கிரிக்கெட் (Cricket)

உலகக் கோப்பையில் பனி முக்கிய பங்கு வகிக்கும்: ஆனால் வருண் சக்ரவர்த்தியை பாதிக்காது- கும்ப்ளே

Published On 2026-01-27 18:17 IST   |   Update On 2026-01-27 18:17:00 IST
  • உலகக் கோப்பை தொடரின்போது பனிப்பொழிவு முக்கிய பங்கு வகிக்கும்.
  • சுழற்பந்து வீச்சாளர்கள் பந்து வீச சிரமப்படுவார்கள்.

20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் வருகிற 7-ந்தேதி முதல் மார்ச் 8-ந்தேதி வரை நடக்கிறது. போட்டிகள் மாலை நேரத்திற்குப் பிறகு தொடங்குவதால் பனிப்பொழிவு அதிகமாக இருக்கும். பனிப்பொழிவின்போது பந்து வீச சிரமமாக இருக்கும். இதனால் 2-வது பேட்டிங் செய்யும் அணிக்கு கூடுதல் சாதகமாக இருக்கும்.

ஆனால், பனிப் பொழிவால் இந்திய சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி திணறமாட்டார் என அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அனில் கும்ப்ளே கூறியதாவது:-

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் நடக்கிறது. போட்டிகள் மாலை நேரத்திற்குப் பின் நடத்தப்படுகிறது. இந்தத் தொடரில் பனி ஆட்டத்தில் ஒரு முக்கிய பங்கு வகிக்கும். இது பந்து வீச்சாளர்களுக்கு எளிதாக இருக்கப்போவதில்லை. ஸ்பின்னர்கள் ஈரப்பந்தை பயன்படுத்தி பந்து வீசி பழகியிருப்பார்கள். இது ஒன்றும் புதிது அல்ல.

இருப்பினும், இந்தியா ஆறுதல் அடையக்கூடிய ஒரு அம்சம் என்னவென்றால், இது வருண் சக்கரவர்த்தி போன்ற ஒருவரைப் பாதிக்கும் என்று நான் நினைக்கவில்லை. ஏனென்றால் அவர் பந்தை பிடிக்கும் விதம் மற்றும் பந்து வீச்சு வேகம் ஆகியவற்றால் பாதிப்பை ஏற்படுத்தும் என நினைக்கவில்லை.

ஈரப்பதம் அல்லாத பந்தை வீசுவது போன்றது இல்லை. என்றாலும், ஈரப்பந்தால் வருண் சக்ரவர்த்தி அதிகம் பாதிக்கப்படுவார் என்று நான் பார்க்கவில்லை. அதேபோல் அக்சர் படேலும் சிறப்பாக பந்து வீசுவார். குல்தீப் யாதவ் மட்டும் அவரது பந்து வீச்சு ஸ்டைலால் பாதிக்கப்படுவார். அப்படி இருந்தாலும், குல்தீப் யாதவ் இந்தச் சூழ்நிலைகளில் பந்துவீசிப் பழக்கப்பட்டவர்தான்.

இவ்வாறு அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News