் என அனைத்திலும் மிகச் சிறப்பாகச் செயல்படுகிறார்கள். இந்திய அணி தற்போது போட்டிகளில் வெற்றி பெறுவதுடன் மட்டுமல்லாமல், எதிரணி வீரர்களின் மனதில் அச்சத்தையும் விதைத்து வருகிறது.

வரவிருக்கும் டி20 உலகக் கோப்பையை இந்திய அணி சாதாரணமாக எடுத்துக்கொள்ளவில்லை. வீரர்கள் தீவிரமாகப் பயிற்சி செய்து வருகிறது. இந்தத் தொடர் ஒரு ஆரம்பம்'மட்டுமே என்றும் கூறியுள்ளார்.

ரிங்கு சிங் மற்றும் ஹர்திக் பாண்ட்யா போன்ற வீரர்கள் இன்னும் பேட் செய்ய வாய்ப்பு கிடைக்காமலேயே இந்தியா எளிதாக வெல்வது அணியின் திறமையைக் காட்டுகிறது. உலகின் சிறந்த பந்துவீச்சாளர் பும்ரா என கவாஸ்கர் கூறினார்.

மேலும் போட்டி முடிந்த பிறகு இது குறித்துப் பேசிய நியூசிலாந்து முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சைமன் டல், வரவிருக்கும் டி20 உலகக்கோப்பைத் தொடரில் இந்தியா நினைத்தால் இரண்டு அணிகளைக் களமிறக்கலாம். அப்படி இரண்டு அணிகள் விளையாடினாலும், அந்த இரண்டு அணிகளுமே நிச்சயம் முதல் நான்கு இடங்களைப் பிடித்து அரையிறுதிக்குத் தகுதி பெறும். அந்த அளவிற்கு அவர்களிடம் திறமையான வீரர்கள் உள்ளனர்" என்று புகழ்ந்தார்.

அதற்குச் சிரித்துக்கொண்டே சுனில் கவாஸ்கர், "உண்மையில் என்னைக் கேட்டால், அரையிறுதி மட்டுமல்ல, அந்த இரண்டு இந்திய அணிகளுமே இறுதிப்போட்டிக்கு முன்னேறி, கோப்பைக்காகத் தங்களுக்குள் மோதிக்கொள்ளும் என்று சொல்வேன்" என்று அதிரடியாகக் கூறினார். அதாவது இந்திய அணியின் முதல் தர அணியும், இரண்டாம் தர அணியும் மோதினாலே அது உலகக்கோப்பை இறுதிப்போட்டி போலத் தான் இருக்கும் என்று கவாஸ்கர் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News