தமிழ்நாடு செய்திகள்

எங்கள் தலைவரை பார்த்து ஏன் ஆத்திரம்? - விஜய்க்கு ஆதரவாக திமுக அமைச்சரை விளாசிய நாஞ்சில் சம்பத்!

Published On 2026-01-27 22:06 IST   |   Update On 2026-01-27 22:06:00 IST
  • கிழிவது ஒரு இடம்? தைப்பது ஒரு இடமா?
  • தலைவர் விஜயை குறைகாணும் நேரு, முதலில் தன் முகத்தை கண்ணாடியில் காணட்டும்..

திருச்சியில் நடைபெற்ற மொழிப் போர் தியாகிகள் நாள் வீரவணக்க பொதுக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, "தவெக செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய விஜய், 'அழுத்தத்துக்கு நானா பயப்படுவேன்? ஒரு காலத்திலும் பயப்பட மாட்டேன்' என்றெல்லாம் வீர வசனம் பேசியிருக்கிறார்.

இதே விஜய், ஜெயலலிதாவிடம் எப்படி கை கட்டி நின்றார் என்பதை இந்த நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள். ஒரு சினிமா படம் வெளியிட முடியாமல் போனதற்காக, ஜெயலலிதாவை சந்தித்து, "உங்களுக்கு என்றைக்கும் நாங்கள் எதிரி இல்லை" என்று அழுத்தத்துக்கு பயந்து தந்தையுடன் கை கட்டி நின்றவர்தான் விஜய். அவர்தான் இன்று வீரவசனம் பேசுகிறார்" எனப் பேசினார்.

இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள தவெக நிர்வாகி நாஞ்சில் சம்பத், 

"தலைவர் விஜயை குறைகாணும் நேரு, முதலில் தன் முகத்தை கண்ணாடியில் காணட்டும்.. எந்த அழுத்தத்திற்கும் அடிபணிகிறவன் நான் இல்லை என்று முழங்கிய எங்கள் தலைவரை பார்த்து அமைச்சர் நேருவுக்கு ஏன் ஆத்திரம்? ஒரு படம் வெளிவருவதில் வரும் இடையூறை அதிகாரத்திலிருக்கிற முதலமைச்சரை சந்தித்து தீர்வு காண கேட்டால் அது என்ன பஞ்சமா? பாதகமா?

தவெகவை பற்றி கவலைப்படுகின்ற நேரு தன்னுடைய துறையில் ரூ.2000 கோடிக்கு மேல் நடந்த முறைகேடுக்கு ED விடுத்த நோட்டிசுக்கு எங்கெல்லாம் ஓடி ஒழிந்தார்? கிழிவது ஒரு இடம்? தைப்பது ஒரு இடமா? முதலில் உங்கள் கிழிசலை தைத்துக்கொள்ளுங்கள்..!" என தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். 

 

Tags:    

Similar News