இந்தியா

மாலத்தீவு அதிபருக்கு பிரதமர் மோடி அனுப்பிய பதிவு.. தவறாக மொழிபெயர்த்து சர்ச்சையை ஏற்படுத்திய Grok AI

Published On 2026-01-28 01:52 IST   |   Update On 2026-01-28 01:52:00 IST
  • மாலத்தீவின் அதிகாரப்பூர்வ மொழியான 'திவேஹி' மொழியில் எக்ஸ் தளத்தில் நன்றி தெரிவித்துப் பதிவிட்டார்.
  • ஏற்கனவே பெண்களின் ஆபாச படங்களை உருவாக்கியதாக 'Grok' மீது புகார்கள் உள்ளன.

இந்தியாவின் 77வது குடியரசு தினம் கடந்த திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. இந்தியாவின் குடியரசு தினத்துக்கு மாலத்தீவு அதிபர் முகமது முய்சு வாழ்த்து தெரிவித்திருந்தார்.

அதற்குப் பதிலளித்த பிரதமர் மோடி, மாலத்தீவின் அதிகாரப்பூர்வ மொழியான 'திவேஹி' மொழியில் எக்ஸ் தளத்தில் நன்றி தெரிவித்துப் பதிவிட்டார்.

இரு நாடுகளின் மக்கள் நலனுக்காகவும், மாலத்தீவு மக்களின் மகிழ்ச்சியான எதிர்காலத்திற்காகவும் இணைந்து பணியாற்றுவோம் என்று பிரதமர் மோடி பதிவிட்டிருந்தார்.

ஆனால், அந்தப் பதிவை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த 'Grok' ஏஐ, "மாலத்தீவு அரசு இந்தியாவிற்கு எதிரான பிரச்சாரங்களில் ஈடுபட்டது" என்றும், குடியரசு தினத்திற்கு பதிலாக சுதந்திர தினம் என்றும் தவறாக மொழிபெயர்த்தது.

ஏஐ கருவிகளை முழுமையாக நம்புவது ஆபத்தானது என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம் என நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

ஏற்கனவே பெண்களின் ஆபாச படங்களை உருவாக்கியதாக 'Grok' மீது புகார்கள் எழுந்து வருவது குறிப்பிடத்தக்கது.   

Tags:    

Similar News