கிரிக்கெட் (Cricket)

பிசிசிஐ-யின் முன்னாள் தலைவர் இந்திரஜித் சிங் காலமானார்

Published On 2026-01-26 12:49 IST   |   Update On 2026-01-26 12:49:00 IST
  • 1993-ம் ஆண்டு முதல் 1996-ம் ஆண்டு வரை இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக செயல்பட்டார்.
  • பஞ்சாப் மாநில கிரிக்கெட் சங்க தலைவராகவும் செயல்பட்டுள்ளார்.

டெல்லி:

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) இந்திய கிரிக்கெட் அணியை நிர்வகித்து வருகிறது. இதனிடையே, 1993ம் ஆண்டு முதல் 1996-ம் ஆண்டு வரை இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக இந்திரஜித் சிங் பந்த்ரா (வயது 84) செயல்பட்டார். அவர் பஞ்சாப் மாநில கிரிக்கெட் சங்க தலைவராகவும் செயல்பட்டுள்ளார்.

இந்நிலையில், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட பிசிசிஐ முன்னாள் தலைவர் இந்திரஜித் சிங் பந்த்ரா நேற்று மாலை 6.30 மணிக்கு டெல்லியில் உள்ள அவரது வீட்டில் காலமானார். அவரது இறுதிச்சடங்கு இன்று மதியம் நடைபெற உள்ளது. இந்திரஜித் சிங் மறைவிற்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News