நாட்டில் சனாதன தர்மத்தைப் பின்பற்றுபவர்களை ஏமாற்றும் எந்த அரசும் மீண்டும் ஆட்சிக்கு வராது - அமித் ஷா
- துறவிகளின் ஆசியுடன், சனாதன தர்மத்தைப் பின்பற்றுபவர்களை ஏமாற்றும் அல்லது ஏமாற்றமடையச் செய்யும் எந்தவொரு அரசாங்கமும் மீண்டும் வராது.
- இதில் தான் உறுதியாக இருப்பதாக அவர் கூறினார்.
சனாதன தர்மத்தைப் பின்பற்றுபவர்களை ஏமாற்றும் அரசு மீண்டும் ஆட்சிக்கு வராது - அமித் ஷா பேச்சு
நாட்டில் சனாதன தர்மத்தை பாதுகாக்கத் தவறும் எந்தவொரு அரசாங்கமும் மீண்டும் ஒருபோதும் ஆட்சிக்கு வராது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலம் காந்திநகரில் நேற்று நடைபெற்ற சுவாமிநாராயண் சிக்ஷாபத்ரி ஆண்டு விழாவில், துறவிகள்- பக்தர்கள் கூட்டத்தில் அமித் ஷா உரையாற்றினார்.
நிகழ்வில் அவர் பேசுகையில், சுதந்திரத்திற்குப் பிறகு சனாதன தர்மத்தைப் பின்பற்றுபவர்கள் நீண்ட காலம் காத்திருந்ததாகவும், சனாதன தர்மத்திற்கு முக்கியத்துவம் அளித்து அதன் கொள்கைகளின்படி ஆட்சி செய்யும் அரசை அவர்கள் எதிர்பார்த்திருந்ததாகவும் குறிப்பிட்டார்.
துறவிகளின் ஆசியுடன், சனாதன தர்மத்தைப் பின்பற்றுபவர்களை ஏமாற்றும் எந்தவொரு அரசாங்கமும் இந்த நாட்டில் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது என்பதில் தான் உறுதியாக இருப்பதாக அவர் கூறினார்.