இந்தியா

ஐரோப்பிய ஒன்றியம் உடனான வர்த்தக ஒப்பந்தத்தால் இந்தியா பெரும் நன்மைகள் என்ன?

Published On 2026-01-27 16:48 IST   |   Update On 2026-01-27 16:48:00 IST
  • ஜவுளி மற்றும் ஆடைகள் மீதான வரி 12% லிருந்து 0% ஆகக் குறையும்.
  • ரயில்வே, கப்பல் தயாரிப்புகள் மீதான வரி 7% லிருந்து 0% ஆகக் குறையும்.

நாடு முழுவதும் நேற்று 77-வது சுதந்திர தினம் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக ஐரோப்பிய ஆணைய தலைவர் ஊர்சுலா வாண்டர்லியன் கலந்துகொண்டார்.

இந்நிலையில், இந்தியா மற்றும் 27 நாடுகளை உள்ளடக்கிய ஐரோப்பிய ஒன்றியம் இடையே தடையற்ற வர்த்தக் ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது.

தொழிலாளர் அதிகம் ஈடுபடும் துறைகள் போன்ற துணி, காலணி, அதேபோல் கார்கள் மற்றும் மதுபானங்கள் மீதான இறக்குமதி வரி குறைப்புகளுக்கு இந்த ஒப்பந்தம் வழிவகுக்கும். இந்த தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் 2027 முதல் அமலுக்கு வருகிறது.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு ஏற்றுமதி ஆகும் பெரும்பாலான இந்திய பொருட்கள் மீதான வரிகள் முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளதால் இந்தியா பெரும் நன்மைகள்:

1. மீன் போன்ற கடல்சார் பொருட்கள் மீதான வரி 26% லிருந்து 0% ஆகக் குறையும்.

2. காலணிகள் மீதான வரி 17% லிருந்து 0% ஆகக் குறையும்.

3. ரசாயனப் பொருட்கள் மீதான வரி 12.8% லிருந்து 0% ஆகக் குறையும்.

4. ஜவுளி மற்றும் ஆடைகள் மீதான வரி 12% லிருந்து 0% ஆகக் குறையும்.

5. நுகர்வோர் பொருட்கள் மீதான வரி 10.5% லிருந்து 0% ஆகக் குறையும்.

6. அடிப்படை உலோகங்கள் மீதான வரி 10% லிருந்து 0% ஆகக் குறையும்.

7. ரயில்வே, கப்பல் தயாரிப்புகள் மீதான வரி 7% லிருந்து 0% ஆகக் குறையும்.

8. பொம்மைகள் மற்றும் விளையாட்டுப் பொருட்கள் மீதான வரி 4.7% லிருந்து 0% ஆகக் குறையும்.

9. ரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் மீதான வரி 4%லிருந்து 0% ஆகக் குறையும்.

Tags:    

Similar News