இந்தியா

ஜார்கண்டில் 2 பழங்குடியின சிறுமிகளை கடத்தி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த கும்பல்

Published On 2026-01-28 01:24 IST   |   Update On 2026-01-28 01:24:00 IST
  • 6 முதல் 7 பேர் கொண்ட அடையாளம் தெரியாத கும்பல் அவர்களை வழிமறித்தது.
  • தலைமறைவாக உள்ள குற்றவாளிகளைப் பிடிக்கத் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

ஜார்கண்ட் மாநிலத்தில் 2 பழங்குடியின சிறுமிகள் கடத்தப்பட்டு, கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ள அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை இரவு, கிரிடி மாவட்டத்தில் பிர்தாண்ட் எல்லைக்குட்பட்ட ஹர்லடி பகுதியில் 2 சிறுமிகளும் கிராமத்தில் நடந்த திருவிழாவை பார்த்துவிட்டு சிறுவன் ஒருவருடன் இரவு வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது அவர்களை வழிமறித்த 6 முதல் 7 பேர் கொண்ட அடையாளம் தெரியாத கும்பல், சிறுவனை துரத்திவிட்டு சிறுமிகள் இருவரையும் கடத்திச் சென்றது.

அவர்களை அருகிலுள்ள விவசாய நிலத்திற்கு அழைத்துச் சென்று, அந்த கும்பல் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளது.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த தலைமறைவாக உள்ள குற்றவாளிகளைப் பிடிக்கத் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். 

Tags:    

Similar News