UP: கணவனை பக்கோடா வாங்கி வர அனுப்பிவிட்டு மாயமான புது மனைவி
- தனது மனைவி வேறொரு இளைஞருடன் சென்றிருக்கலாம் என்று புகாரில் தெரிவித்தார்.
- தாய் வீட்டிற்குச் சென்றிருந்த ரிம்ஜிமை அழைத்து வர பிரீதம் சிங் சென்றார்.
கணவனை பக்கோடா வாங்கி வரச் சொல்லிவிட்டு மனைவி மாயமான ஓடிய சம்பவம் உ.பியில் நிகழ்ந்துள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் அம்ரோஹா மாவட்டத்தைச் சேர்ந்த பிரீதம் சிங் என்பவருக்கும், ராம்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரிம்ஜிம் (18) என்பவருக்கும் கடந்த ஆண்டு டிசம்பர் 1-ம் தேதி திருமணம் நடந்தது.
ஹோலிப் பண்டிகைக்காக தனது தாய் வீட்டிற்குச் சென்றிருந்த ரிம்ஜிமை அழைத்து வர பிரீதம் சிங் சென்றார்.
மார்ச் 9-ம் தேதி, இருவரும் தங்கள் ஊருக்குச் செல்வதற்காக பிலாரி பேருந்து நிலையத்திற்கு வந்தனர்.
பேருந்துக்காகக் காத்திருந்தபோது, ரிம்ஜிம் தனக்குப் பசிப்பதாகவும், அங்கு விற்கப்படும் சூடான பக்கோடாக்களை வாங்கி வருமாறும் கணவரிடம் கேட்டுள்ளார்.
மனைவியின் ஆசையை நிறைவேற்ற பிரீதம் சிங் பக்கோடா வாங்கச் சென்றார். அவர் திரும்பி வந்து பார்த்தபோது, அந்த இடத்தில் ரிம்ஜிம் இல்லை. பேருந்து நிலையம் முழுவதும் தேடியும் அவர் கிடைக்கவில்லை.
தன் மனைவி மாயமானதை உணர்ந்த பிரீதம் சிங், உடனடியாகக் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
தனது மனைவி வேறொரு இளைஞருடன் சென்றிருக்கலாம் என்று பிரீதம் தனது புகாரில் சந்தேகம் தெரிவித்தார்.
வழக்குப்பதிந்த போலீசார், பேருந்து நிலையத்தைச் சுற்றியுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், ரிம்ஜிமின் மொபைல் போன் சிக்னலை வைத்து அவர் எங்கே இருக்கிறார் என்பதை கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.